Friday, November 27, 2009

தசகவ்யா


தசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின்
சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால்
பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது.
இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான
பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும்
அதிகரிக்கின்றது.

தசகவ்யா தயாரிக்கும் முறை.


தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய்
களையும்விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக்
கொள்ளவேண்டும். அவைகளானவை.

ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg.

ஊமத்தை (Datyra metal) 1 kg.

நொச்சி (Vetex negundo) 1 kg.

வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg.

வேப்பிலை (Azadirachta indica) 1 kg.


மேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும்
1 : 1.5 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக்
தொட்டியில் ஊரவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து
தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை
தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.தயாரித்த
சாறுகளை பஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து
25 நாட்களிக்கு வைத்திருக்க வேண்டும். இதை ஒரு
நாளைக்கு ஒரு முறை கிளறிவிடவேண்டும். 25 நாட்
களுக்குப் பிறகு 3 சதவீதக்கரைசலைத் தெளிப்பதற்கு
பயன்படுத்தலாம்.

பயன்கள்

1. தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து
பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும்
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால்
பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.

2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி,
சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக
அளவில் கிடைக்கிறது.

3. தசகவ்ய தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும்
மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின்
எண்ணிக்கை அதிகமாகும்.


Wednesday, November 18, 2009

பஞ்சகவ்யா.



பஞ்சகவ்யா தொடர்ச்சி

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை.

தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய தொழில் நுட்பத்தில் அனுபவம்
வாய்ந்த, இயற்கை வழிச்சாகுபடியாளர்களின் சீரிய செயல்
முறைகளின் அடிப்படையில், கீழ் காணும் மூலப்பொருட்
கள் மற்றும் உற்பத்தி முறைகளைக் கொண்டு பஞ்சகவ்யா
தயாரிக்கப்படுகிறது.

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்க தேவையான பொருட்கள்.

பசுஞ்சாணம் ------------------------- 5.0 கிலோ

பசுவின் கோமையம் ------------------ 5.0 லி

பசும்பால் ---------------------------- 2.0 லி

தயிர் -------------------------------- 2.0 லி

நெய் -------------------------------- 1.0 லி

கரும்புச்சாறு ------------------------- 3.0 லி

தென்னை இளநீர் --------------------- 3.0 லி

வாழைப்பழம் ------------------------ 2.0 கிலோ


பசுஞ்சாணிஐந்து கிலோவுடன் பசு மாட்டு நெய் ஒரு
லிட்டரைக் கலந்து, பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில்
நான்கு நாட்கள் வைத்து தினம் காலை மாலை இரு முறை
இதைப் பிசைந்து விட வேண்டும். ஐந்தாவது நாள் மற்ற
பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண் பானை
அல்லது சிமெண்டுத் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி
யில் போட்டு நன்கு கரைத்து கலக்கி, கம்பி வலையால்
அல்லது நைலானாலான கொசுவலையை கொண்டு மூடி
நிழலில் வைக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை வீதம்
காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட
வேண்டும். இது பிராணவாயுவை பயன் படுத்தி வாழும்
நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது. இந்த
முறையில் முப்பது நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.

பஞ்சகவ்யாவின் இயல்வேதிப் பண்புகளை ஆராய்ததில்
அதில் பயிருக்குத்தேவையான தழை, மணி, சாம்பல்
சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் பயிர்
வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம்
மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் இருப்பது
கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யாவில் கரும்புச்சாறு
வெல்லம் ஆகியவை ஒரு பாகமாக சேர்ப்பதால்
அது அமிலதன்மையுடன் உள்ளது. எனவே நொதிக்கும்
நுண்ணுயிர்களான ஈஸ்ட் மற்றும் லாக்டோபேசில்லஸ்
ஆகியவையும் பஞ்சகவயாவில் அதிகம் காணப்படு
கின்றன. லாக்டோபேசில்லஸானது அங்கக அமிலங்
கள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பிற நோய்
எதிர்ப்புப் பொருடகளையும் உற்பத்தி செய்கிறது.
இப்பொருட்கள் நோய்க் கிருமிகளை எதிருக்கும் திறன்
பெற்றதோடு உயிர் வளர்ச்சி ஊக்கிகளாகவும் செயல்
படுகிறது. இதோடு ஐசோபிரின் கூட்டுப் பொருட்களும்
பஞ்சகவ்யாவில் உள்ளன.

ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை உற்பத்தி செய்ய ஆகும்
செலவு சுமார் 35 முதல் 40 ரூபாய் ஆகும். மேலும்
விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளிலிருந்து
கிடைக்கும் பொருட்களிலிருந்து மிகப் பெரிய அளவில்
பஞ்சகவ்யாவை தயாரித்து பயன் பெற முடியும்.
பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகவ்யா தெளிக்கும்
முறையானது வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்க
ருக்கு பயிர்களுக்கு 3.5 லிடர்ரும், மரங்களுக்கு 4.7
லிட்டரும் ஒரு தடவை தெளிப்பதற்கு தேவைப்படும்
பஞ்ணகவ்யாவை 3 சதவீதக் கரைசலாக (1 லிட்டர்
தண்ணீருக்கு 30 மில்லி பச்ணகவ்யா) கலந்து 15-30
நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
பஞ்சகவ்யாவானது ஏராளமான நுண்ணூட்ட சத்துக்
களையும் வளர்ச்சியூக்கிகளையும், நுண்ணுயிர்களையும்
மற்றும் அங்கக தனிமங்களையும் கொண்டுள்ளது.
இதுவே தாவரங்களின் அதிகப்படியான வளர்ச்சியையும்
மகசுலையும் கொடுப்பது மட்டுமல்லாமல் பயர்களையும்,
மரங்களையும், பூச்சி மற்றும் நோய்களிடமிருந்து பாது
காத்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத, பூச்சி மற்றும்
நோய் கொல்லியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் பெரும்
பங்கு வகிக்கிறது.


அடுத்து 'தசகவ்யா' தொடரும்.

Friday, November 13, 2009

பஞ்சகவ்யா.



பஞ்சகவ்யா.

கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் (IFGTB)" அக்டோபர் மாதம் 8,9 தேதிகளில் இரண்டு
நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் தரமான மரக்கன்று
உற்பத்தியில் 'பஞ்சகவ்யா' பற்றி திரு. பன்னீர் செல்வம் அளித்த
விளக்கம் பின்வருமாறு-
ந்மது முன்னோர்களின் அனுபவ அறிவானது மனித இனம் மட்டு
மின்றி விலங்கு மற்றும் தாவர இனத்தின் நலம் காக்கும் அறிவுப்
பெட்டகமாக திகழ்கிறது. விருக்சாயுர்வேதா என்பது அத்தகைய
அனுபவ அறிவு குறிப்புகளின் ஓர் தொகுப்பாகும். இது இயற்கை
சக்திகளான பஞ்சபூத த்தோடு (நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும்
ஆகாயம்) இயைந்த விவசாய் மூறைகளை வலியுறுத்துகின்றது.
பசுமை புரட்சி என்ற பெயரில் உணவு தானிய உற்பத்தியை பெருக்க
அளவற்ற இரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும்
பயன்படுத்தியதன் விளைவாக இன்று மக்கள் அனைவரும் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகளைக்கும், பக்கவிளைவு
களுக்கும் ஆளாகி இன்னலுருகிறோம். இனி பக்கவிளைவுகள்
இன்றி நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று நலமாக வாழ இயற்கை
உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்துவது ஒன்றே
சிறந்த வழியாகும். இதில் பஞ்சகவ்யா மற்றும் தசகவ்யா
முக்கியமான பங்கினை வகிக்கின்றன.
'பஞ்ச' என்றால் ஐந்து என்று பொருள்படும். பசுவிலிருந்து
கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால்
இதற்கு 'பஞ்சகவ்யா' என்று பெயர் வந்தது. கோயில்களில்
பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகின்ற பஞ்சாமிர்தம்தான்
பஞ்சகவ்யா இருவானதற்கு முன்னோடியாகும், முதலில்
பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், பால், தயிர்
மற்றும் நெய் ஆகியவற்றைக்கொண்டு பஞ்சகல்யா தயார்
செய்யப்பட்டது. பின்னர் அதனுடன் கரும்புச்சாறு அல்லது
வெல்லம், இளநீர், வாழைப்பழம் மற்றும் கள் போன்றவை
களும் சேர்க்கப்பட்டு நொதித்தல் தன்மையை அதிகப்படுத்திய
தால் தற்பொழுது பஞ்சகவ்யா ஒரு அங்கக சக்தியாகத்
திகழ்கின்றது.
பஞ்சகவ்யாவின் மூலப்பொருட்கள்.
பஞ்சகவ்யாவானது ஒரு சிறந்த இயற்கை உரமாக மட்டுமின்றி
பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர்த்திரவமாகவும், பூச்சி
மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்பாற்றலை ஊக்குவிக்கும்
காரணியாகவும் விளங்குகிறது. பசுவின் கோமையத்தில் அதிக
அளவில் சோடியம் குளோரைடு, கால்சியம் சல்பேட், மக்னீ
சியம் சல்பேட், பொட்டாசியம் ஹிப்யூரேட் போன்ற தாதுக்
களும் அடங்கி உள்ளன. பசுஞ்சாணத்தில் 82% நீரும், 18%
திடப்பொருளும் அடங்கியுள்ளது. பசும்பால், சாருண்ணி
பாக்டீரியாவிற்கு சிறந்த ஊடகமாக உள்ளதோடு நச்சுயிரிக்கு
எதிர் கொல்லியாகவும் விளங்குகின்றது. பாலிலுள்ள புரதம்
கொழுப்பு, கார்போஹைட்ரேட்,அமினோ அமிலம், கால்சியம்
ஹைட்ரஜன், லாக்டிக் அமிலம் மற்றும் லாக்டோபேசில்லஸ்
பேக்டீரியா போன்றவை பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
பசு நெய்யானது பயிர் வளர்ச்சியை மேம்படுத்த பண்டைய
காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதில் வைட்டமின் ஏ பி
கால்சியம் மற்றும் கொழுப்புப் பொருள்கள் அடங்கியுள்ளன.
மேலும் வெட்டுக்காயங்களில் தொற்று நோயைத் தடுக்கும்
குளுகோசைடும் இதில் அடங்கியுள்ளது. பசுமாட்டுத்தயிரில்
அதிக அளவில் நொதித்தலுக்குக் காரணமான நுண்ணுயிர்களை
ஊக்குவிப்பதன் மூலமாக நோதித்தலுக்கு உதவுகின்றது.
தென்னை இளநீரானது கைனட்டினிற்கு விலை மலிவான
மாற்றாக செயல்படுவதுடன், நெல்லில் பச்சையத்தை
அதிகப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது.

தயாரிக்கும் முறை தொடரும்.

Sunday, November 1, 2009

பண்ணைச்சுற்றுலா



பண்ணைச்சுற்றுலா-பெரியகொடிவேரி.

கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் (IFGTB)" கடந்த மாதம் 8,9 தேதிகளில் இரண்டு
நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் இரண்டாவது
நாள் ஒரு பண்ணைச் சுற்றுலா ஈரோடு மாவட்டம் பெரிய
கொடிவேரியில் உள்ள ஸ்ரீ முருகவேல் வேளாண்மைப்
பண்ணைக்கு சுமார் 35 விவசாயிகள், விஞ்ஞானிகளுடன்
கொங்கு என்.கொளந்தசாமி அழைத்துச் சென்றார்.

செவாலியர், டாக்டர் கொங்கு என்.கொளந்தசாமி பல
வெகுமதிகள் பெற்றவர் 9443006666 மிக்க ஆர்வம்
உள்ளவர். அவரது உரவினர் குமாரசாமி மற்றும் பழனிசாமி
இருவரும் இவருக்குத் துணையாக உள்ளார்கள்.

பண்ணை ஆரம்ப வருடம் 1993, பண்ணையின் பரப்பளவு
230 ஏக்கர். தண்ணீர் பாசனம் ஏற்படுத்திய வருடம் 1998.
பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு 160 ஏக்கர். ஆரம்ப
கட்டத்தில் மஞ்ஞ்சள், மரவள்ளி, சோளம், வாழை, நெல்,
கரும்பு, ரோஸ்மேரி, பாம்ரோசா, சபேத்முசலி, கோசாப்
பழம், பாகல், புடல், பூசனி, புகையிலை மற்றும் எள்
ஆகியன பயிரிடப்பட்டன. திராச்சையும் நெல்லியும்
நீண்டகாலப்பயிர்களாக இருந்தன.

பெரிய கொடிவேரி அணைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலத்தில்
பம்பிங் செய்ய கட்டிடங்கள் அமைத்து 30 எச்.பி. உள்ள
5 சர்வீசுகள் பெற்றுள்ளார். அங்கிருந்து பண்ணைக்கு 12 அஙுகுல
எ.சி.சி. பைப் மூலம் 2000 மீட்டர் ஒன்றும் 1250 மீட்டர் பைப்
ஒன்றும் நிலத்தடியில் பதித்து பண்ணையில் உள்ள பெரிய
நீச்சல் குளம் போன்ற தொட்டிக்குக் கொண்டுவந்து அதிலிருந்து
தோட்டதுதிற்குப் பகிர்ந்தளிக்கிறார். மேலும் பண்ணைக்குள்
30 எச்.பி. ஒரு சர்வீசும் 10 எச்.பி. 5 சர்வீசும் அமைத்துள்ளார்.
எந்தக்காலத்திலும் தண்ணீருக்குப் பஞ்சமேயில்லை.

பயிர்கள் முக்கோண நடவுமுறை.

10'X 10' மலைவேம்பு 13 ஏக்கர்6000 கன்றுகள். 22 மாதங்கள்
13'X 13' மூங்கில் வல்காரீஸ் 5 ஏக்கர் 1400 கன்று. 18 மாதம்
15'X 15' மூங்கில் வல்காரீஸ் 8 ஏக்கர் 1600 கன்று. 6 மாதம்
5.5'X 5.5'யூகோலிப்டஸ்,லாரா.10 ஏக்கர் 16000 கன்று. 27 மாதம்
12'X 12' நாட்டு வாகை, பூவரசு 5 ஏக்கர் 800 கன்று. 18 மாதம்
8' X 8' மகாகணி, காயா. 2000 கன்று 14 மாதம்
5' பார் கரும்பு நிலத்தடி சொட்டு நீர். 22 ஏக்கர்
5' பார் கரும்பு சாதாரண முறைப்பாசனம்.10 ஏக்கர்.
----------பாப்புலர் மரம் 30 கன்று 6 வருடம்.
----------தென்னை. 3000 கன்றுகள் 105 வருடம்.
----------தென்னை பதிமுகம் ஊடுபயிர்.800 கன்றுகள் 2 வருடம்.
---------- சைமரூபா (சொர்கமரம்) 30 கன்று 6 வருடம்.
---------- சந்தனம். 6 கன்று. 2 வருடம்.

=====================================================

பயிர்கள் நேர் நடவு முறை.

15'X 15' குமழ் மூங்கிலுக்கு இடையில்.8 ஏக்கர் 1500 கன்று 6 மாதம்
5'X 5' குமிழ் தனியாக-----------அரை ஏக்கர்400 கன்று 14 மாதம்.
5'X 5' பென்சில் தனியாக-------அரை ஏக்கர் 400 கன்று 14 மாதம்.
6'X 6' பதிமுகம் தனியாக-----17 ஏக்கர் 17000 கன்று. 4 வருடம்.
5'X 5' சவுக்கு ஜுங்குலியான-----10 ஏக்கர் 18000 கன்று 27 மாதம்.
12'X 12' ஈட்டி---------------------- 200 கன்று 18 மாதம்.
12'X 12' சிசு----------------------- 200 கன்று 18 மாதம்.
12'X 12' செஞ்சந்தனம்-------------- 200 கன்று 18 மாதம்.

=========================================================

பண்ணைமுழுதும் ஒறே பசுமையாக உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு
மட்டும் கிச்சிடிசம்பா நெல் பயிரிட்டுள்ளார். சர்கரை ஆலையிலிருந்து
உரம் டன் கணக்கில் வாங்கி மற்ற சாண உரங்களுடன் கலந்து நல்ல
கலப்புரமாக மாற்றி இடுகிறார். எல்லா மரங்களுக்கும் சொட்டு நீர்
பாசன முறைதான் பின்பற்றுகிறார். எல்லாமே வளமாக உள்ளன.
தென்னையில் பதிமுகம் மரம் நட்டதால் பதிமுக முட்கள் உள்ளே
செல்ல முடியாமல் தடையாக உள்ளன.


பார்க்கவேண்டிய மரப்பண்ணை. வாழ்க வழமுடன்.


------------------------(விவசாயம் தொடரும்)