Monday, December 6, 2010

கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்.


  கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் 
சங்கம்.
COIMBATORE DISTRICT HERBAL & TREE GROWERS ASSOCIATION.

மூலிகை கருத்தரங்கு.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், 
விரிவாக்க கல்வி இயக்கம் மற்றும் ஸ்ரீ அவினாசிலிங்கம் 
வேளாண் அறிவியல் மையம் உதவியுடன் நடத்தும் மாதாந்திர 
மூலிகை கருத்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 
அழைக்கிறோம்.

22 வது மாதாந்திர கருத்தாய்வு கூட்டம்  நிகழ்ச்சி நிரல்.

தேதி        : 16-12-2010 வியாழக்கிழமை  காலை 10.30மணி.
இடம்     : தொழில்நுட்ப பூங்கா எண்-4
(முதல் கேட் வழியே உள்ளே வருக)
தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகம்,  கோவை.
வரவேற்புரை  : திரு. K. தேவராக்ஜன் B.Sc., தலைவர்.
கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம். 
கோவை.
தலைமையுரை  ; முனைவர் K. இராஜாமணி Phd. துறைத்
 தலைவர், மருந்துப்பயிர் மற்றும் மணமூட்டும்  பயிர்த்துறை, 
TNAU.
சிறப்புரையாளர்கள் :
 திரு. M. முருகன் M.SC., M.Phil.,  விஞ்ஞானி
18 ஹேர்ப்ஸ் ஆர்கானிக் லேப்(பி) லிட்., 
மதுரை.
பொருள் :-மூலிகை சேகரிப்பும், மூலிகை சாகுபடி
தொழிற்நுட்பங்களைப் பற்றியும்,
திருமதி.  R. பார்வதி நாகராஜன் MA.,
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
பிச்சாண்டிகுளம் மூலிகை பாதுகாப்பு  மையம்
ஆரோவில், புதுச்சேரி-605 101
பொருள்:-மூலிகை வளர்ப்பும் அதன் 
மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துதலும் குறித்துப் பைசுவார்கள்.

காலை 10.30 மணி முதல் 1.30 மணிவரை கருத்தாய்வு 
கூட்டம் அனைத்து விவசாயிகளும் சக விவசாய அன்பர்
களுடன் கலந்துகொண்டு பயன் பெறுக. (அனுமதி இலவசம்)

 -------------------------------------------(தொடரும்)

கோவை, மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்.

கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் 
சங்கத்தின் 106 வது (என்று சொல்லப்படும்) கருத்தாய்வுக் 
கூட்டம் இன்று  6-12-2010 தேதி காலை 10.00 மணிக்கு மேல் 
தொடங்கிற்று. இடம் வன பாதுகாவலர் அலுவலகம், வன
மரபியல், பாரதிபார்க் ரோடு,  கோவை.

திரு தேவராஜன் சங்கத்தலைவர் வரவேற்புரை வழங்கினார். 
கூட்டத்திற்கு விவசாயிகள் சுமார் 60 க்கு மேல் வந்திருந்தனர். 
இந்தக் கூட்டத்திற்கு சிறப்புரையாளராக 
திரு.எஸ்.கே. சண்முகசுந்தரம் ஐ.எப்.எஸ்.,  வன பாதுகாவலர்
மற்றும் துறைத்தலைவர் உயிர் பன்மயத் துறை ஐ.எப்.ஜி.டி.பி., 
கோவை அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் ‘மரம் வளர்ப்
போர் சங்கங்களின் கடமைகள்’ என்ற தலைப்பில் பேச 
ஆரம்பித்தார். அதில் அவர் பேசிய சில கருத்துக்கள் பின்
வருமாறு.


சங்கத்தின் உறுப்பினர்கள் தாங்கள் விவசாயத்தில் சாதித்த 
வெற்றிக்  கதைகளை மீடியாக்களில் தெறிவித்து சங்கத்திற்கு 
நல்ல பெயரை  ஏற்படுத்த வேண்டும். முள் இல்லா மூங்கில் 
வளர்ப்பதில் புளியம்பட்டி அடுத்துள்ள விவசாயி ஒரு ஏக்கரில் 
 5 ஆண்டில் 13 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். அவர் கட்டிங் 
மூலம் பதியம் போட்டு நாற்றுக்கள்  விற்றுள்ளார். மேலும்
ஈரோடு, தாராபுரம் பகுதியில் மூலிகைகள்  போட்டு நல்ல 
லாபம் அடைந்து வருகிறார்கள். விவசாயிகளின் உற்பத்திப் 
பொருளுக்கு விற்பனையின் போது சங்கம் உதவி 
செய்துள்ளதா? வருபவர்களுக்குத் தகவல் மட்டுமே 
அளித்து வந்துள்ளது.  விவசாயிடமிருந்து கோரிக்கைகள் 
வராமல் சங்கம் முன்னிருந்து அறிந்து கொண்டு அவர்
களுக்கு உதவிகள் செய்துள்ளதா? விவசாயிகளின் சவுக்கு
மரம் வளர்ப்பதில் விற்பனையில் அரசு நிர்ணித்த ரூ.2500 
கிடைக்காமல் ரூ.1500 க்கு விற்று இழப்பு 
ஏற்பட்டதற்கு சங்கம் ஏன் உதவி செய்யவில்லை? அரசாங்கம் 
நிர்ணையம் செய்யும் விலை சங்கம் ஏன் பரிந்துறை செய்து 
ஏற்பாடுகள் செய்யவில்லை? சங்கத்திற்கேன்று ஒரு மத்திய
நாற்றங்கால் இல்லை வெளியில் அதிக விலை கொடுத்து 
நாற்றுக்கள் வாங்கும் நிலை ஏன்? சங்கத்திற்கென்று ஒரு 
பத்திரிக்கை ஏன் இல்லை? சங்கத்தின் செயல் பாடுகள், 
விலைகள், அரசு ஆணைகள், எந்தெந்த பயிர்களுக்கு 
என்னென்ன மானியம் அளிக்கப்படுகிறது போன்ற விபரங்கள் 
வெளியிட ஏன் ஒரு வெப்சைட்டு ஏற்படுத்த வில்லை? 
விவசாயிகள் தற்போது வைத்த மரங்கள் 10 வருடம் கழித்து 
விற்பனைக்கு சங்கம் முன்கூட்டியே என்ன செய்யவுள்ளது? 
உறுப்பினர்களே சாமில் வைக்க  ஏற்பாடு செய்துள்ளதா? 
சங்கத்திற்கென்று ஒரு இடம் கட்டிடம் இருக்க 
வேண்டும், அங்கு தகவல் சொல்ல போன் இருக்க வேண்டும், 
அதற்கென்று ஒரு ஆள் இருக்கவேண்டும். சங்கம் சொந்தக் 
காலில் நிற்க  வேண்டும். உறுப்பினர்களின் நிலம், சர்வே எண், 
எவ்வளவு நிலத்தில் என்ன பயிரிட்டுள்ளார்கள் என்ற முழு
விபரம் சங்கத்தில் பதிவு செய்யாதது ஏன்?  சங்கம் 3 பேர் 
கொண்ட கமிட்டி ஆரம்பிக்க வேண்டும். தனித்தனியாக 
வேலைகளுக்கேற்ப 4 கமிட்டிகள் ஏற்படுத்தி அதன் 
பொருப்புகளை  அவர்களே செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். 
சங்கத்திற்கு நிதி நிலை  ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சிக்
 குட்பட்ட  இடங்களில் மரம் வெட்டுவதைத் தடுக்க சங்கம் 
எற்பாடுகள், ஆலோசனைகள் வழங்கி தீர்மானங்கள் ஏற்
படுத்தி ஆணைகளைநிறவேற்ற வேண்டும். உறுப்பினர்
களுக்குக் கடிதம் அனுப்புவதை நிறுத்தி “Tree information center”
IFGTB கோவை மையத்தில் ஒரு ரூபாய்  கொடுத்து 
அங்கத்தினரானால் அவரவருக்குத் தகவல் வந்து சேரும். 
அங்கு உள்ளவர் பெயர் மணிமுத்து போன்- 0422 2446633.
இதற்குப்பின் உறுப்பினர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்
தார். சிலர் குறைகளையும், சிலர் மிகைப்படுத்தியும்
கூறினார்கள். முக்கியமாக 3 வருடங்களுக்குமேல் பொதுக்
 குழு கூட்ட வில்லையென்றும், வரவு  செலவுகளைக் காட்ட 
வில்லையென்றும், நிர்வாகக் கமிட்டி நபர்களை மாற்ற 
வில்லையென்றும், கூறினார்கள். சங்கம் சிறப்பாக செயல்
பட்டால்  பத்திரிக்கைக் கார ர்கள் நம்மைத்தேடி வருவார்கள் 
அனால் இன்று கூட எந்தப் பத்திரிக்கையாளரும் வரவில்லை
என்று கூறினார்கள்.
திரு.சண்முகசுந்தரம் IFS அவர்கள் திருவண்ணாமலையிலி
ருந்து  9/2008 மாதம் வந்து இந்த சங்கத்தில் பேசியபோது  இதே
தலைவருக்குச்  சில கேள்விகள் விடுத்திருந்தார் அதை 
நான் 8-9-2008 ல் எனது வலைப்பதிவில் crop-kuppu.blogspot.com 
எழுதியதை தற்போது நினைவு கூருகிறேன்.

1. இந்த சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லை என்ன 
நடவடிக்ககை எடுக்கப்பட்டது?

2. இதுவரை சங்கத்திற்கு நிதி ஒதுக்கப் படவில்லை என்ன 
நடவடிக்கை  எடுக்கப் பட்டது?

3. வங்கிகளுக்கு நிதி உதவி கேட்டு எந்த பிராஜக்ட் அனுப்ப
வில்லை ஏன்?

4. வங்கிகளிடம் கடன் பெறுவது திருப்பிக் கட்டுவது குறித்த 
பிராஜக்ட்டுகள் எங்கே?

5. தொழில் நுட்ப திறமையாளர்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்தப் 
பட்டுள்ளதா?

6. கூட்டம் வனத்துறை அலுவகத்தில் நடத்தப்படுவதை 
தவிர்த்திருகலாமே ஏன்?

7. சங்கத்திற்கு மத்திய நர்சரி ஏன் ஏற்படுத்தவில்லை?

8. விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு மார்கட் வசதி 
ஏன் ஏற்படுத்தவில்லை?

9. சங்கம் மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுக்
கள் ஏன் அளிக்கப் படவில்லை.

10. எத்தனை பிராஜக்டுகள் அனுப்ப ப்பட்டுள்ளன?

11. சங்கம் வனத்துறைக்கு என்ன செய்கிறது?

12. சங்கத்திற் கென்று வெப்சைட் தனியாக ஏன் ஏற்படுத்த 
வில்லை?

13. கலைக்டரிடம் சங்கம் பற்றி செயல் பாடு ஏன் தெறிவிக்க 
வில்லை? விவசாயிகள் குறை தீர்க்கும் மாதாந்திர கூட்டத்தில்
ஏன் கலந்து கொள்ள வில்லை?

14. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை ஏன் வழங்கப் 

 படவில்லை?

15. சங்கத்திற்கென்று கம்யூட்டர், புரொஜகடர் ஏன் வாங்கவில்லை?


மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் கூற இயலாது. இவை 
ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்.  இந்த வலைப் 
பதிவை பார்ப்பவர்கள் உறுப்பினர்கள் தங்கள் கருத்தை
பின்னூட்டத்தில் தெறிவிக்கலாம்.   (தொடரும்)  
என்று எழுதியிருந்தேன் இதில் எதுவும்  நிறைவேற்ற 
வில்லை. ஆனால் இன்று ஒரு வெப்சைட் தொடங்க 
பணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். (தொடரும்)

Friday, December 3, 2010

வேளாண் பலகலையில் சாக்லேட் தயாரிக்க பயிற்சி.சாக்லேட் மற்றும் மிட்டாய் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி 
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் 7,8 ம் தேதிகளில்
நடக்கிறது. இது குறித்து, வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள  
அறிக்கை-
சாகலேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் 
தொழில்நுட்பம் குறித்த இரண்டு நாள் பயிறுசி வகுப்பு,
வேளாண் பல்கலையில் வரும் 7 மற்றும் 8 ம் 
தேதிகளில் நடக்கிறது. பயிற்சியின்போது, 
கொக்கோ மிட்டாய், பருப்பு மிட்டாய் மற்றும் 
சர்க்கரை மிட்டாய் வகைகளை எளிய முறையில் 
தயாரிப்பதறிகான தொழில்நுட்ப பயிற்சி 
அளிக்கப்படுகிறது, பயிற்சிக்கான 
கட்டணம் 1,000 ரூபாய். 

இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்,
பல்கலைக்கு நேரில் வந்து பயிற்சி கட்டணத்தை 
செலுத்தி  பெயர் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 
பயிற்சிக்கான கட்டணத் தொகையை, ‘டீன், வேளாண்மை 
இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ 
என்ற பெயரில் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் 
வங்கியில் செலுத்தும் வகையில் வரைவோலை எடுத்து, 
‘பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின் சார் 
தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, 
கோவை-  641003 என்றி முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பெயர் பதிவு செய்ய வரும் 6ம் தேதி கடைசி நாள்

விபரங்களுக்கு, 0422- 6611340, 6611268 என்ற எண்களில் 
தொடர்பு கொள்ளலாம்.

---------------------------------(தொடரும்)

Sunday, November 7, 2010

தேனீ வளர்ப்புப்பயிற்சி.
Training in bee keeping at TNAU on November 8

Tamil Nadu Agricultural University(TNAU) will organize a training in bee keeping on November 8 on the university premises.

According to a university release, hands-on training will be imparted in identification of bee colonies and their rearing, artificial group rearing of bees, queen bee rearing and production techniques, identification of natural enemies of bees and their management, Italian bee rearing technique, and so on.

Interested candidates have to reach the Department of Entomology before 9a.m. A fee of Rs.150 has to be remitted.

A certificate will be given at the end of training. Candidates can call 0422-6611214; or e-mail to entomology@tnau.ac.in. for details.

Bakery products

TNAU will organize training in preparing bakery products on November 9 and 10. the training will cover the following aspects: variety of breads, burgers, cake, and cookies, pav bhaji, pizza, and pie varieties.

Those interested can attend the training by paying a fee of Rs. 1,000. For details contact 0422-6611340, 6611268, a release says.


Wednesday, September 15, 2010

கருத்தரங்கு.


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும்
சவுத் இந்தியன் ஹார்டிகல்ச்சுரல் சங்கமும்
இணைந்து நடத்தும்
தேசிய மூலிகை கருத்தரங்கு.

தேதி : 24,25, 26 செப்டம்பர் 2010 காலை 9.00 மணி.

இடம் : அண்ணா கலையரங்கம், தமிழ்நாடு
வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.

வணிக ரீதியாக மருத்துவப்பயிர்களை தொடர்ந்து சாகுபடி
செய்ய கையாளவேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்த
ஆய்வரங்கம்.

பதிவு கட்டணம் ரூபாய் ஐநூறு மட்டும் செலுத்தி இக்கருத்தரங்கில்
கலந்து கொள்ளவும்.


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

முனைவர் கெ.இராஜாமணி , பிஎச்டி.,
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
மருத்துவப்பயிர் மற்றும் மணமூட்டும் பயிர்த்துறை,
தாவரவியல் பூங்கா, கோவை - 641 003.
போன்- 0422-6611365.

Wednesday, August 18, 2010

எள் சாகுபடி.
மணல் கலந்த நிலம் பயிரிட ஏற்றது. எள் எண்ணெய்
வித்துப் பயிராகும். குளிர் காலங்களில் நவம்பர் - டிசம்பர்
மாதங்களிலும், கோடையில்மார்ச் முதல் ஜூன் வரையிலும்
எள் பயிரிடலாம். எள் குறுகிய காலத்தில் குறைந்த செலவில்
அதிக பாசன வசதி இல்லாமல் வறட்சியையும் தாங்கிக்
கொண்டு வளரக்கூடியது. மானாவாரி சாகுபடிக்கு டி.எம்.வி.3
மற்றும் டி.எம்.வி.5 ஆகிய ரகங்கள் ஏற்றவை. கடைசி
உழவில் ஹெக்டருக்கு 12.5 டன் இயற்கை எருவும் 50
கிலோ யூரியாவும், 78 கிலோசூப்பர் பாஸ்பேட் மற்றும்
23 கிலோ பொட்டாஷ் உரமும் கலந்து இடவேண்டும்.
ஹெக்டேருக்கு 22.5-22.5-22.5 கிலோ என்ற அடிப்படையில்
முறையேதழை, மணி, சாம்பல் சத்துக்களை கலந்து இட
வேண்டும். மானாவாரிநிலங்களில் எள் பயிரிடும்போது
ஒரு சதுர மீட்டர் பரப்பில் 11 செடிகள் இருத்தல் வேண்டும்.

டி.எம்.வி.3, டி.எம்.வி.4, டி.எம்.வி.5, டி.எம்.வி.6, ஆகிய ரகங்கள்
இறைவையில் பயிரிட ஏற்றவை. எல்லாப் பட்டத்திலும்
பயிரிட டி.எம்.வி.3எள் ரகம் ஏற்றது. இந்த ரகம் எல்லாப்
பட்டங்களிலும் இறைவையாகவும் மானாவாரியாகவும்
பயிரிட ஏற்றது. இதனை பின் பருவத்தில் நவம்பர்-
டிசம்பர் மாதங்களிலும் கோடையிலும் பயிர் செய்யலாம்.
கோடையில் மார்ச் முதல் ஜூன் எள் பயிரிடலாம். ஒரு
ஹெக்டர் பரப்பில் எள் பயிரிட 5 கிலோ விதை தேவை.

டி.எம்.வி.6 ரகத்தில் 54.2 சதம் எண்ணெய் உள்ளது. இதுவே
மிக அதிக அளவாகும். டி.எம்.வி.4 மற்றும் டி.எம்.வி.6 ரகங்கள்
குட்டையானவை. டி.எம்.வி.4 ரக எள் அதிக மகசூல்
கொடுக்கக்கூடிய ரகமாகும்.

விதைப்பதற்கு ஒருநாள் முன்னதாக ஒரு கிலோ விதைக்கு
2 கிராம் வீரம்திரம் அல்லது காப்டான் ஆகிய ஏதாவது ஒரு
மருந்துடன் கலந்து வைத்திருந்து மறுநாள் விதைக்க
வேண்டும். எள்ளுக்கு விதை நேர்த்தி செய்வதால்
தூரழுகல் நோயிலிருந்து பயிர் பாதுகாகாக்படுகிறது.

பாத்திகள் 10 சதுர மீட்டர் முதல் 20 சதுர மீட்டர் வரை
பரப்பு கொண்டவையாக அமைக்கப்படவேண்டும்.
ஹெக்டருக்கு பன்னிரண்டரை டன் அல்லது
25 வண்டி கம்போஸ்ட் எரு கடைசி உழவில் அடியுரமாக
இடவேண்டும்.மண் பரிசோதனை செய்து உரமிடுதல்
சிறந்த முறையாகும். இது சிக்கனமானதும் ஆகும். மண்
பரிசோதனை செய்யாவிடில், ஹெக்டருக்கு 35 கிலோ
தழை ச்சத்தும் இருபத்திரண்டரை கிலோ சாம்பல் சத்தும்
கிடைத்திட யூரியா77 கிலோவும் சூப்பர் பாஸ்பேட் 140
கிலோவும் மூரியேட் ஆப்பொட்டாசுமுப்பத்தேழரை
கிலோவும் கலந்து இடவேண்டும்.

அடி உரம் இட்டவுடன், ஹெக்டருக்கு5 கிலோ மாங்கனீசு
சல்பேட் என்னும்நுண் சத்தை இடவேண்டும். இத்துடன்
43 கிலோ மணல் கலந்து விதைப்பதற்கு முன்பு தூவ
வேண்டும். இதனால் எண்ணெய் சத்து அதிகரித்த் அதிக
மகசூல் கிடைக்கிறது. நுண் சத்து உரம் இட்டவுடன் எள்
விதைகளைவரிசைக்கு வரிசை30 செ.மீ. இருக்குமாறு
விதையுடன் நான்கு பங்குமணல் கலந்து விதைக்க
வேண்டும்.

விதைத்த 15ம் நாள் ஒரு முறையும், 28 ம் நாள் ஒரு
முறையும் பயிரைக்கலைத்து விட வேண்டும். எள்
விதைத்த 35 வது நாளில் பூக்க ஆரம்பிக்கும். எள் பயிர்
பூக்கும் தருணத்தில் நீர் தேங்கினாலும், பூக்கள் உதிர்ந்து
காய்கள்காய்ப்பதில்லை. எள் காய்கள் முற்றியதற்கு
அறிகுறியாக செடியின் அடிபாகத்தில் கால்பங்கு
இலைகளாவது உதிர்ந்திருக்கும். தண்டு மஞ்சள்
நிறமடையும்.காய்களும் பாதி மஞ்சளாக இருக்கும்.
எள் பயிரில் பூ விலை நோய் ஒரு வைரஸ் கிருமியால்
உண்டாகிறது. இந்நோய் தத்துப் பூச்சிகளால் பரவுகிறது.
தத்துப் பூச்சிகள் வைரஸ் தாக்கப்பட்ட செடிகளில் காற்றை
உறிஞ்சி, பின்புமற்ற செடிகளைத் தாக்கும் போது
இந்நோயையும் பரப்புகின்றன. எனவே வைரஸ் நோயைக்
கட்டுப்படுத்துவதற்கு, முதலில் அதனைப் பரப்பிடும்
தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு
ஊடுருவிப் பாயும்மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.

எள் விதைத்த 35 ம் நாள் ஒரு முறையும் 50 ம் நாள்
மறுமுறையும் ஹெக்டருக்கு 500 கிராம் கரையும்
கந்தகத்தையும் 500 லிட்டர் நீரில் கரைத்து கைத்
தெளிப்பான் மூல்ம இலைகள் மீது நன்கு படியும்படி
தெளிக்க வேண்டும்.

இறைவையில் ஒரு ஹெக்டரில் உயர்ந்த அளவு 1000
முதல் 1200 கிலோமகசூல் கிடைக்கும். மானவாரியாகப்
பயிரிட்டால் இதில் பாதி அளவுமகசூல்தான் கிடைக்கும்.

விதை எள்ளை நன்றாக வெய்யிலில் உலர்ந்த வேண்டும்.
விதையில்உள்ள கல், தூசி போன்றவைகளை அப்புறப்படுத்த
வேண்டும்.விதைக்காக உபயோகப்படுத்தும் எள்ளுக்கு
10% தூள் கலந்து பிறகுதெளிக்க வேண்டும். எள் பயிரிட்ட
நிலத்திலிருந்து அதிக சத்துக்களை எடுத்துக் கொள்ளும்.
எனவே, எள் பயிருக்கு உரத்தை முறையாக
இட வேண்டும்.


(நன்றி-அனைவாரி-ஆனந்தன் அவர்களுக்கு.)

(தொடரும்)

Sunday, February 28, 2010

நிலத்தின் நலம் காக்க....'பூச்சிக் கொல்லிகளையும், மரபணு மாற்று விதைகளையும் பயன்
படுத்தியதால், விளைநிலங்கள் பாழ்... இதைத் தவிர்க்க, உயர்
தன்மையை காக்கும் இயற்கை விவசாயம் அவசியம்...'

இந்தக் குறல்கள், நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டு இருக்
கின்றன.

பூமியில் ஒவ்வொரு இரவும், ஏரத்தாழ பல லட்சம் பேர், உணவின்றி
பசித்த வயிறுடன் உறங்குகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு
ஏற்ப, உணவு உற்பத்தி பெருக வில்லை. விவசாயத்தில் நவீன
தன்மையைப் பயன்படுத்தாததே இதற்கு காரணம்.

விவசாயத்தில் நவீன நன்மையை, பூச்சிக்கொல்லிகளை, உரங்களை
இயந்திரங்களை, மரபணு மாற்று விதைகளை பயன் படுத்தா விட்டால்
உணவுப்பஞ்சம் வந்து விடும். மற்ற துறைகள் நவீனத்திற்குள்
நுழைந்து விட்ட நிலையில், விவசாயமும், இந்த, 'நவீன ஆடை'யை
அணிந்தால் தான் உயிர் பெறும், மக்கள் உயிர் வாழ வழி தரும்.
என்ற கருத்து, சாதாரண மனிதனையும் யோசிக்க வைக்க க்கூடியது.
நவீனத்திற்கு மாறினால், உற்பத்தி பெருகும் என்ற, 'லாஜிக்' தான்
இதற்கு காரணம்.

ஆனால், மற்ற தொழில் துறையும், விவசாயமும் ஒன்றா என்ற
ஒப்பீடு எழுமானால், அது இந்த, 'லாஜிக்'கை தகர்க்கக் கூடியதாக
இருக்கும். உணவுப் பஞ்சம் வந்து விடும் இன்பது கட்டுக்கதை
என ஆதாரங்களை முன்வைத்து சண்டையிடுகிறது பிரான்சை சேர்ந்து,
பிரான்சஸ் மோரோலேப்பி என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழு.

அந்தக் குழுவின் அறிக்கை இப்படி சொல்கிறது...

* உலகில் வாழும் அனைத்து மக்களின் தேவைக்கும் உரிய தானியங்கள்
காய்கறிகள் விளைகின்றன. தற்போதைய மொத்த விளைச்சலை,
அப்படியே தலைக்கு இவ்வளவு என்று பிறித்தால், ஒவ்வொருவருக்கும்
தினசரி 1.25 கிலோ தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், அரைக்
கிலோ காய்கறி மற்றும் பழங்கள், கால் கிலோ பால், மாமிசம், முட்டை
கிடைக்கும்.

* இவற்றின் மூலம், ஒவ்வொருவரும் 3,500 கலோரியை பெற முடியும்.
ஆனால், நன்கு வளர்ந்திருக்கும் ஒரு மனிதனின் தேவை 2,100 கலோரியில்
இருந்து 2,500 கலோரி உணவை உட்கொண்டால், ஒவ்வொருவரும் உடல்
பருமன் நோயில் சிக்கிக் கொள்ள வேண்டி வரும்.

எங்கே பிழை இருக்கிறது என யோசிக்க வைக்கிறது இந்த குழுவின் அறிக்கை.
உலக மக்களிடையே பகிர்தலில் உள்ள முரண்பாடு தான், பஞ்சத்திற்கும்,
பட்டினிக்கும் காரணமாக அமைகிறது.

அமெரிக்க சிறுவனுக்கும்,எத்தியோப்பிய சிறுவனுக்கும் பாராபச்சமின்றி
சமமாய் விளைவித்து தருகிறாள் பூமித்தாய்.

ஆனால், ஒரு புறம் வீசி எறியப்படும், பீட்சாக்களும், மறுபுறம்
ரொட்டித்துண்டுகளுக்கு ஏங்கும் நிலையும் தொடர நாம் தான் காரணம்
என்பது உறுதிப்படுத்திகிறது.

உணவுப் பஞ்சத்தை தவிர்க்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை
களை பயன் படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது அடுத்த
வாதமாக உள்ளது. முதல் வாதமே தோற்றுப் போன நிலையில், அடுத்த
வாதமும் இப்படி நொறுங்கிப் போகிறது.

'புழு மற்றும் பூச்சிகளிலிருந்து பயிரைக் காப்பாற்றுவதற்காகவே, மர
பணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. விளைச்சலை அதிகப்
படுத்தும் தந்திரம் எதையும் செய்யவில்லையென, மரபணு மாற்று
விதைகளை உற்பத்தி செய்யும் விதை நிறுவனங்கள் தெளிவுபடுத்தி
யுள்ளன. அப்படியிருக்க, உலகப் பசியைப் போக்க மரபணு மாற்று
விதைகள் எப்படி உதவப்போகிறது?' என்ற இயற்கை ஆர்வலர்களின்
ஆதங்கம் எதிரொலிக்கிறது.

இந்த மரபணு மாற்று விதைகளை நம்பாமல், இயற்கை விவசாயத்தில்
சாதனைக் கொடி நாட்டியவர்களின் பட்டியலும் பிரமிக்க வைக்கிறது.

* பொலிவியா நாட்டில், ஒரு எக்டருக்கு 4 டன்னாக இருந்த உருளைக்
கிழங்கு உற்பத்தி, இயற்கை விவசாயத்தால் 15 டன்னாக உயர்ந்தது.

* கியூபாவில் காய்கறி விளைச்சல் இரு மடங்கானது.

* எத்தியோப்பியாவில் சர்கரை வள்ளிக்கிழங்கு, 6 டன்னலிருந்து 30
டன்னானது.

* கென்யா மக்காச்சோள விளைச்சல், 2.25 டன்னிலிருந்து 9
டன்னாக உயர்ந்தது.

* பாக்கிஸ்தானில் மாம்பழ விளைச்சல், 7.5 டன்னலருந்து 22
டன்னாக உயர்ந்தது.

* ஆந்திராவில் நாகரத்தின நாயுடு என்பவர் ஒற்றை நாத்து
இயற்கை விவசாயம் மூலம், ஏக்கருக்கு 6,900 கிலோ
நெல் விளைவித்து, சாதனை படைத்துள்ளார்.

இவையனைத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உழவு மற்றும்
உணவு அமைப்பின் ஆய்வு தகவல்.

சாதாரண பொதுமக்ககளுக்கு, இந்த விவாதங்களின் மேல்
பெரிதாய் அக்கறை இருந்ததில்லை. ஆனால், அவர்களையும்
இந்த விவகாரம் சென்றடைய காரணமாய் அமைந்து விட்டது
பி.டி.கத்தரிக்காய்.
பார்லிமெணிடில் துவங்கி, தமிழக சட்டசபை வரை இந்த
விவகாரம் பேசப்பட்டு, 'கத்தரிக்காய் முற்றினால்,
கடைக்கு வந்து தானே ஆகணும்'. என்பது போல, தெருவோர
டீக்கடை வரை இந்த விவகாரம் அலசப்படும் பொருளாகி
விட்டது.

பி.டி. கத்தரிக்காய் குறித்து கருத்து கேட்பதற்காக நாடு
முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய் அமைச்சர்
ஜெயராம் ரமேசுக்கு விவசாயிகளிடம் கிடைத்த, 'வரவேற்பு'
ஆள்பவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனால், கொஞ்ச
நாளைக்கு இந்த விவகாரத்தை ஒத்திப் போடுவதாக, மத்திய
அரசு அறிவித்துள்ளது.

பி.டி.கத்தரிக்காயை முழுமையாக தடை செய்ய வில்லை
தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது குறித்த
ஆராய்ச்சிகளின் முடிவில், இறுதி முடிவெடுப்போம்' என
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதனால், கத்தரிக்காய் விவகாரம் இத்தோடு முடிந்து விடப்
போவதில்லை எனத் தெரிகிறது.

மத்திய அமைச்சரின் வார்த்தைகளையே தமிழக அரசும்
ஒப்பிக்கிறது.'பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி கொடுக்க
வில்லை' என்று, தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஒரு
புறம் சொன்னாலும், 'பி.டி., கத்தரிக்காயெ விளைவித்து
சோதனை நடத்தியதில், எந்த விதமான பக்கவிளைவுகளும்
இல்லை' என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
சான்றளித்துள்ளதையும், சட்டசபையில் அமைச்சர் அழுத்தமாக
பதிவு செய்துள்ளார்.

இதை விட ஒருபடி மேலாக, தமிழ்நாடு வேளைண்மைப்
பல்கலைகழுமே, தனியாக மரபணு மாற்று விதைகளைத்
தயாரித்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கிய மான விஷயத்தையும்
பதிவு செய்தால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைவர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்பலைக்கும், விவசாயிகளுக்கும்
எந்த வித தொடர்பும் கிடையாது. பல கோடி ரூபாய் அரசின்
பணத்தைக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் பலன்
விவசாயிகளுக்கு கிடைப்பதே இல்லை.

ஒவ்வொரு ஆய்வறிக்கையும், சில லட்சங்களை விழுங்கி
விட்டு, ஆவணங்களாகி, அதன் மூலம் குறிப்பிட்ட பேரா
சிரியரின் பெயருக்குப் பின்னால் சில எழுத்துக்களை சேர்க்க
மட்டுமே உதவி வருகிறது.

மேற்கத்திய நாட்டின் விவசாயிகளும் சொல்லும் விசயங்களே
பல்கலைக்கு பிரதானமாக உள்ளது. அவர்கள் மட்டுமே
மேதாவிகள். அறிவாளிகள் என்ற உளுத்துப்போன சிந்தனை,
பல்கலைக்கழகம் முழுதும் பரவி இருக்கிறது.

பாட்டன் காலம் முதல் நாங்கள் பயன்படுத்திய விவசாய
முறைகளை அறிந்து கொள்வதிலோ, அவற்றின் நன்மை
களையோ பல்கலை என்றும் எற்றுக் கொண்டதில்லை.

அவர்களை பொறுத்தவரை, பல்கலையிடம் இருந்து
விவசாயிகள் கற்றால் போதும் என்ற ஒரு வழி
சிந்தனை தான். விவசாயிகளுக்கான பல்கலைக்
கழகத்தின் முதல் எதிரியே, இயற்கைவிவசாயிகள்
தான் என்ற, 'கோரஸ்' கருத்து, நான் சந்தித்த பல
விவசாயிகளிடமும் எதிரொலித்தது.

நமது பூமி பரப்பில், 2 சதவிகதம் மட்டுமே விளைநிலம்.
விளைச்சலை முடிவு செய்வது, நிலத்தின் உயிரோட்ட
முள்ள மேல் மண் பகுதியே. இந்த மண்ணை மாசு
படுத்தி, மலடாக்கும் மரபணு மாற்று விதைகளை
அனுமதிக்கக்கூடாது.

அமெரிக்காவில் இயந்திரமயமான, ரசாயன விவசாயத்தின்
மூலம் விளைவிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவும்,
6 கிலோ மண்ணின் உயிர்தன்மையை அழித்து விளைகிறது.
அமெரிக்காவை பின்பற்றும் மூன்றாம் உலக நாடுகளிலோ,
12 கிலோ மண்ணின் உயிர் தன்மையை அழித்து, ஒரு
கிலோ உணவு பெறப்படுகிறது.

முழுமையான நவீனத்திற்குள், இந்திய விவசாயம் செல்லும்
முன்பே ஏகப்பட்ட குளறுபடிகள். கடன் தள்ளுபடி உள்ளிட்ட
பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு அரசு வாரி வழங்கி
னாலும், விவசாயிகள் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்த
வண்ணம் இருக்கிறது.

அப்படி இருக்கையில், மரபணு மாற்று விதைகளை அடிப்படை
யாகக் கொண்ட மேற்கத்திய விவசாய முறையில், இந்திய
விவசாயம் அமையுமானால், அது ஏற்படுத்தும் விளைவுகளை
கற்பனைக்குள் கொண்டு வர முடியவில்லை.

விளைநிலத்தோடு விளையாடும் முன், உலகமும், அரசும்
அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும், மேதாவிகளும்
யோசிக்கட்டும்.


சிந்தனை எழுதியவர் திரு.எஸ்.கோவிந்தராஜ்-பத்திரிக்கையாளர்.

நன்றி தினமலர்.