Showing posts with label பயிற்சி.. Show all posts
Showing posts with label பயிற்சி.. Show all posts

Friday, January 10, 2014

மலரியல் துறையில் பயிற்சி.






வேளாண் பல்கலை


மலரியல் துறையில் பயிற்சி.


பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு, வேளாண் பல்கலை மலரில் துறையில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.


வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை-



வேளாண் பல்கலையில் ,மலர்கள் பற்றிய தொழில் முனைவோர் பயிற்சி, ஜன., 22 முதல் பிப்., 19 வரை 25 நாட்கள் நடக்க உள்ளது. பயிற்சியில், 25 பெண்கள் பங்கேற்க உள்ளனர். மதிப்பூட்டப்பட்ட மலர்கள் மற்றும் உலர் மலர்கள் குறித்து வர்த்தக ரீரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.. சந்தைப் படுத்துதல், நிதி மேலாண்மை திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மதிப்பூட்டும் செயல் முறை விளக்கம் குறித்து பயிறசி இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியில் சேர குறைந்த பட்சம் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் ‘தலைவர், மலரியல் மற்றும் பயிரியல் துறை, வேளாண் பல்கலை, கோவை-641 003 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, ஜன., 14 க்கு முன் பதிவு செய்ய வேண்டும்.

நன்றி தினமலர் நாள் 10-01-2014.

----------------------------------------------------------------------------(தொடரும்)

============================================================================

Thursday, December 19, 2013

ஊறுகாய் தயாரித்தல்.



ஊறுகாய் தயாரிக்க ஆசையா?
வேளாண் பல்கலையில் பயிற்சி.

வேளாண் பல்கலை சார்பில், சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சி நடக்க உள்ளது. வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறைக்கை;  வேளாண் பல்கலையில் மசாலாப்பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்கும் பயிற்சி டி., 26, 27 ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் மசாலா பொடிகள், தயார் நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்ப்பூ ஊறுகாய் பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய் மற்றும் வெங்காய ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்ட உள்ளன. இதில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.  பயிற்சி கட்டணமாக ரூ.1000 செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் வர இயலாதவர்கள் பயிற்சிக் கட்டணத் தொகையை வரையோலை மூலம் பேராசிரியர் மற்றும் தலைவர் அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், என்ற பெயரில் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில்  பெறத்தக்க வகையில்  எடுத்து பேராசிரியர், மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்துஊர்-641 003 என்ற முகவரிக்கு, டிசம்பர் 24ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

நன்றி- தினமலர் நாள் 20-12-2013.

--------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, November 26, 2013

லாபம் தரும் வெள்ளாடு விற்பனை.




 
வெள்ளாடு.
லாபம் தரும் வெள்ளாடு விற்பனை.

விவசாயிகளுக்கு அதிகம் வருவாய் ஈட்டித்தரும், கால்நடைகளில் வெள்ளாடும் ஒன்று. குறைந்த பராமரிப்பில், அதிக லாபம் ஈட்டடித்தரும் வெள்ளாடுகளை, வளர்ப்தற்க்கான பயிற்சி முகாம் ,கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கிறது.

வெள்ளாடு வளரர்ப்பு, அதிகளவில் வருவாய் ஈட்டித் தரக்ககூடிய ஒன்று. ஒரு வெள்ளாடு ஐந்து மாதங்களில் இரண்டுக்கு மேற்பட்ட, குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. தோல், தலை, குடல் என ஆட்டின் அனைத்து உறுப்புகளும், இறைச்சிக் கடைகளுக்கு தேவைப்படுவதால், வெள்ளாடு அதிக அளவில் விற்கப்படும் கால்நடையாகக் கருதப்படுகிறது.

அதிக விலைவைத்து விற்கப்படும் வெள்ளாடுகள், விவசயிகளிடம் இருந்து குறைந்த வில்லைக்கே வாங்கப்படுகின்றன. இதைக் தடுக்கவும், விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ,விவசாயிகளுக்கான ஒருமாத கால பயிற்சி முகாம் நடத்துப்படுகிறது.

பயிற்சிமைய உதவி பேராசிரியர் சிவக்குமாரிடம் கேட்ட போது. ‘வெள்ளாடுகளை வளர்க்கும் விதம், தீவனம், தடுப்பூசி, விற்பனை வழிமுறைகள் குறித்து, பயிற்ற்சி அளிக்கப்படுகிறது.  ஆரோக்கியமாக, அதிகளவு தீவனம் போட்டு, வளர்க்கப்படும் வெள்ளாடுகளின் விலை மதிப்பு அறியாமல், விவசாயிகள் இடைத்தரகர்களை நம்பி, குறைந்த விலைக்கு விற்று ஏமாற்றம் அடைகின்றனர்.

ஒரு ஆட்டின் மொத்த எடையில், பாதி எடையளவு, சதைப்பகுதி, இதன் விலையை நிர்ணயித்து விற்றால் மட்டுமே, விவசாயிகள் லாபம் பெற முடியும். இதற்கு 1,000 ரூபாய் பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு, 0422 2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம்என்றார்.

நன்றி தினமலர் நாள் 26-11-2013.

--------------------------------------------(தொடரும்)

Tuesday, April 2, 2013

மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி.




மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், நெல்லிக் காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி முகாம் வரும் 9, 10-4-2013 தேதிகளில் நடக்கிறது.

வேளாண் பல்கலை அறிக்கை.

பயிற்சியில், நெல்லி பானங்கள், ஸ்குவாஷ், சர்கரை பாகு, நெல்லி ஜாம், நெல்லி பட்டர், கேண்டி மிட்டாய், பொடி மற்றும் துருவல், தொழில் துவங்குவதற்கான உரிமம் பெறும் முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,000 பயிற்சிக் கட்டணமாகச்செலுத்தி பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0422 6611340, 6611268 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நன்றி-தினமலர் நாள் 2-4-2013.

தொடரும்......