Wednesday, August 18, 2010
எள் சாகுபடி.
மணல் கலந்த நிலம் பயிரிட ஏற்றது. எள் எண்ணெய்
வித்துப் பயிராகும். குளிர் காலங்களில் நவம்பர் - டிசம்பர்
மாதங்களிலும், கோடையில்மார்ச் முதல் ஜூன் வரையிலும்
எள் பயிரிடலாம். எள் குறுகிய காலத்தில் குறைந்த செலவில்
அதிக பாசன வசதி இல்லாமல் வறட்சியையும் தாங்கிக்
கொண்டு வளரக்கூடியது. மானாவாரி சாகுபடிக்கு டி.எம்.வி.3
மற்றும் டி.எம்.வி.5 ஆகிய ரகங்கள் ஏற்றவை. கடைசி
உழவில் ஹெக்டருக்கு 12.5 டன் இயற்கை எருவும் 50
கிலோ யூரியாவும், 78 கிலோசூப்பர் பாஸ்பேட் மற்றும்
23 கிலோ பொட்டாஷ் உரமும் கலந்து இடவேண்டும்.
ஹெக்டேருக்கு 22.5-22.5-22.5 கிலோ என்ற அடிப்படையில்
முறையேதழை, மணி, சாம்பல் சத்துக்களை கலந்து இட
வேண்டும். மானாவாரிநிலங்களில் எள் பயிரிடும்போது
ஒரு சதுர மீட்டர் பரப்பில் 11 செடிகள் இருத்தல் வேண்டும்.
டி.எம்.வி.3, டி.எம்.வி.4, டி.எம்.வி.5, டி.எம்.வி.6, ஆகிய ரகங்கள்
இறைவையில் பயிரிட ஏற்றவை. எல்லாப் பட்டத்திலும்
பயிரிட டி.எம்.வி.3எள் ரகம் ஏற்றது. இந்த ரகம் எல்லாப்
பட்டங்களிலும் இறைவையாகவும் மானாவாரியாகவும்
பயிரிட ஏற்றது. இதனை பின் பருவத்தில் நவம்பர்-
டிசம்பர் மாதங்களிலும் கோடையிலும் பயிர் செய்யலாம்.
கோடையில் மார்ச் முதல் ஜூன் எள் பயிரிடலாம். ஒரு
ஹெக்டர் பரப்பில் எள் பயிரிட 5 கிலோ விதை தேவை.
டி.எம்.வி.6 ரகத்தில் 54.2 சதம் எண்ணெய் உள்ளது. இதுவே
மிக அதிக அளவாகும். டி.எம்.வி.4 மற்றும் டி.எம்.வி.6 ரகங்கள்
குட்டையானவை. டி.எம்.வி.4 ரக எள் அதிக மகசூல்
கொடுக்கக்கூடிய ரகமாகும்.
விதைப்பதற்கு ஒருநாள் முன்னதாக ஒரு கிலோ விதைக்கு
2 கிராம் வீரம்திரம் அல்லது காப்டான் ஆகிய ஏதாவது ஒரு
மருந்துடன் கலந்து வைத்திருந்து மறுநாள் விதைக்க
வேண்டும். எள்ளுக்கு விதை நேர்த்தி செய்வதால்
தூரழுகல் நோயிலிருந்து பயிர் பாதுகாகாக்படுகிறது.
பாத்திகள் 10 சதுர மீட்டர் முதல் 20 சதுர மீட்டர் வரை
பரப்பு கொண்டவையாக அமைக்கப்படவேண்டும்.
ஹெக்டருக்கு பன்னிரண்டரை டன் அல்லது
25 வண்டி கம்போஸ்ட் எரு கடைசி உழவில் அடியுரமாக
இடவேண்டும்.மண் பரிசோதனை செய்து உரமிடுதல்
சிறந்த முறையாகும். இது சிக்கனமானதும் ஆகும். மண்
பரிசோதனை செய்யாவிடில், ஹெக்டருக்கு 35 கிலோ
தழை ச்சத்தும் இருபத்திரண்டரை கிலோ சாம்பல் சத்தும்
கிடைத்திட யூரியா77 கிலோவும் சூப்பர் பாஸ்பேட் 140
கிலோவும் மூரியேட் ஆப்பொட்டாசுமுப்பத்தேழரை
கிலோவும் கலந்து இடவேண்டும்.
அடி உரம் இட்டவுடன், ஹெக்டருக்கு5 கிலோ மாங்கனீசு
சல்பேட் என்னும்நுண் சத்தை இடவேண்டும். இத்துடன்
43 கிலோ மணல் கலந்து விதைப்பதற்கு முன்பு தூவ
வேண்டும். இதனால் எண்ணெய் சத்து அதிகரித்த் அதிக
மகசூல் கிடைக்கிறது. நுண் சத்து உரம் இட்டவுடன் எள்
விதைகளைவரிசைக்கு வரிசை30 செ.மீ. இருக்குமாறு
விதையுடன் நான்கு பங்குமணல் கலந்து விதைக்க
வேண்டும்.
விதைத்த 15ம் நாள் ஒரு முறையும், 28 ம் நாள் ஒரு
முறையும் பயிரைக்கலைத்து விட வேண்டும். எள்
விதைத்த 35 வது நாளில் பூக்க ஆரம்பிக்கும். எள் பயிர்
பூக்கும் தருணத்தில் நீர் தேங்கினாலும், பூக்கள் உதிர்ந்து
காய்கள்காய்ப்பதில்லை. எள் காய்கள் முற்றியதற்கு
அறிகுறியாக செடியின் அடிபாகத்தில் கால்பங்கு
இலைகளாவது உதிர்ந்திருக்கும். தண்டு மஞ்சள்
நிறமடையும்.காய்களும் பாதி மஞ்சளாக இருக்கும்.
எள் பயிரில் பூ விலை நோய் ஒரு வைரஸ் கிருமியால்
உண்டாகிறது. இந்நோய் தத்துப் பூச்சிகளால் பரவுகிறது.
தத்துப் பூச்சிகள் வைரஸ் தாக்கப்பட்ட செடிகளில் காற்றை
உறிஞ்சி, பின்புமற்ற செடிகளைத் தாக்கும் போது
இந்நோயையும் பரப்புகின்றன. எனவே வைரஸ் நோயைக்
கட்டுப்படுத்துவதற்கு, முதலில் அதனைப் பரப்பிடும்
தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு
ஊடுருவிப் பாயும்மருந்துகளைத் தெளிக்க வேண்டும்.
எள் விதைத்த 35 ம் நாள் ஒரு முறையும் 50 ம் நாள்
மறுமுறையும் ஹெக்டருக்கு 500 கிராம் கரையும்
கந்தகத்தையும் 500 லிட்டர் நீரில் கரைத்து கைத்
தெளிப்பான் மூல்ம இலைகள் மீது நன்கு படியும்படி
தெளிக்க வேண்டும்.
இறைவையில் ஒரு ஹெக்டரில் உயர்ந்த அளவு 1000
முதல் 1200 கிலோமகசூல் கிடைக்கும். மானவாரியாகப்
பயிரிட்டால் இதில் பாதி அளவுமகசூல்தான் கிடைக்கும்.
விதை எள்ளை நன்றாக வெய்யிலில் உலர்ந்த வேண்டும்.
விதையில்உள்ள கல், தூசி போன்றவைகளை அப்புறப்படுத்த
வேண்டும்.விதைக்காக உபயோகப்படுத்தும் எள்ளுக்கு
10% தூள் கலந்து பிறகுதெளிக்க வேண்டும். எள் பயிரிட்ட
நிலத்திலிருந்து அதிக சத்துக்களை எடுத்துக் கொள்ளும்.
எனவே, எள் பயிருக்கு உரத்தை முறையாக
இட வேண்டும்.
(நன்றி-அனைவாரி-ஆனந்தன் அவர்களுக்கு.)
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றி
Post a Comment