மசாலா பொடிகள், ஊறகாய் தயாரிக்க 2 நாள் பயிற்சி.
மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்க, வேளாண் பல்கலையில் இரு நாள் பயிற்சி வரும், 25 ல் துவங்குகிறது.
தொழில் துவங்க, ஆர்வம் உள்ளவர்களுக்கு, கோவை, வேளாண் பல்கலையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், இந்த மாதத்திற்கான பயிற்சியாக, 'மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி' வரும், 25 ல் துவங்குகிறது. மசாலா பொடிகள், தயார் நிலை பேஸ்ட், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்திரிக்காய் மற்றும் வெங்காய ஊறுகாய் தயாரிக்க பயிற்சி தரப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் 1500 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நேரில் வந்து பெயர் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சி கட்டணத்தை ' பேராசிரியர் மற்றும் தலைவர், ஆறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை' என்ற பெரில் 'டிடி' எடுத்து வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராச்சி நிலையம், வேளாண் பல்கலை, கோவை-3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422-6611340, 6611268 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி தினமலர் தேதி; 17-03-2015.
-----------------------------------------------------------------(தொடரும்.)
1 comment:
தகவலுக்கு நன்றி ஐயா...
Post a Comment