Wednesday, October 14, 2009

நவீன தொழில்நுட்பங்கள்

பனிவரகு கோ.5

சாகுபடி :- இந்த ரகத்தின் சிறப்பம்சங்கள்; மிகக்குறுகிய
வயது-70 நாட்கள். அதிக தூர்கள்- 4 - 10. அதிக கதிர்
நீளம் 135 செ.மீ. அதிக ஊட்டச்சத்து கொண்டது
அதிக மகசூல். திரட்சியான மஞ்சள் நிற தானியம்.
வறட்சியைத் தாங்கும் தன்மை. பூச்சி மற்றும் நோய்
களைத் தாங்கி வளரும் தன்மை.

பருவம் :-ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம்.

நிலம் தயாரித்தல் :- செம்மண் மற்றும் இரு மண் கலந்த
நிலங்கள் ஏற்றவை. கோடை மழையைப் பயன் படுத்தி
நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு
செய்ய வேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம்
தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் களைகள்
கட்டுப்படுத்தப் படுகின்றன.

விதையளவு :- வரிசை விதைப்புக்கு-ஏக்கருக்கு 4 கிலோ.
தூவுவதற்கு-6 கிலோ. இடைவெளி; வரிசைக்கு வரிசை 25
செ.மீ. செடிக்குச்செடி 10 செ.மீ. கை விதைப்பு அல்லது
விதைப்பான் அல்லது கொரு கருவி கொண்டு வரிசை
விதைப்பு செய்யலாம். ஒரு ஏக்கருக்குத் தேவையான
விதையளவிற்கு ஒரு பொட்டலம் (200) கிராம் அசோ
பாசை அரிசிக்கஞ்சியுடன் கலந்து தூவ வேண்டும்.

உரமிடுதல் :- ஒரு ஏக்கர் நிலத்தில் அடியுரமாக 5 டன்
மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது
பரப்பி பிறகு நிலத்தை உழவேண்டும்.பின்னர் 8 கிலோ
மணிசத்து ஆகியவற்றை விதைப்பின் போது அடியுரமாக
இட வேண்டும். மேலுரமாக 8 கிலோ தழைசத்தை
விதைத்த 20-25 நாட்கள்கழித்து கிடைக்கும் ஈரப்பத்த்தை
பயன்படுத்தி இடவேண்டும்.

பயிர் கலைத்தல் :- விதைத்த 12-15ம் நாளில் செடிகளை
கலைத்து தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க
வேண்டும்.

களைநிர்வாகம் :- விதைத்த 18-20ம் நாள் ஒரு களை
எடுத்தல் அவசியம்.

பயிர்பாதுகாப்பு :- இந்த ரகத்தைப் பொதுவாக பூச்சிகள்
மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. எனவே பயிர்
பாதுகாப்பு செய்ய வேண்தியதில்லை.

அறுவடை :- நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை
செயுது களத்தில் காயவைத்து பின் விதைகளைப் பிரித்
தெடுக்க வேண்டும்.

தானிய மகசூல் :- மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு 953 கிலோ.

தட்டை மகசூல் :- மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு 2670 கிலோ.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,
மற்றும் திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில்
மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்றது.

(தகவல்-அ.நிர்மல்குமார், ப.தேவன் மற்றும் ரா.சத்யா,
சிறுதானியத்துறை, தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்
கழகம், கோயம்புத்தூர்-641 003. போன் 0422-24505507.)

---------------------------------(தொடரும்)

No comments: