தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் சவுத் இந்தியன் ஹார்டிகல்ச்சுரல் சங்கமும் இணைந்து நடத்தும் தேசிய மூலிகை கருத்தரங்கு.
தேதி : 24,25, 26 செப்டம்பர் 2010 காலை 9.00 மணி.
இடம் :அண்ணா கலையரங்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.
வணிக ரீதியாக மருத்துவப்பயிர்களை தொடர்ந்து சாகுபடி செய்ய கையாளவேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்த ஆய்வரங்கம்.
பதிவு கட்டணம் ரூபாய் ஐநூறு மட்டும் செலுத்தி இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளவும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
முனைவர் கெ.இராஜாமணி , பிஎச்டி., பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், மருத்துவப்பயிர் மற்றும் மணமூட்டும் பயிர்த்துறை, தாவரவியல் பூங்கா, கோவை - 641 003. போன்- 0422-6611365.
மணல் கலந்த நிலம் பயிரிட ஏற்றது. எள் எண்ணெய்
வித்துப் பயிராகும். குளிர் காலங்களில் நவம்பர் - டிசம்பர்
மாதங்களிலும், கோடையில்மார்ச் முதல் ஜூன் வரையிலும்
எள் பயிரிடலாம். எள் குறுகிய காலத்தில் குறைந்த செலவில்
அதிக பாசன வசதி இல்லாமல் வறட்சியையும் தாங்கிக்
கொண்டு வளரக்கூடியது. மானாவாரி சாகுபடிக்கு டி.எம்.வி.3
மற்றும் டி.எம்.வி.5 ஆகிய ரகங்கள் ஏற்றவை. கடைசி
உழவில் ஹெக்டருக்கு 12.5 டன் இயற்கை எருவும் 50
கிலோ யூரியாவும், 78 கிலோசூப்பர் பாஸ்பேட் மற்றும்
23 கிலோ பொட்டாஷ் உரமும் கலந்து இடவேண்டும்.
ஹெக்டேருக்கு 22.5-22.5-22.5 கிலோ என்ற அடிப்படையில்
முறையேதழை, மணி, சாம்பல் சத்துக்களை கலந்து இட
வேண்டும். மானாவாரிநிலங்களில் எள் பயிரிடும்போது
ஒரு சதுர மீட்டர் பரப்பில் 11 செடிகள் இருத்தல் வேண்டும்.
டி.எம்.வி.3, டி.எம்.வி.4, டி.எம்.வி.5, டி.எம்.வி.6, ஆகிய ரகங்கள்
இறைவையில் பயிரிட ஏற்றவை. எல்லாப் பட்டத்திலும்
பயிரிட டி.எம்.வி.3எள் ரகம் ஏற்றது. இந்த ரகம் எல்லாப்
பட்டங்களிலும் இறைவையாகவும் மானாவாரியாகவும்
பயிரிட ஏற்றது. இதனை பின் பருவத்தில் நவம்பர்-
டிசம்பர் மாதங்களிலும் கோடையிலும் பயிர் செய்யலாம்.
கோடையில் மார்ச் முதல் ஜூன் எள் பயிரிடலாம். ஒரு
ஹெக்டர் பரப்பில் எள் பயிரிட 5 கிலோ விதை தேவை.
டி.எம்.வி.6 ரகத்தில் 54.2 சதம் எண்ணெய் உள்ளது. இதுவே
மிக அதிக அளவாகும். டி.எம்.வி.4 மற்றும் டி.எம்.வி.6 ரகங்கள்
குட்டையானவை. டி.எம்.வி.4 ரக எள் அதிக மகசூல்
கொடுக்கக்கூடிய ரகமாகும்.
விதைப்பதற்கு ஒருநாள் முன்னதாக ஒரு கிலோ விதைக்கு
2 கிராம் வீரம்திரம் அல்லது காப்டான் ஆகிய ஏதாவது ஒரு
மருந்துடன் கலந்து வைத்திருந்து மறுநாள் விதைக்க
வேண்டும். எள்ளுக்கு விதை நேர்த்தி செய்வதால்
தூரழுகல் நோயிலிருந்து பயிர் பாதுகாகாக்படுகிறது.
பாத்திகள் 10 சதுர மீட்டர் முதல் 20 சதுர மீட்டர் வரை
பரப்பு கொண்டவையாக அமைக்கப்படவேண்டும்.
ஹெக்டருக்கு பன்னிரண்டரை டன் அல்லது
25 வண்டி கம்போஸ்ட் எரு கடைசி உழவில் அடியுரமாக
இடவேண்டும்.மண் பரிசோதனை செய்து உரமிடுதல்
சிறந்த முறையாகும். இது சிக்கனமானதும் ஆகும். மண்
பரிசோதனை செய்யாவிடில், ஹெக்டருக்கு 35 கிலோ
தழை ச்சத்தும் இருபத்திரண்டரை கிலோ சாம்பல் சத்தும்
கிடைத்திட யூரியா77 கிலோவும் சூப்பர் பாஸ்பேட் 140
கிலோவும் மூரியேட் ஆப்பொட்டாசுமுப்பத்தேழரை
கிலோவும் கலந்து இடவேண்டும்.
அடி உரம் இட்டவுடன், ஹெக்டருக்கு5 கிலோ மாங்கனீசு
சல்பேட் என்னும்நுண் சத்தை இடவேண்டும். இத்துடன்
43 கிலோ மணல் கலந்து விதைப்பதற்கு முன்பு தூவ
வேண்டும். இதனால் எண்ணெய் சத்து அதிகரித்த் அதிக
மகசூல் கிடைக்கிறது. நுண் சத்து உரம் இட்டவுடன் எள்
விதைகளைவரிசைக்கு வரிசை30 செ.மீ. இருக்குமாறு
விதையுடன் நான்கு பங்குமணல் கலந்து விதைக்க
வேண்டும்.
விதைத்த 15ம் நாள் ஒரு முறையும், 28 ம் நாள் ஒரு
முறையும் பயிரைக்கலைத்து விட வேண்டும். எள்
விதைத்த 35 வது நாளில் பூக்க ஆரம்பிக்கும். எள் பயிர்
பூக்கும் தருணத்தில் நீர் தேங்கினாலும், பூக்கள் உதிர்ந்து
காய்கள்காய்ப்பதில்லை. எள் காய்கள் முற்றியதற்கு
அறிகுறியாக செடியின் அடிபாகத்தில் கால்பங்கு
இலைகளாவது உதிர்ந்திருக்கும். தண்டு மஞ்சள்
நிறமடையும்.காய்களும் பாதி மஞ்சளாக இருக்கும்.
எள் பயிரில் பூ விலை நோய் ஒரு வைரஸ் கிருமியால்
உண்டாகிறது. இந்நோய் தத்துப் பூச்சிகளால் பரவுகிறது.
தத்துப் பூச்சிகள் வைரஸ் தாக்கப்பட்ட செடிகளில் காற்றை
உறிஞ்சி, பின்புமற்ற செடிகளைத் தாக்கும் போது
இந்நோயையும் பரப்புகின்றன. எனவே வைரஸ் நோயைக்
கட்டுப்படுத்துவதற்கு, முதலில் அதனைப் பரப்பிடும்
தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு
ஊடுருவிப் பாயும்மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
எள் விதைத்த 35 ம் நாள் ஒரு முறையும் 50 ம் நாள்
மறுமுறையும் ஹெக்டருக்கு 500 கிராம் கரையும்
கந்தகத்தையும் 500 லிட்டர் நீரில் கரைத்து கைத்
தெளிப்பான் மூல்ம இலைகள் மீது நன்கு படியும்படி
தெளிக்க வேண்டும்.
இறைவையில் ஒரு ஹெக்டரில் உயர்ந்த அளவு 1000
முதல் 1200 கிலோமகசூல் கிடைக்கும். மானவாரியாகப்
பயிரிட்டால் இதில் பாதி அளவுமகசூல்தான் கிடைக்கும்.
விதை எள்ளை நன்றாக வெய்யிலில் உலர்ந்த வேண்டும்.
விதையில்உள்ள கல், தூசி போன்றவைகளை அப்புறப்படுத்த
வேண்டும்.விதைக்காக உபயோகப்படுத்தும் எள்ளுக்கு
10% தூள் கலந்து பிறகுதெளிக்க வேண்டும். எள் பயிரிட்ட
நிலத்திலிருந்து அதிக சத்துக்களை எடுத்துக் கொள்ளும்.
எனவே, எள் பயிருக்கு உரத்தை முறையாக
இட வேண்டும்.
'பூச்சிக் கொல்லிகளையும், மரபணு மாற்று விதைகளையும் பயன் படுத்தியதால், விளைநிலங்கள் பாழ்... இதைத் தவிர்க்க, உயர் தன்மையை காக்கும் இயற்கை விவசாயம் அவசியம்...'
இந்தக் குறல்கள், நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டு இருக் கின்றன.
பூமியில் ஒவ்வொரு இரவும், ஏரத்தாழ பல லட்சம் பேர், உணவின்றி பசித்த வயிறுடன் உறங்குகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உணவு உற்பத்தி பெருக வில்லை. விவசாயத்தில் நவீன தன்மையைப் பயன்படுத்தாததே இதற்கு காரணம்.
விவசாயத்தில் நவீன நன்மையை, பூச்சிக்கொல்லிகளை, உரங்களை இயந்திரங்களை, மரபணு மாற்று விதைகளை பயன் படுத்தா விட்டால் உணவுப்பஞ்சம் வந்து விடும். மற்ற துறைகள் நவீனத்திற்குள் நுழைந்து விட்ட நிலையில், விவசாயமும், இந்த, 'நவீன ஆடை'யை அணிந்தால் தான் உயிர் பெறும், மக்கள் உயிர் வாழ வழி தரும். என்ற கருத்து, சாதாரண மனிதனையும் யோசிக்க வைக்க க்கூடியது. நவீனத்திற்கு மாறினால், உற்பத்தி பெருகும் என்ற, 'லாஜிக்' தான் இதற்கு காரணம்.
ஆனால், மற்ற தொழில் துறையும், விவசாயமும் ஒன்றா என்ற ஒப்பீடு எழுமானால், அது இந்த, 'லாஜிக்'கை தகர்க்கக் கூடியதாக இருக்கும். உணவுப் பஞ்சம் வந்து விடும் இன்பது கட்டுக்கதை என ஆதாரங்களை முன்வைத்து சண்டையிடுகிறது பிரான்சை சேர்ந்து, பிரான்சஸ் மோரோலேப்பி என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழு.
அந்தக் குழுவின் அறிக்கை இப்படி சொல்கிறது...
* உலகில் வாழும் அனைத்து மக்களின் தேவைக்கும் உரிய தானியங்கள் காய்கறிகள் விளைகின்றன. தற்போதைய மொத்த விளைச்சலை, அப்படியே தலைக்கு இவ்வளவு என்று பிறித்தால், ஒவ்வொருவருக்கும் தினசரி 1.25 கிலோ தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், அரைக் கிலோ காய்கறி மற்றும் பழங்கள், கால் கிலோ பால், மாமிசம், முட்டை கிடைக்கும்.
* இவற்றின் மூலம், ஒவ்வொருவரும் 3,500 கலோரியை பெற முடியும். ஆனால், நன்கு வளர்ந்திருக்கும் ஒரு மனிதனின் தேவை 2,100 கலோரியில் இருந்து 2,500 கலோரி உணவை உட்கொண்டால், ஒவ்வொருவரும் உடல் பருமன் நோயில் சிக்கிக் கொள்ள வேண்டி வரும்.
எங்கே பிழை இருக்கிறது என யோசிக்க வைக்கிறது இந்த குழுவின் அறிக்கை. உலக மக்களிடையே பகிர்தலில் உள்ள முரண்பாடு தான், பஞ்சத்திற்கும், பட்டினிக்கும் காரணமாக அமைகிறது.
அமெரிக்க சிறுவனுக்கும்,எத்தியோப்பிய சிறுவனுக்கும் பாராபச்சமின்றி சமமாய் விளைவித்து தருகிறாள் பூமித்தாய்.
ஆனால், ஒரு புறம் வீசி எறியப்படும், பீட்சாக்களும், மறுபுறம் ரொட்டித்துண்டுகளுக்கு ஏங்கும் நிலையும் தொடர நாம் தான் காரணம் என்பது உறுதிப்படுத்திகிறது.
உணவுப் பஞ்சத்தை தவிர்க்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை களை பயன் படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது அடுத்த வாதமாக உள்ளது. முதல் வாதமே தோற்றுப் போன நிலையில், அடுத்த வாதமும் இப்படி நொறுங்கிப் போகிறது.
'புழு மற்றும் பூச்சிகளிலிருந்து பயிரைக் காப்பாற்றுவதற்காகவே, மர பணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. விளைச்சலை அதிகப் படுத்தும் தந்திரம் எதையும் செய்யவில்லையென, மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் விதை நிறுவனங்கள் தெளிவுபடுத்தி யுள்ளன. அப்படியிருக்க, உலகப் பசியைப் போக்க மரபணு மாற்று விதைகள் எப்படி உதவப்போகிறது?' என்ற இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கம் எதிரொலிக்கிறது.
இந்த மரபணு மாற்று விதைகளை நம்பாமல், இயற்கை விவசாயத்தில் சாதனைக் கொடி நாட்டியவர்களின் பட்டியலும் பிரமிக்க வைக்கிறது.
* பொலிவியா நாட்டில், ஒரு எக்டருக்கு 4 டன்னாக இருந்த உருளைக் கிழங்கு உற்பத்தி, இயற்கை விவசாயத்தால் 15 டன்னாக உயர்ந்தது.
* கென்யா மக்காச்சோள விளைச்சல், 2.25 டன்னிலிருந்து 9 டன்னாக உயர்ந்தது.
* பாக்கிஸ்தானில் மாம்பழ விளைச்சல், 7.5 டன்னலருந்து 22 டன்னாக உயர்ந்தது.
* ஆந்திராவில் நாகரத்தின நாயுடு என்பவர் ஒற்றை நாத்து இயற்கை விவசாயம் மூலம், ஏக்கருக்கு 6,900 கிலோ நெல் விளைவித்து, சாதனை படைத்துள்ளார்.
இவையனைத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உழவு மற்றும் உணவு அமைப்பின் ஆய்வு தகவல்.
சாதாரண பொதுமக்ககளுக்கு, இந்த விவாதங்களின் மேல் பெரிதாய் அக்கறை இருந்ததில்லை. ஆனால், அவர்களையும் இந்த விவகாரம் சென்றடைய காரணமாய் அமைந்து விட்டது பி.டி.கத்தரிக்காய். பார்லிமெணிடில் துவங்கி, தமிழக சட்டசபை வரை இந்த விவகாரம் பேசப்பட்டு, 'கத்தரிக்காய் முற்றினால், கடைக்கு வந்து தானே ஆகணும்'. என்பது போல, தெருவோர டீக்கடை வரை இந்த விவகாரம் அலசப்படும் பொருளாகி விட்டது.
பி.டி. கத்தரிக்காய் குறித்து கருத்து கேட்பதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய் அமைச்சர் ஜெயராம் ரமேசுக்கு விவசாயிகளிடம் கிடைத்த, 'வரவேற்பு' ஆள்பவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனால், கொஞ்ச நாளைக்கு இந்த விவகாரத்தை ஒத்திப் போடுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
பி.டி.கத்தரிக்காயை முழுமையாக தடை செய்ய வில்லை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவில், இறுதி முடிவெடுப்போம்' என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கத்தரிக்காய் விவகாரம் இத்தோடு முடிந்து விடப் போவதில்லை எனத் தெரிகிறது.
மத்திய அமைச்சரின் வார்த்தைகளையே தமிழக அரசும் ஒப்பிக்கிறது.'பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி கொடுக்க வில்லை' என்று, தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஒரு புறம் சொன்னாலும், 'பி.டி., கத்தரிக்காயெ விளைவித்து சோதனை நடத்தியதில், எந்த விதமான பக்கவிளைவுகளும் இல்லை' என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சான்றளித்துள்ளதையும், சட்டசபையில் அமைச்சர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
இதை விட ஒருபடி மேலாக, தமிழ்நாடு வேளைண்மைப் பல்கலைகழுமே, தனியாக மரபணு மாற்று விதைகளைத் தயாரித்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் இன்னொரு முக்கிய மான விஷயத்தையும் பதிவு செய்தால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைவர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்பலைக்கும், விவசாயிகளுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. பல கோடி ரூபாய் அரசின் பணத்தைக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் பலன் விவசாயிகளுக்கு கிடைப்பதே இல்லை.
ஒவ்வொரு ஆய்வறிக்கையும், சில லட்சங்களை விழுங்கி விட்டு, ஆவணங்களாகி, அதன் மூலம் குறிப்பிட்ட பேரா சிரியரின் பெயருக்குப் பின்னால் சில எழுத்துக்களை சேர்க்க மட்டுமே உதவி வருகிறது.
மேற்கத்திய நாட்டின் விவசாயிகளும் சொல்லும் விசயங்களே பல்கலைக்கு பிரதானமாக உள்ளது. அவர்கள் மட்டுமே மேதாவிகள். அறிவாளிகள் என்ற உளுத்துப்போன சிந்தனை, பல்கலைக்கழகம் முழுதும் பரவி இருக்கிறது.
பாட்டன் காலம் முதல் நாங்கள் பயன்படுத்திய விவசாய முறைகளை அறிந்து கொள்வதிலோ, அவற்றின் நன்மை களையோ பல்கலை என்றும் எற்றுக் கொண்டதில்லை.
அவர்களை பொறுத்தவரை, பல்கலையிடம் இருந்து விவசாயிகள் கற்றால் போதும் என்ற ஒரு வழி சிந்தனை தான். விவசாயிகளுக்கான பல்கலைக் கழகத்தின் முதல் எதிரியே, இயற்கைவிவசாயிகள் தான் என்ற, 'கோரஸ்' கருத்து, நான் சந்தித்த பல விவசாயிகளிடமும் எதிரொலித்தது.
நமது பூமி பரப்பில், 2 சதவிகதம் மட்டுமே விளைநிலம். விளைச்சலை முடிவு செய்வது, நிலத்தின் உயிரோட்ட முள்ள மேல் மண் பகுதியே. இந்த மண்ணை மாசு படுத்தி, மலடாக்கும் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக்கூடாது.
அமெரிக்காவில் இயந்திரமயமான, ரசாயன விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவும், 6 கிலோ மண்ணின் உயிர்தன்மையை அழித்து விளைகிறது. அமெரிக்காவை பின்பற்றும் மூன்றாம் உலக நாடுகளிலோ, 12 கிலோ மண்ணின் உயிர் தன்மையை அழித்து, ஒரு கிலோ உணவு பெறப்படுகிறது.
முழுமையான நவீனத்திற்குள், இந்திய விவசாயம் செல்லும் முன்பே ஏகப்பட்ட குளறுபடிகள். கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு அரசு வாரி வழங்கி னாலும், விவசாயிகள் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
அப்படி இருக்கையில், மரபணு மாற்று விதைகளை அடிப்படை யாகக் கொண்ட மேற்கத்திய விவசாய முறையில், இந்திய விவசாயம் அமையுமானால், அது ஏற்படுத்தும் விளைவுகளை கற்பனைக்குள் கொண்டு வர முடியவில்லை.
விளைநிலத்தோடு விளையாடும் முன், உலகமும், அரசும் அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும், மேதாவிகளும் யோசிக்கட்டும்.
சிந்தனை எழுதியவர் திரு.எஸ்.கோவிந்தராஜ்-பத்திரிக்கையாளர்.
தசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால் பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது. இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
தசகவ்யா தயாரிக்கும் முறை.
தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய் களையும்விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக் கொள்ளவேண்டும். அவைகளானவை.
ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg.
ஊமத்தை (Datyra metal) 1 kg.
நொச்சி (Vetex negundo) 1 kg.
வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg.
வேப்பிலை (Azadirachta indica) 1 kg.
மேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும் 1 : 1.5 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக் தொட்டியில் ஊரவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.தயாரித்த சாறுகளை பஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து 25 நாட்களிக்கு வைத்திருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை கிளறிவிடவேண்டும். 25 நாட் களுக்குப் பிறகு 3 சதவீதக்கரைசலைத் தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.
பயன்கள்
1. தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.
2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி, சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது.
3. தசகவ்ய தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய தொழில் நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த, இயற்கை வழிச்சாகுபடியாளர்களின் சீரிய செயல் முறைகளின் அடிப்படையில், கீழ் காணும் மூலப்பொருட் கள் மற்றும் உற்பத்தி முறைகளைக் கொண்டு பஞ்சகவ்யா தயாரிக்கப்படுகிறது.
20 லிட்டர்பஞ்சகவ்யாதயாரிக்கதேவையானபொருட்கள்.
பசுஞ்சாணம் ------------------------- 5.0 கிலோ
பசுவின் கோமையம் ------------------ 5.0 லி
பசும்பால் ---------------------------- 2.0 லி
தயிர் -------------------------------- 2.0 லி
நெய் -------------------------------- 1.0 லி
கரும்புச்சாறு ------------------------- 3.0 லி
தென்னை இளநீர் --------------------- 3.0 லி
வாழைப்பழம் ------------------------ 2.0 கிலோ
பசுஞ்சாணிஐந்து கிலோவுடன் பசு மாட்டு நெய் ஒரு லிட்டரைக் கலந்து, பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் நான்கு நாட்கள் வைத்து தினம் காலை மாலை இரு முறை இதைப் பிசைந்து விட வேண்டும். ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண் பானை அல்லது சிமெண்டுத் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி யில் போட்டு நன்கு கரைத்து கலக்கி, கம்பி வலையால் அல்லது நைலானாலான கொசுவலையை கொண்டு மூடி நிழலில் வைக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும். இது பிராணவாயுவை பயன் படுத்தி வாழும் நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது. இந்த முறையில் முப்பது நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.
பஞ்சகவ்யாவின் இயல்வேதிப் பண்புகளை ஆராய்ததில் அதில் பயிருக்குத்தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் இருப்பது கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யாவில் கரும்புச்சாறு வெல்லம் ஆகியவை ஒரு பாகமாக சேர்ப்பதால் அது அமிலதன்மையுடன் உள்ளது. எனவே நொதிக்கும் நுண்ணுயிர்களான ஈஸ்ட் மற்றும் லாக்டோபேசில்லஸ் ஆகியவையும் பஞ்சகவயாவில் அதிகம் காணப்படு கின்றன. லாக்டோபேசில்லஸானது அங்கக அமிலங் கள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பிற நோய் எதிர்ப்புப் பொருடகளையும் உற்பத்தி செய்கிறது. இப்பொருட்கள் நோய்க் கிருமிகளை எதிருக்கும் திறன் பெற்றதோடு உயிர் வளர்ச்சி ஊக்கிகளாகவும் செயல் படுகிறது. இதோடு ஐசோபிரின் கூட்டுப் பொருட்களும் பஞ்சகவ்யாவில் உள்ளன.
ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை உற்பத்தி செய்ய ஆகும் செலவு சுமார் 35 முதல் 40 ரூபாய் ஆகும். மேலும் விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளிலிருந்து கிடைக்கும் பொருட்களிலிருந்து மிகப் பெரிய அளவில் பஞ்சகவ்யாவை தயாரித்து பயன் பெற முடியும். பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகவ்யா தெளிக்கும் முறையானது வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்க ருக்கு பயிர்களுக்கு 3.5 லிடர்ரும், மரங்களுக்கு 4.7 லிட்டரும் ஒரு தடவை தெளிப்பதற்கு தேவைப்படும் பஞ்ணகவ்யாவை 3 சதவீதக் கரைசலாக (1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பச்ணகவ்யா) கலந்து 15-30 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்குத் தெளிக்கலாம். பஞ்சகவ்யாவானது ஏராளமான நுண்ணூட்ட சத்துக் களையும் வளர்ச்சியூக்கிகளையும், நுண்ணுயிர்களையும் மற்றும் அங்கக தனிமங்களையும் கொண்டுள்ளது. இதுவே தாவரங்களின் அதிகப்படியான வளர்ச்சியையும் மகசுலையும் கொடுப்பது மட்டுமல்லாமல் பயர்களையும், மரங்களையும், பூச்சி மற்றும் நோய்களிடமிருந்து பாது காத்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத, பூச்சி மற்றும் நோய் கொல்லியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் பெரும் பங்கு வகிக்கிறது.
கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் (IFGTB)" அக்டோபர் மாதம் 8,9 தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் தரமான மரக்கன்று உற்பத்தியில் 'பஞ்சகவ்யா' பற்றி திரு. பன்னீர் செல்வம் அளித்த விளக்கம் பின்வருமாறு- ந்மது முன்னோர்களின் அனுபவ அறிவானது மனித இனம் மட்டு மின்றி விலங்கு மற்றும் தாவர இனத்தின் நலம் காக்கும் அறிவுப் பெட்டகமாக திகழ்கிறது. விருக்சாயுர்வேதா என்பது அத்தகைய அனுபவ அறிவு குறிப்புகளின் ஓர் தொகுப்பாகும். இது இயற்கை சக்திகளான பஞ்சபூத த்தோடு (நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம்) இயைந்த விவசாய் மூறைகளை வலியுறுத்துகின்றது. பசுமை புரட்சி என்ற பெயரில் உணவு தானிய உற்பத்தியை பெருக்க அளவற்ற இரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தியதன் விளைவாக இன்று மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகளைக்கும், பக்கவிளைவு களுக்கும் ஆளாகி இன்னலுருகிறோம். இனி பக்கவிளைவுகள் இன்றி நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று நலமாக வாழ இயற்கை உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்துவது ஒன்றே சிறந்த வழியாகும். இதில் பஞ்சகவ்யா மற்றும் தசகவ்யா முக்கியமான பங்கினை வகிக்கின்றன. 'பஞ்ச' என்றால் ஐந்து என்று பொருள்படும். பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இதற்கு 'பஞ்சகவ்யா' என்று பெயர் வந்தது. கோயில்களில் பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகின்ற பஞ்சாமிர்தம்தான் பஞ்சகவ்யா இருவானதற்கு முன்னோடியாகும், முதலில் பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றைக்கொண்டு பஞ்சகல்யா தயார் செய்யப்பட்டது. பின்னர் அதனுடன் கரும்புச்சாறு அல்லது வெல்லம், இளநீர், வாழைப்பழம் மற்றும் கள் போன்றவை களும் சேர்க்கப்பட்டு நொதித்தல் தன்மையை அதிகப்படுத்திய தால் தற்பொழுது பஞ்சகவ்யா ஒரு அங்கக சக்தியாகத் திகழ்கின்றது. பஞ்சகவ்யாவின் மூலப்பொருட்கள். பஞ்சகவ்யாவானது ஒரு சிறந்த இயற்கை உரமாக மட்டுமின்றி பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர்த்திரவமாகவும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்பாற்றலை ஊக்குவிக்கும் காரணியாகவும் விளங்குகிறது. பசுவின் கோமையத்தில் அதிக அளவில் சோடியம் குளோரைடு, கால்சியம் சல்பேட், மக்னீ சியம் சல்பேட், பொட்டாசியம் ஹிப்யூரேட் போன்ற தாதுக் களும் அடங்கி உள்ளன. பசுஞ்சாணத்தில் 82% நீரும், 18% திடப்பொருளும் அடங்கியுள்ளது. பசும்பால், சாருண்ணி பாக்டீரியாவிற்கு சிறந்த ஊடகமாக உள்ளதோடு நச்சுயிரிக்கு எதிர் கொல்லியாகவும் விளங்குகின்றது. பாலிலுள்ள புரதம் கொழுப்பு, கார்போஹைட்ரேட்,அமினோ அமிலம், கால்சியம் ஹைட்ரஜன், லாக்டிக் அமிலம் மற்றும் லாக்டோபேசில்லஸ் பேக்டீரியா போன்றவை பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. பசு நெய்யானது பயிர் வளர்ச்சியை மேம்படுத்த பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதில் வைட்டமின் ஏ பி கால்சியம் மற்றும் கொழுப்புப் பொருள்கள் அடங்கியுள்ளன. மேலும் வெட்டுக்காயங்களில் தொற்று நோயைத் தடுக்கும் குளுகோசைடும் இதில் அடங்கியுள்ளது. பசுமாட்டுத்தயிரில் அதிக அளவில் நொதித்தலுக்குக் காரணமான நுண்ணுயிர்களை ஊக்குவிப்பதன் மூலமாக நோதித்தலுக்கு உதவுகின்றது. தென்னை இளநீரானது கைனட்டினிற்கு விலை மலிவான மாற்றாக செயல்படுவதுடன், நெல்லில் பச்சையத்தை அதிகப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் (IFGTB)" கடந்த மாதம் 8,9 தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் இரண்டாவது நாள் ஒரு பண்ணைச் சுற்றுலா ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரியில் உள்ள ஸ்ரீ முருகவேல் வேளாண்மைப் பண்ணைக்கு சுமார் 35 விவசாயிகள், விஞ்ஞானிகளுடன் கொங்கு என்.கொளந்தசாமி அழைத்துச் சென்றார்.
செவாலியர், டாக்டர் கொங்கு என்.கொளந்தசாமி பல வெகுமதிகள் பெற்றவர் 9443006666 மிக்க ஆர்வம் உள்ளவர். அவரது உரவினர் குமாரசாமி மற்றும் பழனிசாமி இருவரும் இவருக்குத் துணையாக உள்ளார்கள்.
பண்ணை ஆரம்ப வருடம் 1993, பண்ணையின் பரப்பளவு 230 ஏக்கர். தண்ணீர் பாசனம் ஏற்படுத்திய வருடம் 1998. பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு 160 ஏக்கர். ஆரம்ப கட்டத்தில் மஞ்ஞ்சள், மரவள்ளி, சோளம், வாழை, நெல், கரும்பு, ரோஸ்மேரி, பாம்ரோசா, சபேத்முசலி, கோசாப் பழம், பாகல், புடல், பூசனி, புகையிலை மற்றும் எள் ஆகியன பயிரிடப்பட்டன. திராச்சையும் நெல்லியும் நீண்டகாலப்பயிர்களாக இருந்தன.
பெரிய கொடிவேரி அணைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலத்தில் பம்பிங் செய்ய கட்டிடங்கள் அமைத்து 30 எச்.பி. உள்ள 5 சர்வீசுகள் பெற்றுள்ளார். அங்கிருந்து பண்ணைக்கு 12 அஙுகுல எ.சி.சி. பைப் மூலம் 2000 மீட்டர் ஒன்றும் 1250 மீட்டர் பைப் ஒன்றும் நிலத்தடியில் பதித்து பண்ணையில் உள்ள பெரிய நீச்சல் குளம் போன்ற தொட்டிக்குக் கொண்டுவந்து அதிலிருந்து தோட்டதுதிற்குப் பகிர்ந்தளிக்கிறார். மேலும் பண்ணைக்குள் 30 எச்.பி. ஒரு சர்வீசும் 10 எச்.பி. 5 சர்வீசும் அமைத்துள்ளார். எந்தக்காலத்திலும் தண்ணீருக்குப் பஞ்சமேயில்லை.
பயிர்கள் முக்கோண நடவுமுறை.
10'X 10' மலைவேம்பு 13 ஏக்கர்6000 கன்றுகள். 22 மாதங்கள் 13'X 13' மூங்கில் வல்காரீஸ் 5 ஏக்கர் 1400 கன்று. 18 மாதம் 15'X 15' மூங்கில் வல்காரீஸ் 8 ஏக்கர் 1600 கன்று. 6 மாதம் 5.5'X 5.5'யூகோலிப்டஸ்,லாரா.10 ஏக்கர் 16000 கன்று. 27 மாதம் 12'X 12' நாட்டு வாகை, பூவரசு 5 ஏக்கர் 800 கன்று. 18 மாதம் 8' X 8' மகாகணி, காயா. 2000 கன்று 14 மாதம் 5' பார் கரும்பு நிலத்தடி சொட்டு நீர். 22 ஏக்கர் 5' பார் கரும்பு சாதாரண முறைப்பாசனம்.10 ஏக்கர். ----------பாப்புலர் மரம் 30 கன்று 6 வருடம். ----------தென்னை. 3000 கன்றுகள் 105 வருடம். ----------தென்னை பதிமுகம் ஊடுபயிர்.800 கன்றுகள் 2 வருடம். ---------- சைமரூபா (சொர்கமரம்) 30 கன்று 6 வருடம். ---------- சந்தனம். 6 கன்று. 2 வருடம்.
பண்ணைமுழுதும் ஒறே பசுமையாக உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு மட்டும் கிச்சிடிசம்பா நெல் பயிரிட்டுள்ளார். சர்கரை ஆலையிலிருந்து உரம் டன் கணக்கில் வாங்கி மற்ற சாண உரங்களுடன் கலந்து நல்ல கலப்புரமாக மாற்றி இடுகிறார். எல்லா மரங்களுக்கும் சொட்டு நீர் பாசன முறைதான் பின்பற்றுகிறார். எல்லாமே வளமாக உள்ளன. தென்னையில் பதிமுகம் மரம் நட்டதால் பதிமுக முட்கள் உள்ளே செல்ல முடியாமல் தடையாக உள்ளன.