Monday, November 21, 2011

மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி.

TNAU.



மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்பலையில் மசாலாபொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி, வரும் 23,24ம் தேதிகளில் நடக்கிறது.

மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் மற்றும் பலவகை காய்கறி ஊறுகாய் தயாரிப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ஆயிரம் ரூபாய் பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் வர இயலாதவர்கள் பயிற்சிக் கட்டணத்தை வரைவோலை மூலம் முதன்மையர், வேளாண் பொறியியல் கல்லூரி எனும் பெயரில், கோவையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து பேராசிரியர் மற்றும், தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்ப மையம், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை-641003 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள கடைசி நாள் நவ.22. கூடுதல் தகவல் பெற 0422-6611268 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------(தொடரும்)

Friday, November 18, 2011

தொழில் சார் மரம் வளர்ப்பு பயிலரங்கம்

Dr..பார்த்தீபன்.




தொழில் சார் மரம் வளர்ப்பு பயிலரங்கம்.

மரம் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு தொழில்நுட்பம் குறித்து, ஒரு நாள் இலவச பயிலரங்கம். வரும் 29 ம் தேதி மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் நடக்கிறது.

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்துடன் இணைந்த, தொழிற்சாலைக்குத் தேவையான மரங்கள், வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டு தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி முகாமை நடத்துகிறது. பயிற்சி முகாமில் மரக்கூழ் காகித மரங்கள் மற்றும் தீக்குச்சி மரங்கள் வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் வனக்கல்லூரி விஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளது.

இதில் தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் பயிரிடப்படும் மரங்கள் வளர்ப்பு முறைகள், மண், உரம், நீர் மேலாண்மை, பூச்சி, நோய் கட்டுப்பாடு மற்றும் மரக் கழிவுகளில் இருந்து  மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படும். மரம் சார்ந்த ஒப்பந்த முறை சாகுபடி, மரம் சார்ந்த சந்தை விலை, இணையதள பயன்பாடுகள் பற்றியும் விளக்கம் தரப்படும்.

வரும் 29 ம் தேதி நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பெயரை, முதல்வர், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் என்ற முகவரிக்கு தபாலில், திட்ட அலுவலர் பார்த்திபனை போனில் 04254-271505, 222010, 94435 05844 ஆகிய எண்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, வனக்கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.
---------------------------------------------------------------------------(தொடரும்)

Thursday, October 27, 2011

கோலியஸ் வியாபாரம்



விவசாய அன்பர்களே!

நான் ஏற்கனவே கோலியஸ் அதாவது மருந்துக்கூர்கன் பற்றி எழுதியுள்ளேன். அதன் வளர்ப்புப் பற்றியும் கொடுத்துள்ளேன். அந்தக் கிழங்கைப் பற்றி கொள்முதல் செய்யும் வியாபாறி பற்றி எழுதியுள்ளேன். தற்போது இன்னும் ஒரு வியாபார நிறுவனம் முன் வந்துள்ளதை  பின்னால் கொடுத்துள்ளேன். பயனைடைய எனது வாழ்த்துக்கள்.

பயிர் செய்வீர்   ----------------------------------------பயனடைவீர்!!

விவசாய பெருமக்களுக்கு ஓர் நற்செய்தி.

சமி லேப்ஸ் லிமிடெட் கோலியஸ் கிழங்கு சாகுபடியை முதன் முதலில் அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திய நிறுவனம்.

கடந்த ஆண்டைப்போன்று சமி லேப்ஸ் லிமிடெட் இந்த ஆண்டும் கோலியஸ் ஈரக்கிழங்கினை சுமார் 15,000 டன் அளவில் சந்தை நிலவரத்திற்கேற்ப உச்சவிலை நிர்ணயம் செய்து, விவசாயிகள் மற்றும் முகவர்களிடமிருந்து கொள்முதல் செய்யவுள்ளது விவசாயிகளின் நலத்திற்கேற்ப  கள்ளக்குறிச்சி மற்றும் மேலும் பல இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கவுள்ளது.

மேலும் கோலியஸ் கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எங்கள் நிறுவனம் அரசு மானியம் மற்றும் பயிர் பாதுகாப்பு பெற விவசாயிகளுக்கு உதவி புரியும் என மகழிச்சியுடன் தெறிவித்துக் கொள்கிறோம்.

கோலியஸ் கிழங்கின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்து பயன் அடையுமாறு வேண்டுகிறோம்

இப்படிக்கு,
டாக்டர் முகமது மஜீத்,
நிறுவனர் – மேலாண்மை இயக்குனர்,
சமி லேப்ஸ் லிமிடெட்,
பெங்களூர் -560 058.

தொடர்புக்கு-
டாக்டர்  முத்துராமன்
போன்-9750940564 & 09632372130
திரு முகமது இப்ராஹிம்
போன்-9750940563
திரு  வேல்முருகன்
போன்-9715533555
திரு முத்துராமன்
போன்- 9750950560

---------------தரமே எங்களின் தாரக மந்திரம்---------------------------------------

-------------------------------------------------------------------------( (தொடரும்)

Sunday, September 18, 2011

மண்பரிசோதனை.


மண் பரிசோதனை மற்றும் தொழில் நுட்ப ஆலோசனை மையம்
மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகம் கோயமுத்தூர்-3   

முனைவர் ஆர். சாந்தி அவர்கள் 16-9-2011 அன்று மரம், மூலிகைவளர்ப்போர் சங்க மாதாந்திர கருத்தாய்வு கூட்டத்தில் பல்கலை வழாகத்தில் ஆற்றிய உரை.
 தொடரும்-


Friday, September 2, 2011

இயற்கை..

டாக்டர் திரு குமாரவேல் ஆற்றிய இயற்கையின் ஆற்றல் பற்றி.........


Thursday, August 11, 2011

மூங்கில்-சட்டை

இந்த மூங்கில் சட்டை அணிந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்குமாம்.  ஆனால்
ஒரு சட்டையின் விலை ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேல்.

Thursday, July 21, 2011

உழவர் தின கொண்டாட்டம்




உழவர் தின கொண்டாட்டம்.

நாள்- 22-7-2011, 23-7-2011 மற்றும் 24-7-2011.

இடம்- தமிழ் நாடு வேளாண் பல்கலை, கோவை-641003. மாநில அளவிலான பங்கேற்புகள். பொருட்காட்சி வழாகம்.

பங்கேற்புகள்- வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்கள், தோட்டக்கலை புதிய பயிர் ரகங்கள், பண்ணைக் கருவிகள், மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப முறைகள்.  வேளாண்மை செம்மல் விருதும் வழங்கப்படும். வேளாண் தொழில் நுட்பங்கள், கால்நடை, தோட்டக்கலை தொடர்பான கண்காட்சியும் நடைபெரும்.
விவசாயிகள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

 ((தொடரும்)

Wednesday, July 6, 2011

செலவில்லா மருத்துவம்.



செவிவழி தொடு சிகிச்சை.

செவிவழி தொடு சிகிச்சை என்றால் என்ன?
உலகத்தில் இதுவரை எந்த நோயாக இருந்தாலும் மருந்து மாத்திரை, தியானம்,யோகா, மூச்சு பயிச்சி, அக்குபஞ்சர், ரேயிக்கி, மூலகை, முத்திர, நியூரேதெரப்பி, தொடு வர்மம், மற்றும் பல வழிகழில் சிகிச்சை செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த செவி வழிதொடு சிகிச்சை என்பது மேலே சொல்லப்பட்ட எந்த முறையும் இல்லை. 

உப்பு, புளி, காரம் குறைக்கத் தேவையில்லை, பத்தியமும் இல்லை, வாக்கிங் தேவையில்லை. சர்க்கரை மற்றும் அனைத்து நோயாழிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்குப் பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுதும் தாராளமாக சாப்பிடலாம்.

ஒரே ஒரு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் இரண்டாவது முறை சிகிச்சை எடுக்க அவசயமில்லை.

இந்த சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.
இந்த செவிவழி தொடு சிகிச்சையில் நோய்களுக்கு எந்த நோயாக இருந்தாலும் ஹீலர் பாஸ்கர் அவர்கள்  4- மணி நேரம் பேசுவதை தொடர்ந்து கேட்க வேண்டும். அவர் பேசும் வார்த்தைகள் நோயாழியின் காது(செவி) வழியாகச் சென்று மருந்தாக வேலை செய்து நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்.

சிகச்சை பெற்றுக்கொள்வது எப்படி?

வழி-1. (இந்தியா – 9944221007, 9842452508) (மலேசியா – போன்-012-6646107) என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் இலவச சிகிச்சை நடக்கும் நாள் மற்றும் இடத்தை தெரிந்து கொண்டு நேரில் வரலாம்.

வழி-2.  நேரில் வரமுடியாத நோயாழிகளும் மருத்துவத் துறையில் உள்ளவர்களும் டிவிடி-ஐ விபிபி அஞ்சல் மூலம் பெற்று உங்கள் வீட்டில் இருந்தபடியே ச்கிச்சை பெறலாம்.

வழி -3  500 பேர் ஒன்று சேர்ந்து அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவச சிகிச்சை அளிகப்படும் (வீடு, ஆசிரமம், அப்பார்ட்மெண்ட், கல்லூரி, பள்ளி, முதியோர் இல்லம், அலுவலகம்)

வழி-4  முழு சிகிச்சை முறையை www.anatomictherapy.org என்ற இணைய தளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
---------------------------------------------------------------------------------------((தொடரும்)