வேலைவாய்ப்பு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு
அவனாசிலிங்கம் ஜன் சிக்சன் சன்ஸ்தானில் வேலை வாய்ப்புப் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 24 ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.இதில் , ஐந்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மோட்டார் வயிண்டிங், பிளம்பர், ஆட்டோ எலக்ரீசியன்கள் பயிற்சியும், எட்டாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு, டூ வீலர் பழது பார்த்தல், நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் மெசினிஸ்ட் டர்னல், பிட்டர், ரெப்ரிஷிரேட்டர் மற்றும் ஏர்கண்டிசனர் பழுது பார்த்தல் பயிற்சிகள் வளங்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு, சி.என்.சி. லேத் ஆப்ரேட்டர், எலக்ட்ரீசியன் பயிற்சியும் தமிழ் எழுத படிக்கத் தெறிந்த பெண்களுக்கு தையல் கலை, எம்ராய்டரி, மெசின் எம்ராய்டரி, ஆரி எம்ராய்டரி, பேசன் டிசைனில் பயிற்சியும், எட்டாம் வகுப்பு படித்த பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சியும் அளிப்பப்படுகிறது. பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் படித்த பெண்களுக்கு, டெண்டல் நர்சிங்அசிஸ்டண்ட் நர்சிங், அசிஸ்டண்ட் ஆப்பரேசன் தியேட்டர் அசிஸ்டெண்ட் பயிற்சி அளக்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மொபைல்போன் ரிப்பேரிங், கம்ப்யூட்டர் ஆப்ளிகேசன், டெஸ்க் டாப் பப்பளிசிங், போட்டோசாப் பயிற்சியும் வழங்கப்பட்டுகிறது. விண்ணப்ங்கள், வெள்ளைத்தாளில் பெயர், கல்வித் தகுதி, முகவரி மற்றும் பிற செய்திகள் இருப்பின் குறிப்பிட்டு, 5 ரூபாய்க்கான தபால் தலை ஒட்டிய சுய முகவரிய்யிட்ட இரு உறைகள் இணைத்து, இயக்குனர், அவினாசிலிங்கம் ஜன் சிக்சன் சனஸ்தான், அழகேசன் ரோடு, கோவை 43 என்ற முகவரிக்கு, வரும் 24 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 0422 2448858 என்ற எண்ணில் , தொடர்பு கொள்ளலாம்.
நன்றி தினமலர் நாள் 21-04-2015.
No comments:
Post a Comment