Monday, May 2, 2016

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.

சரவணம்பட்டி, கால்நடை பல்கலை பயிற்சி மையத்தில், வரும் 3 மற்றும் 
4 ம் தெதிகளில், வெள்ளாடு வளர்ப்பு சார்ந்த, இரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.

காலை 10.00 மணிக்கு பயிற்சி துவங்குகிறது. இதில் கொட்டில் முறை வளர்ப்பு, தீவன மேலாண்மை, சந்தைப்படுத்துதல் சார்ந்த, பல்வேறு கருத்துகள் இடம் பெறும், எளிய மொழி நடைமுறையில் விவசாயிகளுக்கு புரியும் விதத்தில், டிஜிட்டல் முறையிலான வகுப்புகளும் உள்ளன. இதில் பங்கேற்க, முன்பதிவு செய்வது அவசியம். விபரங்களைக்கு, 0422 266 9965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 நன்றி தினமலர் நாள் 2-5-2016

(தொடரும்)

இறைச்சி, முட்டை ரக கோழிகள் அறிமுகம்.

இறைச்சி, முட்டை ரக கோழிகள் அறிமுகம்.

கால்நடை பல்கலை பயிற்சி மையம் சார்பில், கோழிவிதைத் திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்பட்ட, இறைச்சி, முட்டை ரக கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது, நாட்டு கோழிகளை காட்டிலும், அதிக உற்பத்தியை தருவதால், விவசாயிகள் போட்டி போட்டுக் கொண்டு, பதிவு செய்வதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோழி வளர்ப்பு, அதிக லாபம் தரக்கூடிய சுய தொழிலாகும். பிராய்லர், நாட்டுக்கோழி முட்டை, இறைச்சிக்கு, சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. இதை கருத்தில் கொண்டு, கோழிவிதை திட்டத்தின் கீழ், உற்பத்தியை அதிகப்படுத்த, தரம் உயர்த்தப்பட்ட கோழிகளை அறிமுகம் செய்யும், ஆய்வுகள் நடந்தன.

இதன்படி, முட்டை, இறைச்சி ரகத்திற்கென பிரத்யேகமாக 'கிராம பிரியா', 'வனராசா' கோழியினங்கள், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இறைச்சி ரக வனராசா கோழி, இரு மாத த்திலேயே, 1.15 கிலோ எடையை பெறும். இதேபோல், கிராமபிரியா கோழிக்கு, அடைகாக்கும் தன்மை இல்லை. இது, அரு ஆண்டில், சராசரியாக 160  முட்டைகள் வரை, உற்பத்தி செய்யும் திறன் கொண்து என, ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கால்நடை பலகலை இணை பேராசிரியர் சிவக்குமார் கூறுகையில், 'தரம் உயர்த்தப்பட்ட வனராசா, கிராமபிரியா கோழி இனங்கள், புறக்கடை வளர்ப்புக்கு ஏற்ற ரகம் என்பதால், விவசாயிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதை சோதனைக்கு உட்படுத்தியதில், நோய் எதிர்ப்பு சக்தி, உற்பத்தி, வாழ்நாள் தன்மை, மற்றினங்களை காட்டிலும் கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை, 3400 கோழி குஞ்சுகள் விற்பனையாகியுள்ளன. புதிய ரக கோழி வேண்டி, 405 பேர் பதிவு செய்துள்ளனர். இதுசார்ந்த, கூடுதல் தகவலுக்கு, சரவணம்பட்டியில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது, 0422 266 9965 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்,'என்றார்.

நன்றி தினமலர்- நாள் 29-4-2016.

(தொடரும்)

Thursday, January 21, 2016

மூலிகை சாகுபடியில் மானியம்.

செங்காந்தள் மலர் (மூலிகை)

மூலிகை சாகுபடியில் மானியம்.

இந்தியாவில் மூலிகையின் தேவை அதிகரிக்கும் அளவு மூலிகை உற்பத்தியானது இல்லை. 90%  மேல் கம்பெனிகளின் தேவையானது இயற்கையாக காணப்படும் மூலிகைகளை சேகரித்து அனுப்புவதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. எனவே மூலிகை பயிரிடுதல் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆகையால் மூலிகைப்  பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு தேசிய மூலிகை பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது.

இவ்வாரியமனது அழிந்து வரும் அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75% ம், உற்பத்தி குறைந்து வரும் தீண்ட காலப்பயிர்களைக்கு 50% மும் மற்ற மூலிகைகளைக்கு 20%  மும் மானியம் வழங்குகிறது. மானியத்தை தனி விவசாயியாக அல்லாமல்  குழுவாக செயல்பட்டால் பெறுதல் எளிதாகும்.

தமிழ் நாட்டின் தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும் மூலிகைகள் மற்றும் அதனை ஒரு எக்டேரில் சாகுபதி செய்ய மூலிகை பயிர் வாரியத்தால் பரித்றைக்கப்பட்டுள்ள மானியத்தைக் காண்போம்.

வசம்பு- 20%, சோற்றுக்கற்றாழை-20%, பேர ரத்தை - 20%, சித்தரத்தை - 20%, தண்ணீர்விட்டான் கிழங்கு - 20%, வேம்பு - 20%, நீர்பிரம்மி -20%,  சாரணத்தி - 20%, சென்னா (அ) அவரி - 20%,  நித்திய கல்யாணி - 20%,  வல்லாரை - 20%,  சங்குபுஷ்பம் -20%,  மாகாளி - 20%,  வாவிலங்கம்- 20%,  நெல்லி -20%, சிறுகுறிஞ்சான் -20%,  நன்னாரி -20%, கச்சோலம் - 20%, பூனைக்காலி -20%,  துளசி - 20%,  கிழாநெல்லி - 20%,  திப்பிலி -20%,  செங்கொடிவேலி -20%, குறுந்தொட்டி - 20%,  மணத்தக்காளி - 20%,  சீனித்துளசி -20%,  நீர்மருது -20%,  தான்றி - 20%,  கடுக்காய் - 20%, சீந்தில் -20%,  நொச்சி - 20%,  வெட்டிவேர் - 20%,  அமுக்கிரா -20%,  வில்வம் - 50%,  வாகை -50%, மாவிலங்கம் - 50%,  கண்வலிக்கிழங்கு - 50%,  பாலா - 50%,  கொடிவேலி -50%,  வேங்கை - 50%,  நஞ்சறுப்பான் -50%,  சந்தன வேங்கை - 75%,  சந்தனம் - 75%,

குறிப்பு; விவசாயிகள் மேற்கண்ட மூலிகைகளை பயிரிடுவதற்கு தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

1. சந்தைப்படுத்த வாய்ப்புள்ள மூலிகைகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மானியத்தைக் கருத்தில் கொண்டு சாகுபடி செய்யக்கூடாது. சிறந்த மூலிகைக் கம்பனிகளுடன் ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது நல்லது.

2. இடவசதி மற்றும் நீர் வசதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. தரமான விதைகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

4. சாகுபடிமுறை, அறுவடை முறை, பதப்படுத்தும் முறை  மற்றும் செலவினங்களை மூலிகைகளை தேர்வு செய்யும் முன் அறிந்து கொள்வது அவசியமாகும்.

மானியம் பற்றிய விபரங்களை அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

ந. கணபதிசாமி,
மதுரை,
88700 12396.

நன்றி-தினமலர் விவசாயமலர் நாள் 20-01-2016.

---------------------------------------------------------------------(தொடரும்) 

Monday, October 12, 2015

1863, பதவிகளுக்கு டிச., 27 ல் தேர்வு.

1,863 பதவிகளுக்கு டிச., 27 ல் தேர்வு.

அரசு துறைகளில் 'குரூப்-2 ஏ' பிரிவில், 1,863 காலியிடங்களைக்கு, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த தேர்வில், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்  பாலசுப்ரமணியன் கூறியதாவது.

டி.என்.பி.எஸ். சி குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளில், 10 க்கு மேற்பட்ட துறைகளில் , 1863 காலியிடங்களுக்கு, டிசம்பர், 27 ல் தேர்வு நடக்கும்.

தேர்வு எழுத விரும்புவோர், 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே, நவ., 11 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை, நவ., 13 க்குள் செலுத்தலாம். தமிழக முழுவதும், 116 மையங்களில் தேர்வு நடக்கும்.

பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தேர்வில் பங்கேற்கலாம். தேர்வுக்கான தகுதி விவரங்களை,http://www.tnpscexams.net/  மற்றும்  http://www.tnpscexams.in/  என்ற இணையதள இணைப்புகளில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி- கோவை தினமலர் நாள் 13-10-2015.


Thursday, October 1, 2015

ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி.


ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி


ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி அக்., 7 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.

அவனாசிலிங்கம் ஜன் சிக்சன் சன்ஸ்தானில், ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர, அக., 7 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எட்டாம் வகுப்பு அல்லதுஉ அதற்கு மேல் படித்த ஆண்களுக்கு, டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட் பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி.,  அல்லது அதற்குமேல் படித்த ஆண்களுக்கு, சி.என்.சி., லேத் ஆப்ரேட்டர், டூல், டை மேக்கிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆறு மாதம் கொண்ட பயிற்சி காலத்தில் உதவித்தொகை வழங்ப்ப்படும், பயிற்சி முடித்தவுடன் வேலை வாய்ப்புக்கான ஏற்பாடு செய்து தரப்படும். வெளியூரில் வசிப்போருக்கு தொழிற்சாலையில் தங்கும் இடம் வளங்கப்படும்.

விண்ணப்பமாக வெள்ளைத் தாளில் பெயர், கல்வித் தகுதி, முகவரி மற்றும் பிறதகவல்கள் இருப்பின் அவற்றை குறிப்பிட்டு, ஐந்து ரூபாய் தபால் தலை ஒட்டிய, சுய முகவரியிட்ட இரு உறைகள் இனைத்து, 'இயக்குனர், அவினாசிலிங்கம்
ஐன்சிக்சன் சன்ஸ்தான், அவிநாசி ரோடு, கோவை-43' என்ற முகவரிக்கு, அக்., 7 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களைக்கு, 0422 2448858 என்ற போன் எண்ணிலும், www.avinashilingamjss.com  என்ற வலைதள முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்.

கோவை, தினமலர் நாள்- 30-09-2015. நன்றி.

--------------------------------------------------------------------------(தொடரும்)

Friday, August 28, 2015

கால்நடை துறையில் வேலைவாய்ப்பு.கால்நடை துறையில் வேலைவாய்ப்பு.

1,101  காலி பணியிடம் நிரப்ப முடிவு.

கால்நடை பராமரிப்புத் துறையில்  காலியாக உள்ள கால்நடை ஆய்வாளர், கால்நட் பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் தற்போது, 725 கால்நடை பராமரிப்பு உதவியாளர், 294 கால்நடை ஆய்வாளர் பயிற்சி,  36 அலுவலக உதவியாளர், 24 கதிரியக்கர் (ரேடியோகிராபர்} உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

 மொத்தம், 1,101 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால்,
இதற்கு, 18 முதல் 30 வயதுக்கு உடபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கால்தடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு, எட்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ண்ணப்பிக்காலம். கதிரியக்கர், ஆய்வக உடனாள், ஆய்வுக்கூட தொழில்நுட்பர், மின்னாளர் போன்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பயிற்சி அனுபவமும், கட்டாயமாக தேவைப்படுகிறது. மேலும், கால்நடை ஆய்வாளர் பயிற்சி பணிக்கு விண்ணபிக்க பிளஸ் 2  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியார் மற்றும் கால்நடைப்பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் அடிப்படையிலும், மற்ற பணிகளுக்கு எழுத்து தேரவு நடத்தப்பட்டு அதிக மதிபெண் பெறுபவரகள் இனச்சுழற்சி அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்த்திலுள்ள மண்டல இணைய இயக்குனர் அலுவலகம் மற்றும் கோட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களில், 10 ரூபாய் செலுத்தி நேரிலோ, தபால் மூலமாகவோ, செப்., 15 வரை பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tn.gov.in    என்ற இணையதளத்தில் கட்டணமின்றி விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய விண்ணப்பங்களை இயக்குனர், கால்நட் பராமரிப்பு (ம)  மருத்துவ பணிகள், மத்திய அலுவலக கட்டிடம், பகுதி 2, டி.எம், எஸ். வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

நன்றி கோவை தினமலர் நாள் 28-08-2015.

Sunday, August 16, 2015

மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரிக்க பயிற்சி.


மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரிக்க பயிற்சி.

தமிழ் நாடு வேளாண்பலகலையில், நெல்லிக்காயிலிருந்து மதிப்பபூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 19 ம் தேதி துவங்குகிறது.

  தொழில் துவங்க, ஆர்வம் உள்ளவர்களுக்கு, கோவை, வேளாண் பல்கலையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், இந்த மாதத்திற்கான பயிற்சியாக, நெல்லியிலிருந்து பழரச, தயார்நிலை பானம், ஜாம், அல்வா, பட்டர், கேண்டி, மிட்டாய் பொடி, துருவல் தயாரித்தல், தொழில் உரிமத்ததிற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப் படுகிறது. . ஆர்வம் உள்ளவர்கள் 1500 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் வந்து பெயர் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சி கட்டணத்தை  ' பேராசிரியர் மற்றும் தலைவர், ஆறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை'  என்ற பெரில் 'டிடி'  எடுத்து வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராச்சி நிலையம், வேளாண் பல்கலை, கோவை-3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422-66113400422-6611340, 6611268 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


நன்றி தினமலர் நாள் 16-08-2015.