Friday, May 11, 2012

50 ஆண்டுகளுக்குப்பின் புத்திர பாக்கியம்?



50 ஆண்டுகளுக்குப்பின் ஆண்களுக்கு விந்தணுக்கள் இருக்குமா?

இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் 
இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறைபாட்டிற்கு காரணம்

விந்தணு குறைபாட்டுக்கு காற்று மாசுபடுதல், ஜங்க் உணவுகள், சுற்றுப்புற மாசு, உடல் பருமன், ஸ்டரஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி புகைத்தல், குடித்தல், உடல் பருமனோடு நாம் உபயோகப்படுத்தும் ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலம் வெளியாகும் ஈஸ்ட்ரோஜனை ஒத்த வேதியியல் பொருட்கள் மூலமும் விந்தணுக்கள் குறைகின்றன என்கிறது.

விந்தணு வீழ்ச்சி

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கைக்கு எதிரான நிலை

தாமதமான திருமணங்களும் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதும் விந்தணுக்கள் குறைவதற்கு முக்கிய காரணங்கள் என்கிறார் மருத்துவர் மல்பானி. ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதன் மூலம் விந்தணுக்கள் குறைகின்றன என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறும் அவர், விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்பதே.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் 
விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
http://www.facebook.com/karur.india PLS LIKE THIS PAGE AND SHARE TO UR FRIENDS

--------------------------------------------------------------------(தொடரும்)

Thursday, March 29, 2012

முருங்கை சாகுபடி..


செடிமுருங்கை.


விண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி.

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம் சாகுபடி செய்து வருகிறார். அவருடைய சாகுபடி விபரம்-

இப்பண்ணையில் உள்ள தோப்புகள் முழுவதும் இயற்கை வேளாண்மை முறையே மேற்கொள்ளப்படுவதால் இந்த ரகத்தின் பாரம்பரிய குணாதிசியங்கள் எதுவும் மாறாமல் காக்கப்படுகிறது.  இயற்கை முறை பராமரிப்பு என்பதால் நோய் தாக்குதல் இல்லை. இப்பண்ணையில் உருவாக்கப்படும் முருங்கைக் கன்றுகளுக்கு, நன்கு பராமரிக்கப்பட்டு தாய் குணம் உள்ள, அதிக காய்பிடிப்பு தன்மையுள்ள மரத்தில் விண்பதியம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகிறது. இத்தகு முறையில் உண்டான கன்றுகள் நடவு செய்த 6,7 மாத த்திலேயே காய்த்து பலன் தரத் தொடங்கிவிடுகிறது. காய்க்கத் தொடங்கிய முதலாண்டு இறுதிக்குள் ஒரு மரமானது குறைந்தது 50 கிலோ காய்கள் வரை கொடுத்து விடுகிறது. இரண்டாம் ஆண்டில் 3 காய்க்கும் பருவமும் சேர்த்து ஒரு மரம்200 கிலோவிலிருந்து 250 கிலோ வரையிலும் காய்கள் பெறலாம். சரியான பராமரிப்பு, அதாவது இயற்கை முறையில் எரு, மண்புழு உரம், இயற்கை நோய் கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தியவர்கள் ஆண்டிற்கு ஒரு மரத்திலிருந்து 300 கிலோ காய்கள் வரை மகசூல் எடுத்துள்ளனர்.

ஒரு ஆண்டு காலம் மகசூல் தந்த மரங்களை தரையிலுருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் ஒரே மட்டமாக  கவாத்துச் செய்த பின், வெட்டிய பகுதியில் போர்டோ கலவையைப் பூசி பூஞ்சாண நோய் வருவதைத் தவிர்க்கலாம்.(100 கிராம் மயில் துத்தத்தையும் 100 கிராம் சுண்ணாம்பு கரைசலில் கலந்து வாறு ஊற்றி போர்டோ கலவை தயார் செய்ய வேண்டும்) இவ்வாறு கவாத்துச் செய்தபின் தண்டுப் பகுதியிலிருந்து கிளைகள் வளரத் தொடங்கும். பக்கவாதுகளில் நல்ல திடமான கிளைகள் 5 முதல் 7 மட்டும் விட்டு வைக்க வேண்டும். இப்படித் தோன்றும் கிளைகள் வளர்ந்து ஆராம் மாதத்தில் பூக்கத் தொடங்கும். மீண்டும் எட்டாம் மாதம் முதல் பத்தாம் மாதம் வரையில் காய்கள் கிடைக்கும். அறுவடை முடிந்த பின் செடிகள் அடியுடன் அப்புரப்படுத்து விட்டு மறு நடவு செய்யலாம். மொத்தத்தில் செடி முருங்கை மூன்று ஆண்டுகள் வரை பலனளிக்கும். ஒவ்வொரு முறை கவாத்து செய்த பிறகு பரிந்துரை செய்யப்பட்டு தழை, மணி, சாம்பல் சத்து உரங்ளோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாச்ச வேண்டும். இச்செடி முருங்கையை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் 2500—3000 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டொன்றிக்கு குறைந்த பட்சம் 15,000 ரூபாய் வருமானம கிடைக்கும். தொடர்புக்கு- கே.பி.எம்.சடையாண்டி,, 979913 74087, 98650 78101.

----------------------------------------------------------------------(தொடரும்)

Thursday, March 8, 2012

மரம் வளர்போர் விழா 2012 ல் முனைவர் பார்த்தீபன்


நட்சத்திர மரங்கள்.




நட்சத்திர மரங்கள்.

1.   அஸ்வினி-----------------------------------எட்டி.

2.    பரணி ----------------------------------- நெல்லி மரம்.

3.    கார்த்திகை ------------------------------அத்திமரம்.

4.    ரோகினி-----------------------------------நாவல் மரம்

5.    மிருகசீரிடம்-------------------------------கரங்காலி.

6.    திருவாதிரை--------------------சிவப்புகரிங்காலி.

7.    புனர்பூசம்----------------------------------மூங்கில்.

8.    பூசம்------------------------------------------அரசு.

9.    ஆயில்யம்---------------------------------புன்னை.

10.   மகம்-----------------------------------------ஆலமரம்.

11.  பூரம்-------------------------------------------புரசமரம்.

12.   உத்திரம்-----------------------------------இலந்தை.

13.   அஸ்தம்-----------------------------------வில்வம்.

14.   சுவாதி--------------------------------------மருதமரம்.

15.  சித்திரை------------------------------------வில்வம்.

16.   விசாகம்----------------------------------வினாமரம்.

17.   அனுசம்-------------------------------------மகிழமரம்.

18.   கேட்டை------------------------------------பராய்மரம்.

19.   மூலம்---------------------------------------மராமரம்.

20.   பூராடம்------------------------------------வஞ்சிமரம்.

21.   உத்திராடம்--------------------------------பலாமரம்.

22.   திருவோணம்-----------------------------எருக்கு.

23.   அவிட்டம்------------------------------வன்னிமரம்.

24.   சதயம்-------------------------------------கடம்புமரம்.

25.   பூரட்டாதி------------------------------------மாமரம்.

26.   உத்திரட்டாதி------------------------------வேம்பு.

27.   ரேவதி-----------------------------------------இலுப்பை.


-------------------------------------------------------------------(தொடரும்)   





Saturday, February 25, 2012

IFGTB இயக்குனர் பேச்சு.




மரம் வளர்ப்பபோர் விழா 2012 ல் நிறுவன இயக்குனர் முனைவர் என்.கிருஷ்ணகுமார் பேசியது.......


----------------------------------------------------(தொடரும்)

Thursday, February 23, 2012

மரம் வளர்போர் விழா 2012. துவக்கம்.




இன்று 23-2-2012 மரம் வளர் போர் விழா 2012 ஐ,  IFGTB கோவையில் மத்திய அமைச்சர் அவர்களால் துவக்கி வைத்துப் பேசினார்கள்.......


-------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, February 21, 2012

மரம் வளர்போர் விழா 2012.

IFGTB.


மரம் வளர்ப்போர் விழா 2012.


இடம்:---------------; வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
--------------------------நிறுவனம்,
-----------------------   கவுளி பிரவுன் ரோடு,
------------------------  ஆர்.எஸ்.புரம்,
------------------------  கோவை-641 002.

நாள் :----------------- 23-2-2012 ம்,  24-2-2012 இரண்டு 
-------------------------- நாட்கள்.

நேரம் :-------------- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
--------------------------கருத்தரங்குகள்
 ------------------------ தொடர்ந்து நடைபெரும்.

விவசாய அன்பர்களும்,  கோவையைப் பசுமையாக்கிக் கொண்டிருக்கும் சிறுதுளி பெருமக்களும்,  பசும்புலரி அன்பர்களும், பசுமை அமைப்புக்களும், கோவை மாவட்ட மரம் வளர்ப்போர் சங்க அன்பர்களும் திரளாக வந்து இந்த ஆண்டின் மரம் வளர்ப்போர் விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடம் வேண்டிக் கொள்கிறோம். அனுமதி இலவசம்.

வெளியூர் அன்பர்களுக்குத் தங்கும் இட வசதி செய்து தரப்படும்.

மேலும் தொடர்புக்கு; 0422-2484100,2484171, 2484116 மற்றும்-9600333554.

---------------------------------------------------(தொடரும்)