Showing posts with label இளைஞர்களைக்கு வேலை வாய்ப்பு பயிற்சி.. Show all posts
Showing posts with label இளைஞர்களைக்கு வேலை வாய்ப்பு பயிற்சி.. Show all posts

Thursday, February 26, 2015

இளைஞர்களைக்கு வேலை வாய்ப்பு பயிற்சி.

இளைஞர்களைக்கு வேலை வாய்ப்பு பயிற்சி.

கோவை சாயிபாபா காலனி, அண்ணமலை ரோட்டில் உள்ள 'உன்னதி' அறக்கட்டளை சார்பில், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் இடை நின்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. 

அறக்கட்டளை தலைவர் ரமேஷ்சுவாமி  கூறுகையில் கோவையில் இம்மையம் இரண்டாட்டுகளாக செயல்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில், வேலை பெறுவதற்கு படிப்பு மட்டும் போதாது.

படிப்புக்கு ஏற்ற ஆளுமைத்திறன், அணுகுமுறை மற்றும் ஆங்கில மொழித்திறன்  தேவை. வேலைவாய்ப்பை பெற என்ன தேவை என்பதை அறிந்து, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப, பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இப்பயிற்சியில் சேரலாம். இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வைவையில்லை ' என்றார். விபரங்களுக்கு, 0422-2430822, 8903126708 என்ற எண்ணில் தொடர்பு கைள்ளலாம்.

நன்றி-தினமலர் நாள் 26-2-2015.