தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில், தேனீக்கள் வளர்ப்பு குறித்து
பயிற்சியளிக்கப்படுகிறது. வரும் 7 ம் தேதி (7-10-2013) நடக்கும் முகாமில், தேனி இனங்களைக் கண்டறிதல்,
பெட்டிகளில் தேனீக்கள் வளர்ப்பு முறை மற்றும் நிர்வாகம், உணவு தரும் பயிர், மகரந்தச்
சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களிம் விபரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின்
இயற்கை எதிரிகள் மற்றும், நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடக்கும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்கள்
வழங்கப்படும். விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பல்கலை, கோவை
641003 என்ற முகவரியிலும், 0422 6611214 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.
----------------------------------------------------------( தொடரும்.)
----------------------------------------------------------( தொடரும்.)
No comments:
Post a Comment