Saturday, March 28, 2015

பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி முகாம்.



பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி முகாம்

அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், ஏப்., முதல் பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம் நடக்கிறது, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின்  மூலம், அனைத்து மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கல்லூரிகளில் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் செயல் படுத்துப் பட்டு வருகிறது. இத்திட்டம், கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், 2010  முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம், கிராம்ப்புரங்களில்  பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள, தொழில்நுட்பக் கல்வி பெற முடியாத பெண்களுக்கு, இலவசமாக தொழில் நுட்பப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், விவசாயம் சார்ந்த சேவைப் பணிகளும் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

அவ்வகையில், அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஏப்., மாதம் முதல் மெஷின் எம்ப்ராய்டரி, ஆரி ஒர்க் மற்றும்  அழகுக் கலைப் பயிற்சி ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது.

பி.ஆர்.எஸ்,, கவலர் பயிற்சி பள்ளி விரிவாக்க மையம், வடவள்ளி விரிவாக்க மையம், கரும்புக்கடை, பச்சாபாளையம் ஆகிய பகுதிகளில் தையல் கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சியில் எழத, படிக்கத் தெரிந்த பெண்கள் சேர்ந்து கொள்ளலாம்.
பயிற்சியின் முடிவில் மத்திய அரசின்  சான்றிதழ வழங்கப்படும். 

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியை நேரில் அணுகலாம். மேலும் 99440 28545, 99523 44814 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கல்லூரி முதல்வர் கவுசிய ஜெபீன் தெரிவித்தார்.

நன்றி தினமலர் நாள் 28-3-2015.

Monday, March 16, 2015

மசாலா பொடிகள், ஊறகாய் தயாரிக்க 2 நாள் பயிற்சி.



மசாலா பொடிகள், ஊறகாய் தயாரிக்க 2 நாள் பயிற்சி.

மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்க, வேளாண் பல்கலையில் இரு நாள் பயிற்சி வரும், 25 ல் துவங்குகிறது.

தொழில் துவங்க, ஆர்வம் உள்ளவர்களுக்கு, கோவை, வேளாண் பல்கலையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், இந்த மாதத்திற்கான பயிற்சியாக, 'மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி' வரும், 25 ல் துவங்குகிறது. மசாலா பொடிகள், தயார் நிலை பேஸ்ட், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்திரிக்காய் மற்றும் வெங்காய ஊறுகாய் தயாரிக்க பயிற்சி தரப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் 1500 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் வந்து பெயர் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சி கட்டணத்தை  ' பேராசிரியர் மற்றும் தலைவர், ஆறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை'  என்ற பெரில் 'டிடி'  எடுத்து வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராச்சி நிலையம், வேளாண் பல்கலை, கோவை-3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422-6611340, 6611268 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி தினமலர் தேதி; 17-03-2015.

-----------------------------------------------------------------(தொடரும்.)

Sunday, March 8, 2015

உழவர் உறுதுணை மையம் திறப்பு.



வேளாண் தொழில்நுட்பம் அறிய 
உழவர் உறுதுணை மையம் திறப்பு.

வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் எளிதில் பெற, பல்கலை வளாகத்தில், 'உழவர் உறுதுணை மையம்'  அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை விவாக்கக்கல்வி இயக்கத்தின்,, ஒரு அங்கமாக உழவர் உறுதுணை மையம் துவக்கப்பட்டுள்ளது. இம்மையம் ஒற்றைச் சாளர முறையில், வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களை உழவர்கள் பெற, வழிவகை செப்பப்பட்டுள்ளது.

மண மரிசோதனை ஆய்வகம், பூச்சி மற்றம் நோய் பரிசோதனை ஆய்வகம், உழவர்கள் - விஞ்ஞானிகள் கலந்த்துரையாடல், வேளாண் இடு பொருள் விற்பனை பிரிவு, தொழில்நுட்ப கருத்துக்காட்சி உள்ளிட்ட முக்கிய வேளாண் சார்ந்த சேவைகள், விவசாயிகளுக்காக செயல்பட உள்ளது. இம்மையத்தை விவசாயிகள் அணுகி, தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
மண் பரிசோதன் ஆய்வக்கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கார அமிலநிலை, உழவர் நிலை, மண்ணின் கட்டமைப்பு, தழை, மணி மற்றும்  சாம்பல் சத்து பற்றி அறிய ஒரு மண் மாதிரிக்கு கட்டணமாக, 100 ரூபாயும், அங்க்கரிம்ம் அறிய, 75 ரூபாயும், நுண்ணைட்டங்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு பற்றி அறிய, 200 ரூபாய் கட்டணமும் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விபரங்கள் அறிய, உழவர் உறுதுணை மையம், 0422 - 6611219 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி தினமலர் நாள் =08-03-2015.

---------------------------------------------(தொடரும்)