Showing posts with label முட்டை ரக கோழிகள் அறிமுகம்.. Show all posts
Showing posts with label முட்டை ரக கோழிகள் அறிமுகம்.. Show all posts

Monday, May 2, 2016

இறைச்சி, முட்டை ரக கோழிகள் அறிமுகம்.

இறைச்சி, முட்டை ரக கோழிகள் அறிமுகம்.

கால்நடை பல்கலை பயிற்சி மையம் சார்பில், கோழிவிதைத் திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்பட்ட, இறைச்சி, முட்டை ரக கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது, நாட்டு கோழிகளை காட்டிலும், அதிக உற்பத்தியை தருவதால், விவசாயிகள் போட்டி போட்டுக் கொண்டு, பதிவு செய்வதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோழி வளர்ப்பு, அதிக லாபம் தரக்கூடிய சுய தொழிலாகும். பிராய்லர், நாட்டுக்கோழி முட்டை, இறைச்சிக்கு, சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. இதை கருத்தில் கொண்டு, கோழிவிதை திட்டத்தின் கீழ், உற்பத்தியை அதிகப்படுத்த, தரம் உயர்த்தப்பட்ட கோழிகளை அறிமுகம் செய்யும், ஆய்வுகள் நடந்தன.

இதன்படி, முட்டை, இறைச்சி ரகத்திற்கென பிரத்யேகமாக 'கிராம பிரியா', 'வனராசா' கோழியினங்கள், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இறைச்சி ரக வனராசா கோழி, இரு மாத த்திலேயே, 1.15 கிலோ எடையை பெறும். இதேபோல், கிராமபிரியா கோழிக்கு, அடைகாக்கும் தன்மை இல்லை. இது, அரு ஆண்டில், சராசரியாக 160  முட்டைகள் வரை, உற்பத்தி செய்யும் திறன் கொண்து என, ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கால்நடை பலகலை இணை பேராசிரியர் சிவக்குமார் கூறுகையில், 'தரம் உயர்த்தப்பட்ட வனராசா, கிராமபிரியா கோழி இனங்கள், புறக்கடை வளர்ப்புக்கு ஏற்ற ரகம் என்பதால், விவசாயிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இதை சோதனைக்கு உட்படுத்தியதில், நோய் எதிர்ப்பு சக்தி, உற்பத்தி, வாழ்நாள் தன்மை, மற்றினங்களை காட்டிலும் கூடுதலாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை, 3400 கோழி குஞ்சுகள் விற்பனையாகியுள்ளன. புதிய ரக கோழி வேண்டி, 405 பேர் பதிவு செய்துள்ளனர். இதுசார்ந்த, கூடுதல் தகவலுக்கு, சரவணம்பட்டியில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது, 0422 266 9965 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்,'என்றார்.

நன்றி தினமலர்- நாள் 29-4-2016.

(தொடரும்)