Thursday, March 29, 2012

முருங்கை சாகுபடி..


செடிமுருங்கை.


விண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி.

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம் சாகுபடி செய்து வருகிறார். அவருடைய சாகுபடி விபரம்-

இப்பண்ணையில் உள்ள தோப்புகள் முழுவதும் இயற்கை வேளாண்மை முறையே மேற்கொள்ளப்படுவதால் இந்த ரகத்தின் பாரம்பரிய குணாதிசியங்கள் எதுவும் மாறாமல் காக்கப்படுகிறது.  இயற்கை முறை பராமரிப்பு என்பதால் நோய் தாக்குதல் இல்லை. இப்பண்ணையில் உருவாக்கப்படும் முருங்கைக் கன்றுகளுக்கு, நன்கு பராமரிக்கப்பட்டு தாய் குணம் உள்ள, அதிக காய்பிடிப்பு தன்மையுள்ள மரத்தில் விண்பதியம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகிறது. இத்தகு முறையில் உண்டான கன்றுகள் நடவு செய்த 6,7 மாத த்திலேயே காய்த்து பலன் தரத் தொடங்கிவிடுகிறது. காய்க்கத் தொடங்கிய முதலாண்டு இறுதிக்குள் ஒரு மரமானது குறைந்தது 50 கிலோ காய்கள் வரை கொடுத்து விடுகிறது. இரண்டாம் ஆண்டில் 3 காய்க்கும் பருவமும் சேர்த்து ஒரு மரம்200 கிலோவிலிருந்து 250 கிலோ வரையிலும் காய்கள் பெறலாம். சரியான பராமரிப்பு, அதாவது இயற்கை முறையில் எரு, மண்புழு உரம், இயற்கை நோய் கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தியவர்கள் ஆண்டிற்கு ஒரு மரத்திலிருந்து 300 கிலோ காய்கள் வரை மகசூல் எடுத்துள்ளனர்.

ஒரு ஆண்டு காலம் மகசூல் தந்த மரங்களை தரையிலுருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் ஒரே மட்டமாக  கவாத்துச் செய்த பின், வெட்டிய பகுதியில் போர்டோ கலவையைப் பூசி பூஞ்சாண நோய் வருவதைத் தவிர்க்கலாம்.(100 கிராம் மயில் துத்தத்தையும் 100 கிராம் சுண்ணாம்பு கரைசலில் கலந்து வாறு ஊற்றி போர்டோ கலவை தயார் செய்ய வேண்டும்) இவ்வாறு கவாத்துச் செய்தபின் தண்டுப் பகுதியிலிருந்து கிளைகள் வளரத் தொடங்கும். பக்கவாதுகளில் நல்ல திடமான கிளைகள் 5 முதல் 7 மட்டும் விட்டு வைக்க வேண்டும். இப்படித் தோன்றும் கிளைகள் வளர்ந்து ஆராம் மாதத்தில் பூக்கத் தொடங்கும். மீண்டும் எட்டாம் மாதம் முதல் பத்தாம் மாதம் வரையில் காய்கள் கிடைக்கும். அறுவடை முடிந்த பின் செடிகள் அடியுடன் அப்புரப்படுத்து விட்டு மறு நடவு செய்யலாம். மொத்தத்தில் செடி முருங்கை மூன்று ஆண்டுகள் வரை பலனளிக்கும். ஒவ்வொரு முறை கவாத்து செய்த பிறகு பரிந்துரை செய்யப்பட்டு தழை, மணி, சாம்பல் சத்து உரங்ளோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாச்ச வேண்டும். இச்செடி முருங்கையை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் 2500—3000 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டொன்றிக்கு குறைந்த பட்சம் 15,000 ரூபாய் வருமானம கிடைக்கும். தொடர்புக்கு- கே.பி.எம்.சடையாண்டி,, 979913 74087, 98650 78101.

----------------------------------------------------------------------(தொடரும்)

Thursday, March 8, 2012

மரம் வளர்போர் விழா 2012 ல் முனைவர் பார்த்தீபன்


நட்சத்திர மரங்கள்.




நட்சத்திர மரங்கள்.

1.   அஸ்வினி-----------------------------------எட்டி.

2.    பரணி ----------------------------------- நெல்லி மரம்.

3.    கார்த்திகை ------------------------------அத்திமரம்.

4.    ரோகினி-----------------------------------நாவல் மரம்

5.    மிருகசீரிடம்-------------------------------கரங்காலி.

6.    திருவாதிரை--------------------சிவப்புகரிங்காலி.

7.    புனர்பூசம்----------------------------------மூங்கில்.

8.    பூசம்------------------------------------------அரசு.

9.    ஆயில்யம்---------------------------------புன்னை.

10.   மகம்-----------------------------------------ஆலமரம்.

11.  பூரம்-------------------------------------------புரசமரம்.

12.   உத்திரம்-----------------------------------இலந்தை.

13.   அஸ்தம்-----------------------------------வில்வம்.

14.   சுவாதி--------------------------------------மருதமரம்.

15.  சித்திரை------------------------------------வில்வம்.

16.   விசாகம்----------------------------------வினாமரம்.

17.   அனுசம்-------------------------------------மகிழமரம்.

18.   கேட்டை------------------------------------பராய்மரம்.

19.   மூலம்---------------------------------------மராமரம்.

20.   பூராடம்------------------------------------வஞ்சிமரம்.

21.   உத்திராடம்--------------------------------பலாமரம்.

22.   திருவோணம்-----------------------------எருக்கு.

23.   அவிட்டம்------------------------------வன்னிமரம்.

24.   சதயம்-------------------------------------கடம்புமரம்.

25.   பூரட்டாதி------------------------------------மாமரம்.

26.   உத்திரட்டாதி------------------------------வேம்பு.

27.   ரேவதி-----------------------------------------இலுப்பை.


-------------------------------------------------------------------(தொடரும்)