Friday, January 10, 2014

மலரியல் துறையில் பயிற்சி.






வேளாண் பல்கலை


மலரியல் துறையில் பயிற்சி.


பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு, வேளாண் பல்கலை மலரில் துறையில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.


வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை-



வேளாண் பல்கலையில் ,மலர்கள் பற்றிய தொழில் முனைவோர் பயிற்சி, ஜன., 22 முதல் பிப்., 19 வரை 25 நாட்கள் நடக்க உள்ளது. பயிற்சியில், 25 பெண்கள் பங்கேற்க உள்ளனர். மதிப்பூட்டப்பட்ட மலர்கள் மற்றும் உலர் மலர்கள் குறித்து வர்த்தக ரீரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.. சந்தைப் படுத்துதல், நிதி மேலாண்மை திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மதிப்பூட்டும் செயல் முறை விளக்கம் குறித்து பயிறசி இலவசமாக அளிக்கப்படும். பயிற்சியில் சேர குறைந்த பட்சம் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் ‘தலைவர், மலரியல் மற்றும் பயிரியல் துறை, வேளாண் பல்கலை, கோவை-641 003 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு, ஜன., 14 க்கு முன் பதிவு செய்ய வேண்டும்.

நன்றி தினமலர் நாள் 10-01-2014.

----------------------------------------------------------------------------(தொடரும்)

============================================================================

No comments: