செங்காந்தல் மலர். |
மூலிகை மருத்துவ பயிற்சி முகாம் விண்ணப்பங்கள் வரவேற்பு.
மதுரை காமராசர் பல்கலையில் ஆறு மாதகால மூலிகை மருத்துவ சான்றிதழ் பயிற்சி முகாம், ஏப்., 7 ல் துவங்குகிறது.
மதுரை காமராசர் பல்கலை வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவுப் பணித்துறை சார்பில் ஆறு மாத மூலிகை மருத்துவம் சான்றிதழ் பயிற்சி முகாம், ஏப்., 7 ல் துவங்குகிறது. குடும்ப மகளிர், மாணவ, மாணவியர், மூலிகையில் ஆர்வமுள்ளோர் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மதுரை காமராசர் பல்கலையில் மதியம் 2-00 - மாலை 5-00 மணிவரை (ஞாயிறு, திங்கள், செவ்வாய் மட்டும்) ஆறு மாதம் இப்பயிற்சி நடைபெறும். இதில் , நேரடி பயிற்சியாக மூலிகை தாவரங்களை கண்டறிதல், மூலிகைகள் வளர்ப்பு மற்றும் பயிரிடும் முறை, மருத்துவப்யன்கள், மருத்துவ குறிப்புகள், மூலிகை ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை. திட்ட அலுவலர் (பொ) வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவுப்பணித்ததுறை, மதுரை காமராசர் பல்கலை , மதுரை- 625002 என்ற முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். வெளியூர் மாணவர்கள், 0452 - 2537838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மதுரை காமராசர் பலகலை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
நன்றி=தினமலர் நாள் 25-3-2014.
No comments:
Post a Comment