கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர்
சங்கத்தின் 106 வது (என்று சொல்லப்படும்) கருத்தாய்வுக்
கூட்டம் இன்று 6-12-2010 தேதி காலை 10.00 மணிக்கு மேல்
தொடங்கிற்று. இடம் வன பாதுகாவலர் அலுவலகம், வன
மரபியல், பாரதிபார்க் ரோடு, கோவை.
திரு தேவராஜன் சங்கத்தலைவர் வரவேற்புரை வழங்கினார்.
கூட்டத்திற்கு விவசாயிகள் சுமார் 60 க்கு மேல் வந்திருந்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு சிறப்புரையாளராக
திரு.எஸ்.கே. சண்முகசுந்தரம் ஐ.எப்.எஸ்., வன பாதுகாவலர்
மற்றும் துறைத்தலைவர் உயிர் பன்மயத் துறை ஐ.எப்.ஜி.டி.பி.,
கோவை அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் ‘மரம் வளர்ப்
போர் சங்கங்களின் கடமைகள்’ என்ற தலைப்பில் பேச
ஆரம்பித்தார். அதில் அவர் பேசிய சில கருத்துக்கள் பின்
வருமாறு.
சங்கத்தின் உறுப்பினர்கள் தாங்கள் விவசாயத்தில் சாதித்த
வெற்றிக் கதைகளை மீடியாக்களில் தெறிவித்து சங்கத்திற்கு
நல்ல பெயரை ஏற்படுத்த வேண்டும். முள் இல்லா மூங்கில்
வளர்ப்பதில் புளியம்பட்டி அடுத்துள்ள விவசாயி ஒரு ஏக்கரில்
5 ஆண்டில் 13 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். அவர் கட்டிங்
மூலம் பதியம் போட்டு நாற்றுக்கள் விற்றுள்ளார். மேலும்
ஈரோடு, தாராபுரம் பகுதியில் மூலிகைகள் போட்டு நல்ல
லாபம் அடைந்து வருகிறார்கள். விவசாயிகளின் உற்பத்திப்
பொருளுக்கு விற்பனையின் போது சங்கம் உதவி
செய்துள்ளதா? வருபவர்களுக்குத் தகவல் மட்டுமே
அளித்து வந்துள்ளது. விவசாயிடமிருந்து கோரிக்கைகள்
வராமல் சங்கம் முன்னிருந்து அறிந்து கொண்டு அவர்
களுக்கு உதவிகள் செய்துள்ளதா? விவசாயிகளின் சவுக்கு
மரம் வளர்ப்பதில் விற்பனையில் அரசு நிர்ணித்த ரூ.2500
கிடைக்காமல் ரூ.1500 க்கு விற்று இழப்பு
ஏற்பட்டதற்கு சங்கம் ஏன் உதவி செய்யவில்லை? அரசாங்கம்
நிர்ணையம் செய்யும் விலை சங்கம் ஏன் பரிந்துறை செய்து
ஏற்பாடுகள் செய்யவில்லை? சங்கத்திற்கேன்று ஒரு மத்திய
நாற்றங்கால் இல்லை வெளியில் அதிக விலை கொடுத்து
நாற்றுக்கள் வாங்கும் நிலை ஏன்? சங்கத்திற்கென்று ஒரு
பத்திரிக்கை ஏன் இல்லை? சங்கத்தின் செயல் பாடுகள்,
விலைகள், அரசு ஆணைகள், எந்தெந்த பயிர்களுக்கு
என்னென்ன மானியம் அளிக்கப்படுகிறது போன்ற விபரங்கள்
வெளியிட ஏன் ஒரு வெப்சைட்டு ஏற்படுத்த வில்லை?
விவசாயிகள் தற்போது வைத்த மரங்கள் 10 வருடம் கழித்து
விற்பனைக்கு சங்கம் முன்கூட்டியே என்ன செய்யவுள்ளது?
உறுப்பினர்களே சாமில் வைக்க ஏற்பாடு செய்துள்ளதா?
சங்கத்திற்கென்று ஒரு இடம் கட்டிடம் இருக்க
வேண்டும், அங்கு தகவல் சொல்ல போன் இருக்க வேண்டும்,
அதற்கென்று ஒரு ஆள் இருக்கவேண்டும். சங்கம் சொந்தக்
காலில் நிற்க வேண்டும். உறுப்பினர்களின் நிலம், சர்வே எண்,
எவ்வளவு நிலத்தில் என்ன பயிரிட்டுள்ளார்கள் என்ற முழு
விபரம் சங்கத்தில் பதிவு செய்யாதது ஏன்? சங்கம் 3 பேர்
கொண்ட கமிட்டி ஆரம்பிக்க வேண்டும். தனித்தனியாக
வேலைகளுக்கேற்ப 4 கமிட்டிகள் ஏற்படுத்தி அதன்
பொருப்புகளை அவர்களே செய்ய ஏற்பாடு செய்யவேண்டும்.
சங்கத்திற்கு நிதி நிலை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சிக்
குட்பட்ட இடங்களில் மரம் வெட்டுவதைத் தடுக்க சங்கம்
எற்பாடுகள், ஆலோசனைகள் வழங்கி தீர்மானங்கள் ஏற்
படுத்தி ஆணைகளைநிறவேற்ற வேண்டும். உறுப்பினர்
களுக்குக் கடிதம் அனுப்புவதை நிறுத்தி “Tree information center”
IFGTB கோவை மையத்தில் ஒரு ரூபாய் கொடுத்து
அங்கத்தினரானால் அவரவருக்குத் தகவல் வந்து சேரும்.
அங்கு உள்ளவர் பெயர் மணிமுத்து போன்- 0422 2446633.
இதற்குப்பின் உறுப்பினர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்
தார். சிலர் குறைகளையும், சிலர் மிகைப்படுத்தியும்
கூறினார்கள். முக்கியமாக 3 வருடங்களுக்குமேல் பொதுக்
குழு கூட்ட வில்லையென்றும், வரவு செலவுகளைக் காட்ட
வில்லையென்றும், நிர்வாகக் கமிட்டி நபர்களை மாற்ற
வில்லையென்றும், கூறினார்கள். சங்கம் சிறப்பாக செயல்
பட்டால் பத்திரிக்கைக் கார ர்கள் நம்மைத்தேடி வருவார்கள்
அனால் இன்று கூட எந்தப் பத்திரிக்கையாளரும் வரவில்லை
என்று கூறினார்கள்.
திரு.சண்முகசுந்தரம் IFS அவர்கள் திருவண்ணாமலையிலி
ருந்து 9/2008 மாதம் வந்து இந்த சங்கத்தில் பேசியபோது இதே
தலைவருக்குச் சில கேள்விகள் விடுத்திருந்தார் அதை
நான் 8-9-2008 ல் எனது வலைப்பதிவில் crop-kuppu.blogspot.com
எழுதியதை தற்போது நினைவு கூருகிறேன்.
1. இந்த சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் இல்லை என்ன
நடவடிக்ககை எடுக்கப்பட்டது?
2. இதுவரை சங்கத்திற்கு நிதி ஒதுக்கப் படவில்லை என்ன
நடவடிக்கை எடுக்கப் பட்டது?
3. வங்கிகளுக்கு நிதி உதவி கேட்டு எந்த பிராஜக்ட் அனுப்ப
வில்லை ஏன்?
4. வங்கிகளிடம் கடன் பெறுவது திருப்பிக் கட்டுவது குறித்த
பிராஜக்ட்டுகள் எங்கே?
5. தொழில் நுட்ப திறமையாளர்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்
பட்டுள்ளதா?
6. கூட்டம் வனத்துறை அலுவகத்தில் நடத்தப்படுவதை
தவிர்த்திருகலாமே ஏன்?
7. சங்கத்திற்கு மத்திய நர்சரி ஏன் ஏற்படுத்தவில்லை?
8. விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு மார்கட் வசதி
ஏன் ஏற்படுத்தவில்லை?
9. சங்கம் மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நாற்றுக்
கள் ஏன் அளிக்கப் படவில்லை.
10. எத்தனை பிராஜக்டுகள் அனுப்ப ப்பட்டுள்ளன?
11. சங்கம் வனத்துறைக்கு என்ன செய்கிறது?
12. சங்கத்திற் கென்று வெப்சைட் தனியாக ஏன் ஏற்படுத்த
வில்லை?
13. கலைக்டரிடம் சங்கம் பற்றி செயல் பாடு ஏன் தெறிவிக்க
வில்லை? விவசாயிகள் குறை தீர்க்கும் மாதாந்திர கூட்டத்தில்
ஏன் கலந்து கொள்ள வில்லை?
14. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை ஏன் வழங்கப்
படவில்லை?
15. சங்கத்திற்கென்று கம்யூட்டர், புரொஜகடர் ஏன் வாங்கவில்லை?
மேற்கூறிய கேள்விகளுக்கு பதில் கூற இயலாது. இவை
ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும். இந்த வலைப்
பதிவை பார்ப்பவர்கள் உறுப்பினர்கள் தங்கள் கருத்தை
பின்னூட்டத்தில் தெறிவிக்கலாம். (தொடரும்)
என்று எழுதியிருந்தேன் இதில் எதுவும் நிறைவேற்ற
வில்லை. ஆனால் இன்று ஒரு வெப்சைட் தொடங்க
பணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். (தொடரும்)