Saturday, March 28, 2015

பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி முகாம்.



பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி முகாம்

அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், ஏப்., முதல் பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம் நடக்கிறது, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின்  மூலம், அனைத்து மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கல்லூரிகளில் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் செயல் படுத்துப் பட்டு வருகிறது. இத்திட்டம், கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், 2010  முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம், கிராம்ப்புரங்களில்  பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள, தொழில்நுட்பக் கல்வி பெற முடியாத பெண்களுக்கு, இலவசமாக தொழில் நுட்பப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், விவசாயம் சார்ந்த சேவைப் பணிகளும் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

அவ்வகையில், அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஏப்., மாதம் முதல் மெஷின் எம்ப்ராய்டரி, ஆரி ஒர்க் மற்றும்  அழகுக் கலைப் பயிற்சி ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது.

பி.ஆர்.எஸ்,, கவலர் பயிற்சி பள்ளி விரிவாக்க மையம், வடவள்ளி விரிவாக்க மையம், கரும்புக்கடை, பச்சாபாளையம் ஆகிய பகுதிகளில் தையல் கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சியில் எழத, படிக்கத் தெரிந்த பெண்கள் சேர்ந்து கொள்ளலாம்.
பயிற்சியின் முடிவில் மத்திய அரசின்  சான்றிதழ வழங்கப்படும். 

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியை நேரில் அணுகலாம். மேலும் 99440 28545, 99523 44814 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கல்லூரி முதல்வர் கவுசிய ஜெபீன் தெரிவித்தார்.

நன்றி தினமலர் நாள் 28-3-2015.

No comments: