மரக்கன்றுகளை பாதுகாக்கும் உயிர்ம பூச்சிக்கொல்லி.
கோவை வனமரபியல் மையத்தில் அறிமுகம்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனத்தில் மரக்கன்றுகளை பாதுகாக்கும் உயிர்ம பூச்சிக்கொல்லியை அறிமுக விழா நடந்தது.
இவ்விழாவில், நிறுவன இயக்குனர் கிருஷ்ணகுமார், ‘ட்ரீரிச்பயோபூஸ்டர்’ என்ற இயற்கை உரம், ‘ஹை-ஆக்ட்’ மற்றும் ‘ட்ரீபால்’ உயிர்ம பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்து பேசியதாவது:
மரங்களை நட்டு வளர்ப்பதும், வளர்த்த மரங்களை பாதுகாப்பதும் சவாலாக காரியமாக உள்ளது .அதனால், வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இதல் மர உற்பத்தியை பெருக்குவது,
தட்பவெட்பம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்வது, பல்லுயிர் சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட விசயங்களை பிரதானமாக கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், உயர்ம பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இயற்கை உரம், தாவரங்களுக்கு நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. விவசாயிகள் இவற்றை பயன் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இதனால், எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. இவ்வாறு, கிருஷ்ணகுமார்பேசினார்.
இயற்கை உரம் மற்றும் உயர்ம பூச்சிக்கொல்லியை கண்டுபிடித்த உயிர்ம வள மேம்பாட்டுத் துறை விஞ்ஞானி முருகேசன் பேசியதாவது-
‘ட்ரீ ரிச் பயோ பூஸ்டர்’ என்ற இந்த இயற்கை உரத்தில், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து நோய் தாக்குதலைத் தடுக்கும் மருந்தும் கலந்து மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த உரத்தில் வளரும் தாவரங்களை பூச்சிகள் தாக்காது.
அதே போல் ‘ஹை-ஆக்ட்’ மற்றும்
‘ட்ரீபால்’ உயி ர்பூச்சிக்கொல்லி மருந்துகள் புங்கஎண்ணெய், மரவெட்டி எண்ணெய், வேம்பு எண்ணெய் மற்றும் வெளிநாட்டு களைச் செடிகளான ‘லாண்டனாகாமரா’ எண்ணெய் ஆகிய கலவைகள் மூலம் தயாரிக்கப் பட்டு உள்ளன. இவற்றில் பூச்சிகளை கொல்லும் தன்மை இருப்பதால், தாவரங்களை பூச்சிகள் அண்டாது..
மேலும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால் தாவரங்க்களுக்கும், மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
சவுக்கு, தேக்கு, போன்ற மரங்களைத் தாக்கும் முக்கிய பூச்சிகளை இவ்வகை உயிர்ம பூச்சிக்கொல்லி அழித்து விடும்.விவசாயிகள் அனைத்துப் பயிர்களுக்கும் இதை பயன் படுத்தலாம். 100 மில்லி ‘ட்ரீபால்’ சேர்மத்தில் 10 லிட்டர் நீரில் கரைத்து, ஒரு வார இடை வெளியில் தெளித்தால் பூச்சிகளைக் கட்டுப் படுத்தலாம் .இயற்கை உரம் மற்றும் உயிர்ம பூச்சிக்கொல்லி மருந்துகள் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. விவசாயிகள் வாங்கி பயன் பெறலாம்.
இவ்வாறு, முரிகேசன் பேசினார். ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், விஞ்ஞானி கார்த்திகேயன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
-நன்றிதினமலர்.
------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment