Friday, August 22, 2008

காட்டாமணக்கு.




காட்டாமணக்கு.

காட்டாமணக்கு என்பது “JATROPHA CURCAS” . இதன் தாயகம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா. பின் அங்கிருந்து ஆப்பிருக்கா, லேட்டின் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பரவிற்று. இந்தியாவிலும், போர்ச்சுகலிலும் 16 வது நூற்றாண்டில் இது பரவலாக பரவிற்று.மேலும் அந்தமான் தீவுகளிலும் உயிறுள்ள வேலியாகப் பயன் பட்டது. மணல் சரிவதையும், நில அறிப்பையும் இது கட்டுப் படுத்தியது.இது எல்லா வகை மண் வகைகளிலும் வளரக்கூடியது.

காட்டாமணக்கு ஒரு குறு புதர் மரம். புதர்வகை 170 ல் இதுவும் ஒன்று. கிரேக்க மொழியில் ‘JATOROS’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ‘JATROS’ என்றால் மருத்துவர். ‘TROPHE’ என்பது ‘NUTRITION’ என்பதாகும். அதனால் தாவரப் பயர் ‘JATROPH CURCAS’ என ஆயிற்று. இதன் குடும்பப்பெயர் ‘EYOGIRVACEAE’ ஆகும். இதன் தண்டுப் பகுதி மென்மையான சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகள் கைவிரித்தால் போன்று அகலமாக இருக்கும்.செடித் தண்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டால் அதிலிருந்து பால் போன்ற பசையுள்ள ஒரு திரவம் வரும். இது மருத்துவ குணமுடையது. பல் வலி எகுறு வலி ஏற்பட்டவர்கள் இதன் மென்மையான குச்சியால் பல் துலக்கினால் குணமடைவார் கள். இதன் கிளைகள் பக்கவாட்டில் அதிகரிக்கும். இதன் பூக்கள் சிறியதாக் கொத்துக் கொத்தாக இருக்கும். அதில் பெண் பூக்கள் குறைந்தும் ஆணபூக்கள் அதிகமாகவும் காணப்படும். பூக்களின் இதழ்கள் ஐந்தாக இருக்கும். பெண் பூக்கள் மத்தியில் குமிழ் போன்று இருக்கும். ஆண் பூக்களுக்கு மத்தியில் இறுதியாகப் பூ விறியும், அப்போது தான் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். ஆனால் தற்போது கோவை விவசாயக் கல்லூரியில் உள்ள விஞ்யானி திரு.எம். பரமாத்மா அவர்கள் பெண் பூகளை முதலில் அதிகமாக மலரச் செய்து ஆண் பூக்கள் அதன் பின் மலரச் செய்யும் ஆரய்ச்சியில் செயல் படுத்தி வெற்றியடைந்து தன் மகரந்தச் சேர்க்கை மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கை அதிகறிக்கச்செய்து குறுகிய காலத்தில் அதிக காய்களைத் தரும் காட்டாமணக்கு ரகங்களை உறவாக்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல்கலாம் அவர்களிடம் பாராட்டுதலையும் பெற்றுள்ளார். காய்கள் 3 அறைகளைக் கொண்டதாக இருக்கும், அவை முதலில் பச்சை நிறமாக இருந்து முதிறும் போது மஞ்சள் நிறத்தை அடையும், பின் இறுதியாக கருப்பாக மாறி சிறிது வெடித்து இருக்கும். இந்தக் காய்கள் மஞ்சளாக இருக்கும் போது அதைப் பறித்து விதைகள் எடுப்பது சிறந்தது என்று திரு எம. பரமாத்மா கூறினார். விதைகள் கெட்டியான ஓட்டுடன் கருப்பாக இருக்கும். நுனியில் கண் போன்ற வெள்ளை கருப்பொருள் இருக்கும். ---------(மேலும் தொடரும்)