Friday, November 29, 2013

தேசிய அளவிலான மரவிதை விஞ்ஞானமும் மரவளர்ப்புக்கலை கருத்தரங்கு.

For past two days (28th &29th) the Coimbatore IFGTB conducted NATIONAL WORKSHOP ON TREE SEED 
SCIENCE AND SILVICULTURE function. More than 100 participant from all states of India involved in this function. The Director N.KRISHNA KUMAR I.F.S. and his staff arranged food and shelter, conducted the workshop in a good manner and every body appreciated the good work done by them.

Here enclosing the speech of  S.K.SHANMUGHASUNDARA, I.F.S. (Retd. CCF) to day evening about
'Implications of seed bill on forestry seeds in India.'


----------------------------------------------------(தொடரும்)

Thursday, November 28, 2013

.IFGTB ல் படக்காட்சி திறப்பு விழா.

இன்று 28-11-2013 அன்று கோவை  .'IFGTB'     ல் மரவிதை விஞ்ஞானமும் மரவளர்ப்புக்கலை பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கு காலையில் தொடங்கிற்று. அப்போது தேனீர் இடைவைளைக்குப் பின் படக்காட்சி திறப்பு விழாவும் நடை பெற்றது  அதன் புகைப்படங்கள் சில பார்வைக்கு.





 மத்தியில் Dr.C..புவனேஸ்வரன்.



இடது பக்கம் Dr..ஆர்.அனந்தலச்சுமி.
இடது பக்கம் Dr..B.குருதேவ்சிங்.
வலது பக்கம் இயக்குனர் என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ்.



வலது பக்கம் டி.பி. ரகுநாத் ஐ.எப்.எஸ்.
-------------------------------------------------(தொடரும்)

Tuesday, November 26, 2013

லாபம் தரும் வெள்ளாடு விற்பனை.




 
வெள்ளாடு.
லாபம் தரும் வெள்ளாடு விற்பனை.

விவசாயிகளுக்கு அதிகம் வருவாய் ஈட்டித்தரும், கால்நடைகளில் வெள்ளாடும் ஒன்று. குறைந்த பராமரிப்பில், அதிக லாபம் ஈட்டடித்தரும் வெள்ளாடுகளை, வளர்ப்தற்க்கான பயிற்சி முகாம் ,கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கிறது.

வெள்ளாடு வளரர்ப்பு, அதிகளவில் வருவாய் ஈட்டித் தரக்ககூடிய ஒன்று. ஒரு வெள்ளாடு ஐந்து மாதங்களில் இரண்டுக்கு மேற்பட்ட, குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. தோல், தலை, குடல் என ஆட்டின் அனைத்து உறுப்புகளும், இறைச்சிக் கடைகளுக்கு தேவைப்படுவதால், வெள்ளாடு அதிக அளவில் விற்கப்படும் கால்நடையாகக் கருதப்படுகிறது.

அதிக விலைவைத்து விற்கப்படும் வெள்ளாடுகள், விவசயிகளிடம் இருந்து குறைந்த வில்லைக்கே வாங்கப்படுகின்றன. இதைக் தடுக்கவும், விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ,விவசாயிகளுக்கான ஒருமாத கால பயிற்சி முகாம் நடத்துப்படுகிறது.

பயிற்சிமைய உதவி பேராசிரியர் சிவக்குமாரிடம் கேட்ட போது. ‘வெள்ளாடுகளை வளர்க்கும் விதம், தீவனம், தடுப்பூசி, விற்பனை வழிமுறைகள் குறித்து, பயிற்ற்சி அளிக்கப்படுகிறது.  ஆரோக்கியமாக, அதிகளவு தீவனம் போட்டு, வளர்க்கப்படும் வெள்ளாடுகளின் விலை மதிப்பு அறியாமல், விவசாயிகள் இடைத்தரகர்களை நம்பி, குறைந்த விலைக்கு விற்று ஏமாற்றம் அடைகின்றனர்.

ஒரு ஆட்டின் மொத்த எடையில், பாதி எடையளவு, சதைப்பகுதி, இதன் விலையை நிர்ணயித்து விற்றால் மட்டுமே, விவசாயிகள் லாபம் பெற முடியும். இதற்கு 1,000 ரூபாய் பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு, 0422 2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம்என்றார்.

நன்றி தினமலர் நாள் 26-11-2013.

--------------------------------------------(தொடரும்)