Tuesday, November 26, 2013

லாபம் தரும் வெள்ளாடு விற்பனை.




 
வெள்ளாடு.
லாபம் தரும் வெள்ளாடு விற்பனை.

விவசாயிகளுக்கு அதிகம் வருவாய் ஈட்டித்தரும், கால்நடைகளில் வெள்ளாடும் ஒன்று. குறைந்த பராமரிப்பில், அதிக லாபம் ஈட்டடித்தரும் வெள்ளாடுகளை, வளர்ப்தற்க்கான பயிற்சி முகாம் ,கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கிறது.

வெள்ளாடு வளரர்ப்பு, அதிகளவில் வருவாய் ஈட்டித் தரக்ககூடிய ஒன்று. ஒரு வெள்ளாடு ஐந்து மாதங்களில் இரண்டுக்கு மேற்பட்ட, குட்டிகளை ஈனும் திறன் கொண்டவை. தோல், தலை, குடல் என ஆட்டின் அனைத்து உறுப்புகளும், இறைச்சிக் கடைகளுக்கு தேவைப்படுவதால், வெள்ளாடு அதிக அளவில் விற்கப்படும் கால்நடையாகக் கருதப்படுகிறது.

அதிக விலைவைத்து விற்கப்படும் வெள்ளாடுகள், விவசயிகளிடம் இருந்து குறைந்த வில்லைக்கே வாங்கப்படுகின்றன. இதைக் தடுக்கவும், விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சரவணம்பட்டியில் உள்ள, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ,விவசாயிகளுக்கான ஒருமாத கால பயிற்சி முகாம் நடத்துப்படுகிறது.

பயிற்சிமைய உதவி பேராசிரியர் சிவக்குமாரிடம் கேட்ட போது. ‘வெள்ளாடுகளை வளர்க்கும் விதம், தீவனம், தடுப்பூசி, விற்பனை வழிமுறைகள் குறித்து, பயிற்ற்சி அளிக்கப்படுகிறது.  ஆரோக்கியமாக, அதிகளவு தீவனம் போட்டு, வளர்க்கப்படும் வெள்ளாடுகளின் விலை மதிப்பு அறியாமல், விவசாயிகள் இடைத்தரகர்களை நம்பி, குறைந்த விலைக்கு விற்று ஏமாற்றம் அடைகின்றனர்.

ஒரு ஆட்டின் மொத்த எடையில், பாதி எடையளவு, சதைப்பகுதி, இதன் விலையை நிர்ணயித்து விற்றால் மட்டுமே, விவசாயிகள் லாபம் பெற முடியும். இதற்கு 1,000 ரூபாய் பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு, 0422 2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம்என்றார்.

நன்றி தினமலர் நாள் 26-11-2013.

--------------------------------------------(தொடரும்)

No comments: