Monday, November 26, 2012

அங்கக வேளாண்மை கருத்தரங்கு.




அங்கக வேளாண்மை கருத்தரங்கு.

மாநில அளவில் அங்கக வேளாண்மை குறித்த கருத்தரங்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மூன்று நாட்கள் நடக்கிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை-

மாநில அளவிலான அங்கக வேளாண்மை குறித்த கருத்தரங்கம் நவ., 27 முதல் 29ம் தேதி வரை பல்கலை  பொன்விழா அரங்கில் நடக்க உள்ளது. பல பகுதிக்களிலிருந்து 250க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.  கருத்தரங்கில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், விபரங்களுக்கு 0422 6611523, 6611245, 22441031 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறைக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------(தொடரும்)

Sunday, November 11, 2012

கோவையில் இலவச வேவைவாய்ப்பு பயிற்சிகள்.





கோவையில் இலவச வேவைவாய்ப்பு பயிற்சிகள்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆண், பெண்களுகளுக்கு, கோவையில், இலவச  வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், கோவையில் செயல்பட்டு வருகிறது அவினாசிலிங்கம் ஜன சிக்க்ஷன் சன்ஸ்தான். வேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக இந்நிறுவனத்தின், அளிக்கப்படுகின்றன, இதற்கான விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்களுக்கு- பிளம்பர், ஆட்டோ எலக்ட்ரீசியன், மோட்டார் வைண்டிங், பெண்களுக்கு- தையல் கலை , எம்பிராய்டரி, பேஷன் டிசைனிங், ஆரிஎம்பிராய்டரி, மெஷின் எம்பிராய்டரி.

எட்டாம் வகுப்பு வரை படித்த ஆண்களுக்கு, மெஷினிஸ்ட், பிட்டர் டர்னர், ரெப்ரிஜிரேட்டர் மற்றும்  ஏ.சி., பழுது பார்த்தல், , மொபைல்போன் சர்வீஸ் (இரு பாலருக்கும்), பெண்கள்-அழகுக்கலை, பேசியல். பத்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் – எலக்டிரீசியன், சி.என்.சி, லேத் ஆப்பரேட்டர்.  பிளஸ் 2 வரை படித்த ஆண்களுக்கு, டூல் மற்றும் டை தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. வரும் 23ந் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான், அழகேசம் ரோடு, கோவை-641043 என்ற முகவரியிலும் 0422-244 8858 என்ற  தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கோவை அவினாசிலிங்கம் ஜன் சிக்‌ஷன் சன்ஸ்தான் இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.’
-------------------------------------------------------------------------------------(தொடரும்)

Monday, November 5, 2012

சாக்லேட் தயாரித்தல் பயிற்சி.




வேளாண் இன்ஜி., கல்லூரி


சாக்லேட் தயாரித்தல் பயிற்சி, தமிழ் நாடு வேளாண் பல்கலையில், வரும் 6,7 தேதிகளில் நடக்கிறது.

வேளாண் பல்கலை அறிக்கை, கொக்கோ மிட்டாய், பழமிட்டாய், பருப்பு மிட்டாய், தேன் மிட்டாய், சர்கரை மிட்டாய் வகைகள் தயாரிக்கும் முறை குறித்து கற்றுத்தரப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரை முன்பதிவு செய்து கொள்ள முடியாதவர்கள், பயிற்சிக் கட்டணத் தொகையை ‘டிடி’ மூலம், முதன்மையர், வேளாண் இன்ஜி., கல்லூரி என்ற பெயரில், கோவையிலுள்ள ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில், பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ் நாடு வேளாண் பல்கலை, கோவை-641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பதிவு செய்து கொள்ள வரும் நவ., 6ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு, 0422 6611340, 6611268 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

--------------------------------------------------------------------------------(தொடரும்)

Saturday, September 1, 2012

தேனிவளர்ப்பு.




தேனி அடுக்கு

தமிழ்நாடு வேளாண்பல்கலையில் தேனிவளர்ப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண்பல்கலையில், தேனிவளர்ப்பு குறித்த, ஒரு நாள் பயிற்சி வரும் 6ம் தேதி அளிக்கப்படுகிறது.

தேனிகூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனிகூட்டங்க்களை சேர்த்து வளர்க்கும் முறை,  ராணித்தேனி 
உற்பத்தி முறை, இயற்கை எதிரிகள் நிர்வாகம் உள்ளிட் டபயிற்சிகள், இதில் வழங்கப்படுகின்றன.

பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், செப்., 6ம் தேதி காலை 9..00 மணிக்கு, பல்கலை பூச்சியியல்துறைக்கு வரவேண்டும். பயிற்ற்சியில் கலந்து கொள்வதற்கு, 150 ரூபாய்பயிற்சிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். காலை 9..00. முதல் மாலை 5.00 மணிவரை, பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் இறுதியில், சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல்துறை, தமிழ்நாடுவேளாண் பலகலை, கோவை-641003 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
தேன் எடுக்கும் கருவி.


------------------------------------------------------------------------------------(தொடரும்)

நன்றி தினமலர்.

Thursday, August 9, 2012

பெண்களுக்கான தொழில் பயிற்சி.





பெண்களுக்கான தொழில் பயிற்சி.

பாரதியார் ரோட்டிலுள்ள, அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், இந்திய அரசு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ், பெண்களுக்கான இலவச தொழில் பயிற்சியை அளிக்கிறது.

குறிப்பாக தையல், கம்யூட்டர், எம்ராய்டரி, அலங்கார பொம்மை தயாரித்தல், எலக்ட்ரிகல் வயரிங், உணவுபதப்படுத்துதல், மெழுகுவர்த்தி, சோப்புத்தூள், சோப்புஆயில், கம்யூட்டர் சாம்பிராணி, சொட்டு நீலம், அகர்பத்தி, பினாயில் தயாரித்தல் ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விவரத்திற்கு-  போன் – 0422 2240919 அல்லது மொபைல் – 94437 09712 தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும்.

-------------------------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, July 10, 2012

வெள்ளாடு, வெண்பன்றி, வளர்ப்பு பயிற்சி.



வெள்ளாடுகள்


வெள்ளாடு, வெண்பன்றி, வளர்ப்பு பயிற்சி.

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு,  வெள்ளாடு வளர்ப்பு,  வெண்பன்றி வளர்ப்பு ஆகிய இரண்டு சுய வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒருமாதம் பயிற்சி அளிக்கப்படும். தொழில் முனைவோருக்கு, தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். வெள்ளாடு வளர்ப்புப்பயிற்சிக்கு ஆயிரம் ரூபாயும், வெண்பன்றி வளர்ப்புப்பயிற்சி கட்மாக 2,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

பயிற்சியில் விரிவுரைகள், வீடியோ படங்கள்,  செயல் விளக்கம் மற்றும் மாதிரி பண்ணைகளில், களப்பயிற்சி ஆகியன நடைபெறும்.

பயிற்சியில் ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள், இம்மையத்தை நேரில் அல்லது 0422 2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெண்பன்றி.


நன்றி தினமலர் 10-7-2012

----------------------------------------------------------(தொடரும்)

Monday, July 2, 2012

விவசாயமும் தோட்டக்கலையும் இணையுமா?

Agri & Horti Tech 2012 Inaugural Invitation
Inbox
x

Agri & Horti Tech, Coimbatore agrihortitech@gmail.com
Jun 30 (2 days ago)

to Foundry, bcc: me
Agri 2012 Invitation.gif

AGRI & HORTI TECH 2012
TRADE INDIA FAIRS AND EXHIBITIONS PRIVATE LTD.
70-B, RVL Nagar, Uppilipalayam (Post), Coimbatore – 641015.
Phone : 0422 – 6552288 Mob: 9500444492
 
தொடரும்.