Dr..பார்த்தீபன். |
தொழில் சார் மரம் வளர்ப்பு பயிலரங்கம்.
மரம் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு தொழில்நுட்பம் குறித்து, ஒரு நாள் இலவச பயிலரங்கம். வரும் 29 ம் தேதி மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் நடக்கிறது.
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்துடன் இணைந்த, தொழிற்சாலைக்குத் தேவையான மரங்கள், வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டு தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி முகாமை நடத்துகிறது. பயிற்சி முகாமில் மரக்கூழ் காகித மரங்கள் மற்றும் தீக்குச்சி மரங்கள் வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் வனக்கல்லூரி விஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளது.
இதில் தொழிற்சாலை சார்ந்த வேளாண்காடுகள் பயிரிடப்படும் மரங்கள் வளர்ப்பு முறைகள், மண், உரம், நீர் மேலாண்மை, பூச்சி, நோய் கட்டுப்பாடு மற்றும் மரக் கழிவுகளில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படும். மரம் சார்ந்த ஒப்பந்த முறை சாகுபடி, மரம் சார்ந்த சந்தை விலை, இணையதள பயன்பாடுகள் பற்றியும் விளக்கம் தரப்படும்.
வரும் 29 ம் தேதி நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பெயரை, முதல்வர், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் என்ற முகவரிக்கு தபாலில், திட்ட அலுவலர் பார்த்திபனை போனில் 04254-271505, 222010, 94435 05844 ஆகிய எண்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, வனக்கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.
---------------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment