Thursday, February 26, 2015

இளைஞர்களைக்கு வேலை வாய்ப்பு பயிற்சி.

இளைஞர்களைக்கு வேலை வாய்ப்பு பயிற்சி.

கோவை சாயிபாபா காலனி, அண்ணமலை ரோட்டில் உள்ள 'உன்னதி' அறக்கட்டளை சார்பில், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் இடை நின்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. 

அறக்கட்டளை தலைவர் ரமேஷ்சுவாமி  கூறுகையில் கோவையில் இம்மையம் இரண்டாட்டுகளாக செயல்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில், வேலை பெறுவதற்கு படிப்பு மட்டும் போதாது.

படிப்புக்கு ஏற்ற ஆளுமைத்திறன், அணுகுமுறை மற்றும் ஆங்கில மொழித்திறன்  தேவை. வேலைவாய்ப்பை பெற என்ன தேவை என்பதை அறிந்து, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப, பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இப்பயிற்சியில் சேரலாம். இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வைவையில்லை ' என்றார். விபரங்களுக்கு, 0422-2430822, 8903126708 என்ற எண்ணில் தொடர்பு கைள்ளலாம்.

நன்றி-தினமலர் நாள் 26-2-2015.

Thursday, October 23, 2014

வேலைவாய்ப்புப் பயிற்சி.


மலைவாழ் மக்களுக்கு வேவைவாய்ப்பு பயிற்சி.

கோவை- மத்திய ஆரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை , ஜி.ஆர்.ஜி,, பாலிடெக்னிக் கல்லூரி சமுதாய் மேம்பாட்டுத் திட்டம் சார்பில், மலைவாழ் மக்களுக்கான வேலை வாய்ப்புப் பயிற்சி நவ- 1ல் துவங்குகிறது.

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, தொழில் முனைவதற்கான திறனை மேம்படுத்த மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் வேலை வாய்ப்புப் பயிற்சி நடந்து வருகிறது. இதில் பழங்குடியினர், மற்றும் தாழ்த்துப் பட்ட மக்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சியினை ஆனகட்டி, கோபநாரி என்.எம்.சி.டி., அலுவலகத்தில்  நடக்கவுள்ளது. டெய்லரிங், எம்பிராய்டரிங் பயிற்சி வகுப்பு  துவங்குகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள், என்.எம்.சி,டி அலுவலகம் மற்றும் ஜி.ஆர்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரியை தொடர்பு கொள்ளவும். போன்; 9842289230, 80984 33621, 94884 41407.

நன்றி தினமலர் 23-10-2014

(தொடரும்.)

Friday, July 25, 2014

ஈலர் பாஸ்கர் நிகழ்ச்சி.

நேரலை நிகழ்ச்சி- பாலிமரில்.


தொடரும்
தொடரும்

Tuesday, June 17, 2014

சுய தொழில் செய்ய விருப்பமா?

சுய தொழில்  செய்ய விருப்பமா? அவினாசிலிங்கம் வாங்க...

அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலையில் உள்ள தொடர் கல்வித் துறை சார்பில் ஆறு மாதகால சான்றிதழ் பயிற்சி, ஒரு வாரம் முதல் மூன்று மாதம் வரையிலான குறுகிய காலப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அப்பேரல் டிசைனிங், ஹெர்பல் பியூட்டி கேர், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் அண்ட் அக்கவுன்டிங் சாப்ட்வேர், வெப் பேஜ் டிசைனிங் ஆகியன குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.

ஒரு வாரம் முதல் மூன்று மாதம் வரை வழங்கப்படும் குறகிய காலப்பயிற்சியில், அடிப்படை கம்ப்யூட்டர், ஹேண்ட் எம்ப்ராய்டரி, மெஷின் எம்ப்ராய்டரி, ஆரி எம்ப்ராய்டரி, பூ கட்டும் பயிற்சி,சிகை அலங்காரம், கவரிங் நகைகள் தயாரித்தல், காகிதப் பைகள் தயாரிப்பு, புத்தகம் பைண்டிங், வீட்டு உபயோப் பொருட்கள் தயாரித்தல், மென்பொம்மைகள் தயாரித்தல், அடுமனை பதார்த்தங்கள் தயாரித்தல், பெண் அலங்காரம், உணவை பதப்படுத்துல், மசாலா பவுடர் தயாரித்தல், மெகந்தி மற்றும் சி புரோகிராமிங் ஆகியன குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தவறியவர்கள், இல்லத்தரசிகள், சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர விரும்புபவர்கள், 0422 2449715 என்ற தொலைபேசி எண்ணிலும், முனைவர் வசந்தா, தொடர் கல்வித்துறை, அவினாசி லிங்கம் பல்கலை, மேட்டுப்பாளையம் ரோடு, கோவை என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி கோவை 'தின மலர்'  நாள் 18-6-2014.

-------------------------------------------------------------------------------(தொடரும்)

Friday, April 18, 2014

புற்று நோய் குணமாக எழிய மருந்து.

 
 
 
 மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
 
 
 
வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ! பிரேசில் நாட்டு முறை
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
சிலர் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கிவிடும்.
இதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே பாரக்க முடியாது.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி 


தயாரிப்பு முறை:
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும் . சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

-------------------------------------------------------(தொடரும்)

Friday, March 28, 2014

Tuesday, March 25, 2014

மூலிகைப் பயிற்சி.


செங்காந்தல் மலர்.

மூலிகை மருத்துவ பயிற்சி முகாம் விண்ணப்பங்கள் வரவேற்பு.


மதுரை காமராசர் பல்கலையில் ஆறு மாதகால மூலிகை மருத்துவ சான்றிதழ் பயிற்சி முகாம்,  ஏப்., 7 ல் துவங்குகிறது.

மதுரை காமராசர் பல்கலை வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவுப் பணித்துறை சார்பில் ஆறு மாத மூலிகை மருத்துவம் சான்றிதழ் பயிற்சி முகாம், ஏப்., 7 ல் துவங்குகிறது.  குடும்ப மகளிர், மாணவ, மாணவியர், மூலிகையில் ஆர்வமுள்ளோர் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மதுரை காமராசர் பல்கலையில் மதியம் 2-00 - மாலை 5-00 மணிவரை (ஞாயிறு, திங்கள், செவ்வாய் மட்டும்)  ஆறு மாதம் இப்பயிற்சி நடைபெறும். இதில் , நேரடி பயிற்சியாக மூலிகை தாவரங்களை கண்டறிதல், மூலிகைகள் வளர்ப்பு மற்றும் பயிரிடும் முறை, மருத்துவப்யன்கள், மருத்துவ குறிப்புகள், மூலிகை ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை. திட்ட அலுவலர் (பொ)  வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவுப்பணித்ததுறை, மதுரை காமராசர் பல்கலை , மதுரை- 625002 என்ற முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். வெளியூர் மாணவர்கள், 0452 - 2537838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மதுரை காமராசர் பலகலை  நிகழ்ச்சிப்  பொறுப்பாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

நன்றி=தினமலர் நாள் 25-3-2014.