Wednesday, August 21, 2013

NATIONAL WORKSHOP AT I.F.G.T.B. FOR TWO DAYS.




 
IFGTB

NATIONAL WORKSHOP AT I.F.G.T.B. FOR TWO DAYS.

National Workshop on Tree Seed Science and Silviculture.
With special emphasis on Tree Cultivation outside the forest areas.

Date: 28th & 29th November 2013.

Registration fee per participant is Rs. 500-00.

Participation:

Institute of Forest Genetics and Tree Breeding, Coimbatore extends its invitation for participation in this national level workshop to officials of State Forest Departments, research institutes, Agriculture Departments, Horticulture Departments, Agricultural Engineering Departments, ICAR and its Institutes, State Agricultural Universities and forestry colleges, organizations involved in forestry/ agroforestry/ plantation forestry, representatives from agencies associated greening programmes.

For further details contact:

Dr.C.BUVANESWARAN,
Organizing Secretary,
INSTITUTE OF FOREST GENETICS AND TREE BREEDING,
P.B.No.1061, Forest Campus, R.S.Puram,
Coimbatore - 641 002 (Tamil Nadu)
Ph.:0422-2484198 Fax:0422-2430549 Mobile: 09442245047.
E-mail: buvanesc@icfre.org.
-------------------------------------------------------------------------(தொடரும்)

Thursday, August 8, 2013

நெல்லிக் காயிலிருந்து பொருட்கள் தயாரித்தல்.






 நெல்லிக் காயிலிருந்து பொருட்கள் தயாரித்தல்.


தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நெல்லிக் காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தாயிரிப்பு பயிற்சி இரு நாட்க்கள் நடக்கிறது.

தமிழ்ந்நாடு வேளாண் பல்கலியில் நெல்லிக் காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தாயாரிப்பு பயிற்சி வரும் 13 மற்றும்
14 ம் தேதி நடக்கிறது. இதில் நெல்லிப் பானங்கள், ஸ்குவாஷ் தயார் நிலை பானம், சர்கரரைப்பாகு, நெல்லி ஜாம், ஜெல்லி, பட்டர், கேண்டி மிட்டாய், பொடி மற்றும் துருவல், தொழில் துவங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள் குறித்து பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் 1,000 ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரைப் பதிவு செய்ய இயலாதவர்கள் பயிற்சிக் கட்டடணத் தொகையை வரை ஓலை மூலம் முதன்மையர், வேளாண்இன்ஜி., கல்லூரி என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடைபின்சார் தொழில் நுட்ப மையம்,, தமிழ்நாடு வேளைண்பல்கலை, கோவை-641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். வரும் 13ம் தேதி பதிவு செய்ய இறுதி நாள். விவரங்களுக்கு, 0422 6611340, 6611268 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

---------------------------------------------------------------(தொடரும்)


Tuesday, August 6, 2013

அட்மா. (ATMA))

மரம் வளர்ப்பு பயிற்சி முகாம். வனவியல் விரிவாக்கக் கோட்டம், கோவை.


தேவராஜன் வவேற்புரை.




இராஜேஷ்வரன், வனவிரிவாக்க அலுவலர்.
இலட்சுமிராஜ், வேளாண்மை இணை இயக்குனர்.
இலட்சுமிராஜ், வேளாண்மை இணை இயக்குனர்.
செல்வநாயகி- முனைவர் பாக்கியவதிக்குப்பொன்னாடை அணிவித்தல்.
மரு.சிவகுமார், இணைப் பேராசிரியர் மற்றும்  தலைவர்.

விவசாயிகள்.                     

விவசாயிகள்

--------------------------------------------------------------------------------------------(தொடரும்.)

Saturday, July 6, 2013

மரக்கன்றுகளைபாதுகாக்கும்உயிர்மபூச்சிக்கொல்லி.











மரக்கன்றுகளை பாதுகாக்கும் உயிர்ம பூச்சிக்கொல்லி.

கோவை வனமரபியல் மையத்தில் அறிமுகம்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனத்தில் மரக்கன்றுகளை பாதுகாக்கும் உயிர்ம பூச்சிக்கொல்லியை அறிமுக விழா நடந்தது.

இவ்விழாவில், நிறுவன இயக்குனர் கிருஷ்ணகுமார், ‘ட்ரீரிச்பயோபூஸ்டர்என்ற இயற்கை உரம், ‘ஹை-ஆக்ட்’  மற்றும் ட்ரீபால்உயிர்ம பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்து பேசியதாவது:

மரங்களை நட்டு வளர்ப்பதும், வளர்த்த மரங்களை பாதுகாப்பதும் சவாலாக காரியமாக உள்ளது .அதனால், வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இதல் மர உற்பத்தியை பெருக்குவது,  தட்பவெட்பம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்வது, பல்லுயிர் சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட விசயங்களை பிரதானமாக கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், உயர்ம பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இயற்கை உரம், தாவரங்களுக்கு நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. விவசாயிகள் இவற்றை பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இதனால், எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. இவ்வாறுகிருஷ்ணகுமார்பேசினார்.

இயற்கை உரம் மற்றும் உயர்ம பூச்சிக்கொல்லியை கண்டுபிடித்த உயிர்ம வள மேம்பாட்டுத் துறை விஞ்ஞானி முருகேசன் பேசியதாவது-

ட்ரீ ரிச் பயோ பூஸ்டர்என்ற இந்த இயற்கை உரத்தில், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து நோய் தாக்குதலைத் தடுக்கும் மருந்தும் கலந்து மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த உரத்தில் வளரும் தாவரங்களை பூச்சிகள் தாக்காது.

அதே போல் ஹை-ஆக்ட்’  மற்றும் ட்ரீபால்உயி ர்பூச்சிக்கொல்லி மருந்துகள் புங்கஎண்ணெய்மரவெட்டி எண்ணெய், வேம்பு எண்ணெய் மற்றும் வெளிநாட்டு களைச் செடிகளான லாண்டனாகாமராஎண்ணெய் ஆகிய கலவைகள் மூலம் தயாரிக்கப் பட்டு உள்ளன. இவற்றில் பூச்சிகளை கொல்லும் தன்மை இருப்பதால், தாவரங்களை பூச்சிகள் அண்டாது..

மேலும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால் தாவரங்க்களுக்கும்மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

சவுக்கு, தேக்கு, போன்ற மரங்களைத் தாக்கும் முக்கிய பூச்சிகளை இவ்வகை உயிர்ம பூச்சிக்கொல்லி அழித்து விடும்.விவசாயிகள் அனைத்துப் பயிர்களுக்கும் இதை பயன் படுத்தலாம். 100 மில்லி ட்ரீபால்சேர்மத்தில் 10 லிட்டர் நீரில் கரைத்து, ஒரு வார இடை வெளியில் தெளித்தால் பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம் .இயற்கை உரம் மற்றும் உயிர்ம பூச்சிக்கொல்லி மருந்துகள் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. விவசாயிகள் வாங்கி பயன் பெறலாம்.

இவ்வாறு, முரிகேசன் பேசினார். ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், விஞ்ஞானி கார்த்திகேயன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

-நன்றிதினமலர்.

------------------------------------------------------(தொடரும்)



Thursday, July 4, 2013

வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி.



 
தேனி கூடு.

வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில், தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. வரும் 8 ம் தேதி நடக்கும் முகாமில், தேனி இனங்களைக் கண்டறிதல், பெட்டிகளில் தேனீக்கள் வளர்ப்பு முறை மற்றும் நிர்வாகம், உணவு தரும் பயிர், மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களிம் விபரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும், நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடக்கும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும். விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பல்கலை, கோவை 641003 என்ற முகவரியிலும், 0422 6611214 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி தினமலர் நாள் 4-7-2013.

(பி.கு. பயிற்சிக் கட்டணம் ரூ.250-00 மதிய உணவு அவர்கள் பொருப்பு. அன்று காலை 9 மணிக்குக் கட்டணம் செலுத்தி விடவேண்டும்.)


---------------------------------------------------------------------------------(தொடரும்)