Wednesday, June 17, 2009

கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்.


ஒவ்வொரு மாதமும் 6 ந்தேதி துணை வன பாதுகாவலர் அலுவலகம், மரபியல் கோட்டம், பாரதிபார்க் ரோடு, கோவை 641043 வழாகத்திலும், 16 ந்தேதி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை 641003 தொழில்நுட்ப பூங்கா எண்-4 ன் வழாகத்திலும் தொடர்ந்து கருத்தரங்குகளை வனத்துறை மற்றும் விரிவாக்க கல்வி இயக்கம், த.நா.வே.ப. இவர்களுடன் இணைந்து நடத்தி வருகின்றது.

இந்த மாதம் 6 ந்தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து திரு எஸ்.கே. சண்முகசுந்தரம், ஐ.எப்.எஸ்., துணைவனப்பாதுகாவலர் அவர்கள் சந்தன மர சாகுபடி பற்றியும் அதன் சட்ட திட்டங்களைப் பற்றி விபரமாக விளக்கம் அளித்தார். சந்தன மரம் வெட்டும் போது 20 சதம் அரசுக்கும், 80 சதம் மர சொந்தக்காரருக்கும் அளிக்கப்படும். ஆனால் வரும் காலத்தில் சட்டங்கள் மேலும் தளரலாம். ஆஸ்திரேலியாவில் ஒரு சந்தன மரத்திற்கு நான்கு பக்கத்திலும் அகத்தி மரம் வளர்க்கிறார்கள். 13 ஆண்டுகளில் முதிர்வடையும் மரங்களை வளர்க்கிறார்கள். இது போன்று மேலும் பல தகவல்களைச் சொன்னார்.

அடுத்து திரு.ஏ.ஜொசப் ரெக்ஸின், பி.எஸ்சி., இயக்குனர் TIST Tree Planting India (P) Ltd., அவர்கள் கார்பன் வணிகம் பற்றி விளக்கமாகச் சொன்னார். பின் திரு. மு.அ.அப்பன், நிறுவனர் இயற்கை வாழ்வு மையம், குலசேகரப்பட்டினம், தூத்துக் குடி அவர்கள் ஆரோக்கிய வாழ்விற்கு ஏற்ற இயற்கை உணவு பற்றி சிறப்பான விளக்கம் அளித்தார். அவரே உதாரணமாக சமைக்காத உணவு மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். பின் சித்த மருத்துவர் திரு.திருமலைசாமி அவர்கள் ஓரிதழ் தாமரை பற்றி விளக்கம் அளித்து அதன் மருத்துவ குணங்களை எடுத்துறைத்தார். மதிய உணவு சமைக்காத உணவு வகைகள்.
அவுல், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், பேரிட்சை, தேங்காய், வெள்ளரி, கேரட் இயற்கை சூப் முதலியன மட்டும் கொடுக்கப் பட்டது.

பிற்பகல் வைத்தியர் நாதாநந்த சுவாமிகள் மூலிகைகள் எவ்வாறு வைத்தியத்தில் பயன் படுகின்றன என்று விளக்கங்கள் அளித்தார். பின் சித்த மருந்து தயாரிக்கும் தென் மாவட்ட அம்மையாரும் விளக்கத்துடன் மருந்துகளை விற்பனை செய்தார். அத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.

மூலிகை கருத்தரங்கு.
சென்ற 16-06-2009 அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விரிவாக்க கல்வி இயக்கம் உதவியுடன் இச்சங்கம் மூலிகை கருத்தரங்கு தொழில் நுட்ப பூங்கா எண்-4 ல் காலை பத்து மணிக்கு மேல் தொடங்கிற்று. இச்சங்க தலைவர் தேவராஜன் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இலவசமா ஏற்பாடு செய்திருந்த பண்ணைச் சுற்றுலா பாண்டிச்சேரி ஏரோவில் சென்று வந்தது (13,14, 15-6-2009) பற்றி அனுபவங்களைச் சொன்னார். அளவாக 20 பேர் மட்டுமே சென்று வந்தனர். பின் திரு.கணேசன், திருநெல்வேலி, மூலிகை ஏற்றுமதியாளர் அவர்கள் திருநெல்வேலி சென்னா, நித்தியகல்யணி, துளசி, சர்கரைத் துளசி, கண்வெளிக்கழங்கு, அஸ்வகந்தா, ஆர்கானிக் மஞ்சள் போன்றவைப் பற்றிக் கூறி அவை ஆர்கானிக்கில் விளைந்ததற்கான சான்றும் தேவை என்றார். ஒப்பந்த முறையில் சாகுபடிக்கு ஏற்றுக் கொள்வதாக க்கூறினார். பின் அதற்கு முனைவர் கே.இராஜாமணி பிஎச்டி, துறைத்தலைவர் வாசனை பயிர் மற்றும் மலைத்தோட்டத் துறை, TNAU., அவர்கள் அந்த மூலிகைகள் குறித்து விளக்கம் அளித்து, அதை விளைவிப்பது பற்றிக் கூறி, ஆர்கானிக் சான்று பெருவது பற்றிக் கூறினார். கே.ஸ்ரீதர்புதூர் அமுதம் இயற்கை உணவகம் அமைத்திருப்பது பற்றிக் கூறி அவர் இயற்கை சூப் அளித்தார். திருமதி கண்ணம்மாள் ஜெகதீசன் அவர்கள் அஸ்வகந்தா சூப் மற்றும் டீ கொடுத்தார். மதிய உணவுக்குப்பின் சுற்றுலா சென்றவர்கள் பயனடைந்ததைப் பற்றிக் கூறினார்கள். டாக்டர் சித்திரா அவர்கள் பல்கலைகழகத்தில் மூலிகைக் குடி நீர் தயார் செய்து வெற்றியடைந்தது பற்றிக் கூறினார். பதிமுகம் துண்டுப்பவுடர் .5 கிராம் திப்பிலி காய், வேர் பவுடர் .5 கிராம் ஒரு லிட்டர் குடி நீரில் அரை மணி நேரம் வைத்திருந்தால் நல்ல குடிநீர் தயார் என்று கூறினார் விலை மிகவும் குறைவு. பின் நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. இது 4 வது கருத்தாய்வுக் கூட்டம்.
-----------------------------------------------(தொடரும்)

Thursday, May 14, 2009

ஒரு இரங்கல் செய்தி.





எனது மனைவி சாரதாமணி 10-5-2009 அன்று மாலை 3-40 மணியளவில் இயற்கை எய்து விட்டாள் என்று வருத்தத்துடன் தெறிவித்துக் கொள்கிறேன். நன்றி.
உங்கள் அன்பன்
குப்புசமி.க.பொ.
கோவை-641037.
9487283644.

Thursday, April 23, 2009

தேசிய மருந்துப்பயிர்கள் வாரியம்.


கோவை மாவட்டத்தில் வன விரிவாக்க மையம் பல வருடங்களாக டி.சி.எப். அலுவகத்தில் பல விவசாயிகளுக்கு மூலிகை வளர்பது, விற்பனை செய்வது, வளர்ப்பு முறைகள் இடர்பாடுகள், சந்தைப்படுத்துதலில் சிக்கல்கள் பற்றி மாதா மாதம் விளக்கி வந்தது பின் ஜூன் 2006 ல் தான்
‘கோவைமாவட்ட மரம் மற்றும் மூலிகைவளர்ப்போர் சங்கம்’ என்று பதிவு செய்யப்பட்டது. அது தொடர்ந்து நடைபெற்று வரும் காலத்தில் சங்க உறுப்பினர்கள் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், கோவையில் பல பயிற்சிகள் பெற்றனர். பின் தேசிய மருந்துப் பயிர்கள் வாரியம், விரி
வாக்கக் கல்வி இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு பயன் பெரும் வகையில் கருத்தரங்கு பல்கலைக்கழக வழாகத்தில் நடத்த அனுமதியும் அளித்து உடன் இருந்து வழி காட்ட முன் வந்தனர். அதில் பெரும் பங்கு வகித்தவர்கள் இயக்குனர் டாக்டர் திரு வடிவேல் மற்றும் முனைவர் டாக்டர் திரு.ராஜாமணி அவர்களும் தான். அவர்களுடன் இணைந்து 16-3-2009 ல் இச்சங்கமும் பல விவசாயிகளை ஒன்று திரட்டி நல்லதொரு மூலிகைக் கருத்தரங்கு பொருட்காட்சி ஹால் எண். 4ல் ஒரு நாள் நடைபெற்றது. அதன் விபரம் வருமாறு-

தேசிய மருந்துப் பயிர்கள் வாரியம், மருந்துப் பயிர்கள் தகவல் மையம், சேர்ந்து விரிவாக்க கல்வி இயக்கம் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-641003 ல் பொருட்காட்சி வளாகம் ஹால் எண் 4 ல் முதல் தொடக்க க்கூட்டம் சிறிது கால தாமதமாகவே 11.30 மணிக்கு மேல் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு இயக்குனர் டாக்டர் திரு வடிவேல் அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் வரவேற்க வந்திருந்தார். ஏ.வி.பி. பத்ம ஸ்ரீ கிருஷ்ணகுமார் சிறப்புறையாற்ற வந்திருந்தார். கோவை மாவட்ட மூலிகை வளர்ப்போர் சங்கத் தலைவர் திரு தேவராஜன் வந்திருந்தார்.

கடவுள்வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. முனைவர் டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மூலிகைபற்றி விளக்கம் அளித்தார். காட்டில் கிடைக்கும் மூலிகைகள் குறைவால் மூலிகை வியாபார நோக்குடன் வளர்க்கப்படுவதைப் பற்றிக் கூறினார். பின் தலைமையேற்ற திரு வடிவேல் இயக்குனர் அவர்கள் ஆதிகால வாழ்க்கை, சித்த நூல்கள், வான சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், ஞான சாஸ்திரம் பற்றி விளக்கிக் கூறி முதலில் பாரம்பரிய வைத்திய முறை பின் ஆயுர் வேத மருத்துவம், யோகா, தியானம், ஆன்மா, தவம், வைத்தியம் சேர்ந்து ஒன்று பட்டால் பூர்த்தியாகிறது மனித வாழ்க்கை என்றார். மனிதனின் உணவுப் பழக்கங்களைக் கூறினார்.ஆறு சுவை, பரிமானம், தியானம் மனிதன் மனம் சுத்தமாக உள்ளம் பக்குவப்பட்டால் மன அழுத்தம், கனம் உடல் தன்மை இவைகளை மாற்ற வல்லது என்றார்.

பின் பத்ம ஸ்ரீ கிருஷ்ணகுமார் (ஏ.வி.பி.) பேசினார். ஆயுர்வேத மருத்துவம் காலதாமதமாகும் அலோபதி மருத்துவம் விரைவில் குணமாகும் ஆனால் நோய் திரும்பவும் வர வாய்ப்புள்ளது. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் திரும்பி வராது. மூலிகைகள் மண்ணுக்குத்தக்கவாறு வளரும் அதன் வீரியமும் அதற்க்கேற்ப இருக்கும். வியாபார நோக்குடன் வளர்க்கும் போது அதன் தன்மை சிறிது குறையும் என்றார். அமரிக்கர்கள் பலர் ஏ.வி.பி. ல் சிகிச்சை பெறுகிறாரகள் அவர்கள் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்றார்.

பின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜெகத்குரு நாகானந்த ஸ்வாமிகள் என்பவர் ஓலைச்சுவடியில் மூலிகை மருத்துவம் எழுதி வைத்திருப்பதைப்ப்பற்றிக் கூறினார். பல விளக்கங்கள் கூறினார். பின் மதிய உணவு இடைவேளை.

மதிய உணவு இடைவேளை ஒரு மணி நேரத்திற்குப்பின் மாலை 2-30 க்கு மீண்டும் தொடங்கியது. கிரீன் கோவை ஆனகட்டி திரு இராமன்ஜி அவர்கள் பேசும் பொது அங்கு 101 வகை மூலிகைப் பயிர்கள் இருப்பதாகக் கூறினார். மேலும் மூலிகை வாசனை எண்ணெய் எடுக்கும் யந்திரம் அமைத்திருப்பதாகக் கூறினார். இதன் மூலம் எண்ணெய் எடுக்கும் மூலிகைகள் 1.ரோஸ்மேரி 2. பச்சோலி.
3. பாம்ரோசா. 4. லைம் கிரேஸ். 5. துளசி. 6. திருநீர்பச்சை. 7. ஜெரேனியம். 8. மருகு. ஆகியவை என்றார்.

பின் ஆழியார் சித்தா டாகடர் திருமலைசாமி அவகள் மருந்தே உணவு, உணவே மருந்து பற்றி விளக்கம் அளித்தார்.

பின் தேவராஜன் அவர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லி அடுத்த மாதம் இதே இடத்தில் இரண்டாவது கூட்டம் 16-4-2009 அன்று தொடர்ந்து நடக்கும் என்றார். பின் நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.
-----------------------------------------------(தொடரும்)

Thursday, March 19, 2009

மரம் ஒரு தகவல்


தொழிற்சாலைக்கு மரம் தேவையா?

“மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வனக்கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையம், வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய வேளைண்மை ஆராய்ச்சி குழுமத்துடன் இணைந்து, ‘தொழிற்சாலைகளுக்குத் தேவையான வேளாண் மரங்கள் வளர்ப்பு’ பற்றி வனக்கல்லூரியில் வரும் 20, 21 தேதிகளில் இரண்டு நாள் இலவசப் பயிலரங்கம் நடத்துகிறது. இதில் மரக்கூழ்காகித, தீக்குச்சி மரங்கள் வளர்ப்பு, அதன் பயன்கள் மற்றும் பயறிசிகள், இக்கல்லூரி வஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாமில் மரங்கள் வளர்ப்பு முறை, உரங்கள், நீர் நிர்வாகம், மண்ணின் தன்மை, பூச்சி நோய் கட்டுப்படுத்தல் பற்றி பயிற்சி அளிக்கப்படுகின்றன. மேலும் மரம் சார்ந்த ஒப்பந்த முறை சாகுபடி பற்றியும், சந்தை விலைபற்றியும் விளக்கப்படுகிறது. கோவை, ஈரோடு, கரூர் நாமக்கல் மற்றும் வேலூர் மாவட்ட விவசாயிகளிக்கு, இத்திட்டத்தின் மூலம் மாதிரிப் பண்ணைகள் அமைப்பதற்கான திட்டங்களும் தெரியப்படுத்தப்படும்.

எனவே, இப்பயிற்ணி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள், தங்கள் பெயரை வனக்கல்லூரி முதல்வரையோ திட்ட அலுவலர் டாக்டர் திரு பார்த்ததூபன் அவர்களையோ தொல்பேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். முனைவர் டாக்டர் திரு பார்த்தீபன், திட்ட அலுவலர் மற்றும் இணைப் பேராசிரியர் ( வனவியல்) மர இனப்பெருக்கவியல் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்-641 301, போன் 04254 -222398,222010, மொபைல் போன்: 94435 05844 என்ற விலாசத்திற்கு தொடர்பு கொள்ளவும்.”

இது விவசாய நண்பர்களுக்கான தகவல் அறிவிப்பு.

Friday, March 13, 2009

தகவல் மையம்.

மருந்துப்பயிர்கள் தகவல் தொடர்பு மையம்.

நேர்முகப்பயிற்சி.
தமிழ் நாட்டில் உள்ள மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு நேர்முகப் பயிற்சி அளித்தல்.

மருந்து பயிர்கள் சாகுபடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
மருந்துப் பயிர்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல்.

ஒப்பந்த சாகுபடியை ஊக்குவித்தல்.

மருந்துப்பயிர்களில் ஒப்பந்த சாகுபடி முறையை ஊக்குவிக்க, மூலிகைப் பயிர்கள் பயிரிடுபவர்கள், விற்பனை மற்றும் கொள்முதல் செய்பவர்கள், பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களுக்கிடையேயான நேர்முக பரிவர்த்தனையை ஏற்படுத்துதல்.

மூலிகை சாகுபடி கணக்கீடு.

தமிழ் நாட்டில் மருந்துப் பயிர்கள் வகை வாரியாக சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தியை கணக்கீடு செய்தல்.

மூலிகை சாகுபடி மேம்பாடு.

மருந்துப்பயிர்கள் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டு வரும் தன்னார்வு அமைப்புகள், விவசாய குழுமங்கள், மூலிகைப் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவைகளை ஒருங்கிணைந்து மூலிகைப் பயிர்களின் சாகுபடியை மேம்படுத்துதல்.

தகவல் தொடர்பு மையம்.

மாநிலத்தின் பல் வேறு மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயிகளுக்கு மருந்துப்பயிர்கள் சம்பந்தமான சந்தேகங்களை நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் நிவர்த்தி செய்தல்.

வெளியீடுகள்.

மருந்துப்பயிர்கள் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் குருந்தகடுகள் ஆகியவற்றை வெளியிடுதல்.
--------------------------------------------------------------

விருவாக்க கல்வி இயக்கம்.
தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக் கழகம்.
கோயமுத்தூர் -641003.
போன்-0422 6470425, 6611365, 6611284.
----------------------------------------------------------------------
-----------------------------------------(விவசாயம் தொடரும்)

Tuesday, March 3, 2009

மரம் வளர்ப்போர் விழா.



இடம்: வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம்,
கவுளி பிரவுன் ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை-2.

நிகழ்ச்சி நிரல்
7-3-2009 சனிக்கிழமை காலை 9 மணி.
மரம் குறித்த தகவல் மையம் திறப்பு விழா.
திரு.ஜெகதீஷ் கிஷ்வான், டைரக்டர் ஜெனரல் ICFRE புதுடெல்லி.
காலை 11.15 மரம் வளர்ப்போர் விழா துவக்கம்.
தலைமை-முனைவர் N. கிருஷ்ணகுமார், இயக்குனர் IFGTB கோவை.

புத்தகங்கள்வெளியீடு: முனைவர் C.K.ஸ்ரீதரன் IFS
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சென்னை.

11.45 - 13.45 வரை கருத்தரங்கு - 1
‘தொழிலகங்களுக்கு தேவையான மரப்பயிர்கள் வளர்ப்பு முறைகளும் மேலாண்மையும்’

தலைமை: முனைவர். குமாரவேலு IFS
முன்னாள் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், சென்னை.

பகல் 14.00 மணி உணவு இடைவேளை பின்
கருத்தரங்கு-2

‘ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் பயிர் நோய் மேலாண்மை’
தலைமை-திரு.ஜாபரி IFS, இயக்குனர், தமிழ்நாடு வன அகாடமி.
மாலை 17.30 க்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவு.


8-3-2009 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 பகல் 12.00 வரை.
கருத்தரங்கு-3.
‘தொழில்களுக்கும் தொழிலகங்களுக்கும் தேவையான பண்ணைக் காடுகள்’
தலைமை: திரு.V.இருளாண்டி IFS தலைமை வன பாதுகாவலர், வன விரிவாக்கம், சென்னை.

மதியம் 12.30 - 13.30 வரை கருத்தரங்கு-4
‘தரமான நாற்றுகள் உற்பத்திக்குத் தேவையான விதை நேர்த்தியும் நாற்றுப் பண்ணை தொழில் நுட்பமும்’

தலைமை: முனைவர் N. கிருஷ்ணகுமார், IFS. இயக்குனர், IFGTB.

13.30 - 14.30 வரை மதிய உணவு இடைவேளை.

பகல் 14.00 முதல் 15.45 வரை கருத்தரங்கு-5.
‘பண்ணைகாடு வளர்ப்பில் விவசாயிகளின் அனுபவங்கள்’
தலைமை: திரு. K.சிதம்பரம் தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி)
திரு. K.தேவராஜன், தலைவர், மரம் வளர்ப்போர் சங்கம்.
‘விவசாயிகளின் அனுபவங்கள்.’
திரு.மது இராமகிருஷ்ணன், பொருளாளர், மரம் வளர்ப்போர் சங்கம்.
‘வேளாண் பண்ணைக்காடுகள்’
திரு.நாராயணசுவாமி, கொளைகை பரப்புச் செயலாளர், மரம் வளர்ப்போர் சங்கம். கோவை.
‘பண்ணை முறையில் புதிய நிர்வாக வாய்ப்புகள்’ பற்றிப் பேசுவார்கள்
17.00 மணிக்கு நிறைவு விழா.
அனைத்து விவசாயிகளையும் கலந்து பயனடைய வேண்டுகிறோம்.

Sunday, February 22, 2009

காட்டாமணக்கு பயிற்சி


விவசாய அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

வரும் 26-02-2009 வியாளக்கிழமையன்று வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள உயரி எரிபருள் சிறப்பு மையத்தில், ‘காட்டாமணக்கு சாகுபடி மற்றும் பயோடீசல் உற்பத்தி’ குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. இதற்கு 150 விவசாயிகள் மட்டுமே தேர்வு செய்ய இருப்பதால் ஆர்வமுள்ள விசாயிகள் தங்கள் வருகையை முன் கூட்டியே கடிதம் மூலம் ‘ பேராசிரியர் மற்றும் முதன்மை அலுவலர், உயிரி எரிபொருள் சிறப்பு மையம், வேளாண் பறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர்-641003, தொலைபேசி- 0422 6611376’ என்ற முகவரியில் தொடர்பு கொண்டு முன் பதிவு செயுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(குறிப்பு- பயிற்சியின் போது மதிய உணவு, கையேடு, போக்குவரத்துச் செலவுகள் இலவசமாக வழங்கப்படும்.)