Thursday, April 23, 2009

தேசிய மருந்துப்பயிர்கள் வாரியம்.


கோவை மாவட்டத்தில் வன விரிவாக்க மையம் பல வருடங்களாக டி.சி.எப். அலுவகத்தில் பல விவசாயிகளுக்கு மூலிகை வளர்பது, விற்பனை செய்வது, வளர்ப்பு முறைகள் இடர்பாடுகள், சந்தைப்படுத்துதலில் சிக்கல்கள் பற்றி மாதா மாதம் விளக்கி வந்தது பின் ஜூன் 2006 ல் தான்
‘கோவைமாவட்ட மரம் மற்றும் மூலிகைவளர்ப்போர் சங்கம்’ என்று பதிவு செய்யப்பட்டது. அது தொடர்ந்து நடைபெற்று வரும் காலத்தில் சங்க உறுப்பினர்கள் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், கோவையில் பல பயிற்சிகள் பெற்றனர். பின் தேசிய மருந்துப் பயிர்கள் வாரியம், விரி
வாக்கக் கல்வி இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு பயன் பெரும் வகையில் கருத்தரங்கு பல்கலைக்கழக வழாகத்தில் நடத்த அனுமதியும் அளித்து உடன் இருந்து வழி காட்ட முன் வந்தனர். அதில் பெரும் பங்கு வகித்தவர்கள் இயக்குனர் டாக்டர் திரு வடிவேல் மற்றும் முனைவர் டாக்டர் திரு.ராஜாமணி அவர்களும் தான். அவர்களுடன் இணைந்து 16-3-2009 ல் இச்சங்கமும் பல விவசாயிகளை ஒன்று திரட்டி நல்லதொரு மூலிகைக் கருத்தரங்கு பொருட்காட்சி ஹால் எண். 4ல் ஒரு நாள் நடைபெற்றது. அதன் விபரம் வருமாறு-

தேசிய மருந்துப் பயிர்கள் வாரியம், மருந்துப் பயிர்கள் தகவல் மையம், சேர்ந்து விரிவாக்க கல்வி இயக்கம் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-641003 ல் பொருட்காட்சி வளாகம் ஹால் எண் 4 ல் முதல் தொடக்க க்கூட்டம் சிறிது கால தாமதமாகவே 11.30 மணிக்கு மேல் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு இயக்குனர் டாக்டர் திரு வடிவேல் அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் வரவேற்க வந்திருந்தார். ஏ.வி.பி. பத்ம ஸ்ரீ கிருஷ்ணகுமார் சிறப்புறையாற்ற வந்திருந்தார். கோவை மாவட்ட மூலிகை வளர்ப்போர் சங்கத் தலைவர் திரு தேவராஜன் வந்திருந்தார்.

கடவுள்வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. முனைவர் டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மூலிகைபற்றி விளக்கம் அளித்தார். காட்டில் கிடைக்கும் மூலிகைகள் குறைவால் மூலிகை வியாபார நோக்குடன் வளர்க்கப்படுவதைப் பற்றிக் கூறினார். பின் தலைமையேற்ற திரு வடிவேல் இயக்குனர் அவர்கள் ஆதிகால வாழ்க்கை, சித்த நூல்கள், வான சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், ஞான சாஸ்திரம் பற்றி விளக்கிக் கூறி முதலில் பாரம்பரிய வைத்திய முறை பின் ஆயுர் வேத மருத்துவம், யோகா, தியானம், ஆன்மா, தவம், வைத்தியம் சேர்ந்து ஒன்று பட்டால் பூர்த்தியாகிறது மனித வாழ்க்கை என்றார். மனிதனின் உணவுப் பழக்கங்களைக் கூறினார்.ஆறு சுவை, பரிமானம், தியானம் மனிதன் மனம் சுத்தமாக உள்ளம் பக்குவப்பட்டால் மன அழுத்தம், கனம் உடல் தன்மை இவைகளை மாற்ற வல்லது என்றார்.

பின் பத்ம ஸ்ரீ கிருஷ்ணகுமார் (ஏ.வி.பி.) பேசினார். ஆயுர்வேத மருத்துவம் காலதாமதமாகும் அலோபதி மருத்துவம் விரைவில் குணமாகும் ஆனால் நோய் திரும்பவும் வர வாய்ப்புள்ளது. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் திரும்பி வராது. மூலிகைகள் மண்ணுக்குத்தக்கவாறு வளரும் அதன் வீரியமும் அதற்க்கேற்ப இருக்கும். வியாபார நோக்குடன் வளர்க்கும் போது அதன் தன்மை சிறிது குறையும் என்றார். அமரிக்கர்கள் பலர் ஏ.வி.பி. ல் சிகிச்சை பெறுகிறாரகள் அவர்கள் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்றார்.

பின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜெகத்குரு நாகானந்த ஸ்வாமிகள் என்பவர் ஓலைச்சுவடியில் மூலிகை மருத்துவம் எழுதி வைத்திருப்பதைப்ப்பற்றிக் கூறினார். பல விளக்கங்கள் கூறினார். பின் மதிய உணவு இடைவேளை.

மதிய உணவு இடைவேளை ஒரு மணி நேரத்திற்குப்பின் மாலை 2-30 க்கு மீண்டும் தொடங்கியது. கிரீன் கோவை ஆனகட்டி திரு இராமன்ஜி அவர்கள் பேசும் பொது அங்கு 101 வகை மூலிகைப் பயிர்கள் இருப்பதாகக் கூறினார். மேலும் மூலிகை வாசனை எண்ணெய் எடுக்கும் யந்திரம் அமைத்திருப்பதாகக் கூறினார். இதன் மூலம் எண்ணெய் எடுக்கும் மூலிகைகள் 1.ரோஸ்மேரி 2. பச்சோலி.
3. பாம்ரோசா. 4. லைம் கிரேஸ். 5. துளசி. 6. திருநீர்பச்சை. 7. ஜெரேனியம். 8. மருகு. ஆகியவை என்றார்.

பின் ஆழியார் சித்தா டாகடர் திருமலைசாமி அவகள் மருந்தே உணவு, உணவே மருந்து பற்றி விளக்கம் அளித்தார்.

பின் தேவராஜன் அவர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லி அடுத்த மாதம் இதே இடத்தில் இரண்டாவது கூட்டம் 16-4-2009 அன்று தொடர்ந்து நடக்கும் என்றார். பின் நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.
-----------------------------------------------(தொடரும்)

No comments: