Thursday, October 29, 2009

வேளாண் தேசிய மாநாடு

கோவையில் வேளாண் தேசிய மாநாடு.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்
வரும் நவம்பரில் 6,7,8 ஆகிய தேதிகளில் வேளாண்மை
அறிவியல் நிலையங்கிளின் தேசிய மாநாடு நடக்கவுள்ளது.

முதல் நாள் நிகழ்சியில் தமிழக முதல்வர் கலந்து
கொளிகிறார். மத்திய வேளாண் மற்றும் நுகர்வோர்
நலம், உணவு மற்றும் பொது வினையோக அமைச்சர்
திரு சரத்பவார் வேளாண் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த வேளாண் விஞ்ஞானிகள்
பங்கேற்கின்றனர். மாநாட்டில் வேளாண் அறிவியல் நிலைய
விஞ்ஞானிகளின் அனுபவங்கள்,வெற்றிக் கதைகள், சிறப்பு
தொழில் நுட்ப பறிமாற்றம் குறித்த கருத்துப் பறிமாற்றம்
நடைபெறும்.

வேளாண் பல்கலை துணைவேந்தர் திரு முருகேசபூபதி
மேலும் கூறியதாவது-

தேசிய அளவில் 569 வேளாண் அறிவியல் நிலையங்கள்
இயங்கி வருகின்றன. அதில் 30, தமிழகத்தில் உள்ளன
இதில் 14, கோவை வேளாண் பல்கலை கட்டுப்பாட்டில்
உள்ளது. தேசிய அளவிலான 569 வேளாண் அறிவியல்
நிலையங்களின் சார்பில் விஞ்ஞானிகள் இம்மாநாட்டில்
பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் துவக்கவிழாவில், தலை
சிறந்த வேளாண் அறிவியல் நலையங்களுக்கான விருதுகள்
வழங்கப்படும். பல்கலை வளாகத்தில் 150 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உழவர் இல்லம் திறந்து
வைக்கப்படும்.------------------------(விவசாயம் தொடரும்)

Wednesday, October 14, 2009

நவீன தொழில்நுட்பங்கள்

பனிவரகு கோ.5

சாகுபடி :- இந்த ரகத்தின் சிறப்பம்சங்கள்; மிகக்குறுகிய
வயது-70 நாட்கள். அதிக தூர்கள்- 4 - 10. அதிக கதிர்
நீளம் 135 செ.மீ. அதிக ஊட்டச்சத்து கொண்டது
அதிக மகசூல். திரட்சியான மஞ்சள் நிற தானியம்.
வறட்சியைத் தாங்கும் தன்மை. பூச்சி மற்றும் நோய்
களைத் தாங்கி வளரும் தன்மை.

பருவம் :-ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம்.

நிலம் தயாரித்தல் :- செம்மண் மற்றும் இரு மண் கலந்த
நிலங்கள் ஏற்றவை. கோடை மழையைப் பயன் படுத்தி
நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு
செய்ய வேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம்
தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் களைகள்
கட்டுப்படுத்தப் படுகின்றன.

விதையளவு :- வரிசை விதைப்புக்கு-ஏக்கருக்கு 4 கிலோ.
தூவுவதற்கு-6 கிலோ. இடைவெளி; வரிசைக்கு வரிசை 25
செ.மீ. செடிக்குச்செடி 10 செ.மீ. கை விதைப்பு அல்லது
விதைப்பான் அல்லது கொரு கருவி கொண்டு வரிசை
விதைப்பு செய்யலாம். ஒரு ஏக்கருக்குத் தேவையான
விதையளவிற்கு ஒரு பொட்டலம் (200) கிராம் அசோ
பாசை அரிசிக்கஞ்சியுடன் கலந்து தூவ வேண்டும்.

உரமிடுதல் :- ஒரு ஏக்கர் நிலத்தில் அடியுரமாக 5 டன்
மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது
பரப்பி பிறகு நிலத்தை உழவேண்டும்.பின்னர் 8 கிலோ
மணிசத்து ஆகியவற்றை விதைப்பின் போது அடியுரமாக
இட வேண்டும். மேலுரமாக 8 கிலோ தழைசத்தை
விதைத்த 20-25 நாட்கள்கழித்து கிடைக்கும் ஈரப்பத்த்தை
பயன்படுத்தி இடவேண்டும்.

பயிர் கலைத்தல் :- விதைத்த 12-15ம் நாளில் செடிகளை
கலைத்து தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க
வேண்டும்.

களைநிர்வாகம் :- விதைத்த 18-20ம் நாள் ஒரு களை
எடுத்தல் அவசியம்.

பயிர்பாதுகாப்பு :- இந்த ரகத்தைப் பொதுவாக பூச்சிகள்
மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. எனவே பயிர்
பாதுகாப்பு செய்ய வேண்தியதில்லை.

அறுவடை :- நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை
செயுது களத்தில் காயவைத்து பின் விதைகளைப் பிரித்
தெடுக்க வேண்டும்.

தானிய மகசூல் :- மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு 953 கிலோ.

தட்டை மகசூல் :- மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு 2670 கிலோ.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,
மற்றும் திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில்
மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்றது.

(தகவல்-அ.நிர்மல்குமார், ப.தேவன் மற்றும் ரா.சத்யா,
சிறுதானியத்துறை, தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்
கழகம், கோயம்புத்தூர்-641 003. போன் 0422-24505507.)

---------------------------------(தொடரும்)

Tuesday, October 13, 2009

உயர்தர மரக்கன்று உற்பத்தி

-------------------------------(பயிற்சிமுடித்து நிழற்படம்)
உயர்தர மரக்கன்று உற்பத்தி.’

கோயம்புத்தூர், இரத்தினசபாபதிபுரம்,
கௌலிபிரௌன் சாலை அருகே
வனவளாகத்தில் ‘வனமரபியல் மற்றும்
மரப்பெருக்கு நிருவனம்’ (I.F.G.T.B.)
சுமார் 30 விவசாயிகளுக்கு மேல்
உயர்தர மரக்கன்று உற்பத்தி செய்வது
பற்றித் தொழில் நுட்பங்கள் மற்றும் பல
தகவல்கள் சென்ற 8-10-2009 மற்றும்
9-10-2009 தேதிகளில் விஞ்ஞானி
கள் வகுப்பறை விளக்கமும்,
கலந்துறையாடலும் செயல்முறை விளக்கமும்,


மரப்பண்ணை சுற்றுலாவும் சிறப்பாக அளித்
தார்கள். இந்த பயிற்சியின் இன்றி
யமையாயது குழுப்புகைப்படத்துடன் சான்றிதழும்
அளித்தது விவசாயிகளின் வாழ்வில் மறக்க
முடியாத ஒன்று. மேலும் இந்த நிறுவனத்தின்
இயக்குனர் திரு. என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ்.
அவர்கள் இந்தப் பயிற்சிக்கு மிகவும்
உருதுணையாக இருந்து பல அறிவுறைகள்
அளித்தார்கள். இந்த நிறுவனம் காரமடை
அருகே ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளது.
அதில் பல அறிய செயல்களையும் ஆராய்ச்
சிகளையும் செய்து விவசாயிகள் பலரையும்
தன்வயம் (I.F.G.T.B.பக்கம்) இழுக்கும்
என்பதில் ஐய்யமில்லை.
திரு. என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ். அவர்
கள் இந்த 2 நாட்கள் பயிற்சிக்கு தலைமை
யேற்றுத் தொடங்கிவைத்து ஆற்றிய உரையில்
சில துளிகள்.

நமது நாட்டின் பரப்பளவில் 23 சதவீதமே
வனங்களைத் தாங்கியுள்ளது. அவ்வனங்க
ளும் கால்நடை மேய்ப்பு, மரம்
வெட்டுதல், வேட்டையாடுதல், காட்டுத்தீ
போன்ற பல்வெறு விதமான இன்னல்
களுக்கிடையே வளர்ந்து வருகின்றன.
இத்தகைய காரணங்களால் நமது காடு
களின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு
ஒரு எக்டேரில் 2.1 கனமீட்டருடன் ஒப்பிடும்
பொழுது இது மிகவும் குறைந்த தாகும்.
இத்தகைய காடுகளிலிருந்து நமது தேவை
களைப் பூர்த்தி செய்வதாயிருந்தால்
அவை மேலும் நலிவடைய நேரும்.

இயற்கையான காடுகளில் இருந்து நமது
தேவைகளைக் குறைக்க ஒரு வழி வன
மரத்தோட்டங்கள் ஏற்படுத்துவதே யாகும்.
இத்தகைய தோட்டங்களை விவசாயம்
செய்ய இயலாது தரிசு நிலங்களில் உருவாக்க
இயலும். நீர் பற்றாக் குறை, ஆள் பற்றாக்குறை,
குறைந்து வரும் உற்பத்தித் திறன் மற்றும்
வருமானம் போன்று பல இன்னல்களை
விவசாயம் சந்தித்துவரும் வேளையில்
விவசாய நிலங்களிடையே மரவளர்ப்பு பெரும்
பெருமளவில் உதவக்கூடும். இவ்வாறு வனத்
தோட்டங்கள் மற்றும் விவசாய நிங்களிலே
மரவளர்ப்பு போன்ற திட்டங்கள் செயல்
பட முக்கியத் தேவை தரமான நாற்றுக்களே.
மரபுத்திறன், செயல் திறன் மற்றும் தோற்றம்
இவற்றில் சிறந்து விளங்கும் மரக்கன்றுகளை
வளர்ப்பதன் மூலம் நமது மரவளர்ப்பில்
உற்பத்தித் திறனை ஆண்டு ஒன்றுக்கு
ஒரு எக்டேரில் இருபதிலிருந்து மூப்பது கன
மீட்டர் வரை உயர்த்த இயலும். இத்தகைய
தோட்டங்கள் பெருகினாலே நமது நாட்டின்
மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்களின்
தேவையைப் பூர்த்தி செய்ய இயலும். மேலும்
இதனால் மரம் சார்ந்த தொழிற்சாலைகளும்
நன்கு இயங்க இயலும். இத்தகைய
தோட்டங்கள் கிராமப்புரங்களில் அமைவ
தால் ஊரக வளர்ச்சிக்கும் உதவும். மேலும்
நமது நாட்டின் பரப்பளவில் 33 சதவீதம் காடு
கள் அமைய வேண்டும் என்ற கொள்கையை
அடையவும் வழிகோலும்.

இவ்வாறு வனத்தோட்டங்களின் மற்றும்
விவசாய நிலங்களிலுள்ள மரப்பயிர்
சாகுபடியின் உற்பத்தித்திறனை பெருக்கும்
நோக்கதுதுடன் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் கோவையில் செயல்பட்டு வருகிறது.
இங்கு 70 தலைப்பில் ஆராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன. ஆராய்ச்சியன் முடிவுகள்
சிறந்தவை கிராம மக்களுக்குச் சென்றடாய
வேண்டும் என்று கூறினார்.
--------------------------------(தொடரும்.)