Friday, November 13, 2009

பஞ்சகவ்யா.பஞ்சகவ்யா.

கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் (IFGTB)" அக்டோபர் மாதம் 8,9 தேதிகளில் இரண்டு
நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் தரமான மரக்கன்று
உற்பத்தியில் 'பஞ்சகவ்யா' பற்றி திரு. பன்னீர் செல்வம் அளித்த
விளக்கம் பின்வருமாறு-
ந்மது முன்னோர்களின் அனுபவ அறிவானது மனித இனம் மட்டு
மின்றி விலங்கு மற்றும் தாவர இனத்தின் நலம் காக்கும் அறிவுப்
பெட்டகமாக திகழ்கிறது. விருக்சாயுர்வேதா என்பது அத்தகைய
அனுபவ அறிவு குறிப்புகளின் ஓர் தொகுப்பாகும். இது இயற்கை
சக்திகளான பஞ்சபூத த்தோடு (நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும்
ஆகாயம்) இயைந்த விவசாய் மூறைகளை வலியுறுத்துகின்றது.
பசுமை புரட்சி என்ற பெயரில் உணவு தானிய உற்பத்தியை பெருக்க
அளவற்ற இரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும்
பயன்படுத்தியதன் விளைவாக இன்று மக்கள் அனைவரும் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகளைக்கும், பக்கவிளைவு
களுக்கும் ஆளாகி இன்னலுருகிறோம். இனி பக்கவிளைவுகள்
இன்றி நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று நலமாக வாழ இயற்கை
உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்துவது ஒன்றே
சிறந்த வழியாகும். இதில் பஞ்சகவ்யா மற்றும் தசகவ்யா
முக்கியமான பங்கினை வகிக்கின்றன.
'பஞ்ச' என்றால் ஐந்து என்று பொருள்படும். பசுவிலிருந்து
கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால்
இதற்கு 'பஞ்சகவ்யா' என்று பெயர் வந்தது. கோயில்களில்
பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகின்ற பஞ்சாமிர்தம்தான்
பஞ்சகவ்யா இருவானதற்கு முன்னோடியாகும், முதலில்
பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், பால், தயிர்
மற்றும் நெய் ஆகியவற்றைக்கொண்டு பஞ்சகல்யா தயார்
செய்யப்பட்டது. பின்னர் அதனுடன் கரும்புச்சாறு அல்லது
வெல்லம், இளநீர், வாழைப்பழம் மற்றும் கள் போன்றவை
களும் சேர்க்கப்பட்டு நொதித்தல் தன்மையை அதிகப்படுத்திய
தால் தற்பொழுது பஞ்சகவ்யா ஒரு அங்கக சக்தியாகத்
திகழ்கின்றது.
பஞ்சகவ்யாவின் மூலப்பொருட்கள்.
பஞ்சகவ்யாவானது ஒரு சிறந்த இயற்கை உரமாக மட்டுமின்றி
பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர்த்திரவமாகவும், பூச்சி
மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்பாற்றலை ஊக்குவிக்கும்
காரணியாகவும் விளங்குகிறது. பசுவின் கோமையத்தில் அதிக
அளவில் சோடியம் குளோரைடு, கால்சியம் சல்பேட், மக்னீ
சியம் சல்பேட், பொட்டாசியம் ஹிப்யூரேட் போன்ற தாதுக்
களும் அடங்கி உள்ளன. பசுஞ்சாணத்தில் 82% நீரும், 18%
திடப்பொருளும் அடங்கியுள்ளது. பசும்பால், சாருண்ணி
பாக்டீரியாவிற்கு சிறந்த ஊடகமாக உள்ளதோடு நச்சுயிரிக்கு
எதிர் கொல்லியாகவும் விளங்குகின்றது. பாலிலுள்ள புரதம்
கொழுப்பு, கார்போஹைட்ரேட்,அமினோ அமிலம், கால்சியம்
ஹைட்ரஜன், லாக்டிக் அமிலம் மற்றும் லாக்டோபேசில்லஸ்
பேக்டீரியா போன்றவை பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
பசு நெய்யானது பயிர் வளர்ச்சியை மேம்படுத்த பண்டைய
காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதில் வைட்டமின் ஏ பி
கால்சியம் மற்றும் கொழுப்புப் பொருள்கள் அடங்கியுள்ளன.
மேலும் வெட்டுக்காயங்களில் தொற்று நோயைத் தடுக்கும்
குளுகோசைடும் இதில் அடங்கியுள்ளது. பசுமாட்டுத்தயிரில்
அதிக அளவில் நொதித்தலுக்குக் காரணமான நுண்ணுயிர்களை
ஊக்குவிப்பதன் மூலமாக நோதித்தலுக்கு உதவுகின்றது.
தென்னை இளநீரானது கைனட்டினிற்கு விலை மலிவான
மாற்றாக செயல்படுவதுடன், நெல்லில் பச்சையத்தை
அதிகப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது.

தயாரிக்கும் முறை தொடரும்.

No comments: