Monday, June 17, 2013
Friday, June 14, 2013
மதிப்பூட்டப்பட்ட தானிய பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி.
மதிப்பூட்டப்பட்ட தானிய பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி.
கோவையில் மதிப்பூட்டப்பட்ட தானிய பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 24ல் துவங்குகிறது.
மத்திய சிறு, குறு மற்றம் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தின் (எம்.எஸ்..எம்.இ)
கோவை கிளை சார்பில், சிறு தானியங்களைக் கொண்டு மதிப்பூட்டப்பட்ட தானியப் பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி, ராம்நகர் பட்டேல் ரோட்டிலுள்ள அலுவலகத்தில், வரும் 24ல்
துவங்குகிறது,
ஜூன் 29ல் நிறைவடைகிறது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறைக்கை;
பயிற்சியில், தானியத்தின் முக்கியத்துவம், இயந்திரங்களைக் கொண்டு வியாபாரரீதியில் தயாரிக்கும் பல்வேறு தானியப் பொருட்களின் செயல் விளக்கம், தொழில் அங்கீகாரம் மற்றும் வங்கிகளில் கடன் உதவி பெறுவதற்கான வழி முறைகள், உணவுத் தொழிலுக்கான வியாபார உத்திகள் குறித்த அனுபவம் முள்ளவர்களால் செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்ச்சிகள் அளிக்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்றவர்கள் வரலாம். 18 வயது மற்றும் அதற்கு மேற்ப்பட்டோர். முதலில் வருவோருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, எம்.எஸ்.எம்.இ.,வளர்ச்சி நிலையம், 386, பட்டேல்ரோடு, ராம்நகர், கோவை-641009 என்ற முகவரியிலும் 0422-223 3956, 223 0426 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------(தொடரும்)
நன்றி- தினமலர்.
Subscribe to:
Posts (Atom)