வேளாண் தொழில்நுட்பம் அறிய
உழவர் உறுதுணை மையம் திறப்பு.
வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் எளிதில் பெற, பல்கலை வளாகத்தில், 'உழவர் உறுதுணை மையம்' அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை விவாக்கக்கல்வி இயக்கத்தின்,, ஒரு அங்கமாக உழவர் உறுதுணை மையம் துவக்கப்பட்டுள்ளது. இம்மையம் ஒற்றைச் சாளர முறையில், வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களை உழவர்கள் பெற, வழிவகை செப்பப்பட்டுள்ளது.
மண மரிசோதனை ஆய்வகம், பூச்சி மற்றம் நோய் பரிசோதனை ஆய்வகம், உழவர்கள் - விஞ்ஞானிகள் கலந்த்துரையாடல், வேளாண் இடு பொருள் விற்பனை பிரிவு, தொழில்நுட்ப கருத்துக்காட்சி உள்ளிட்ட முக்கிய வேளாண் சார்ந்த சேவைகள், விவசாயிகளுக்காக செயல்பட உள்ளது. இம்மையத்தை விவசாயிகள் அணுகி, தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
மண் பரிசோதன் ஆய்வக்கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கார அமிலநிலை, உழவர் நிலை, மண்ணின் கட்டமைப்பு, தழை, மணி மற்றும் சாம்பல் சத்து பற்றி அறிய ஒரு மண் மாதிரிக்கு கட்டணமாக, 100 ரூபாயும், அங்க்கரிம்ம் அறிய, 75 ரூபாயும், நுண்ணைட்டங்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு பற்றி அறிய, 200 ரூபாய் கட்டணமும் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விபரங்கள் அறிய, உழவர் உறுதுணை மையம், 0422 - 6611219 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி தினமலர் நாள் =08-03-2015.
---------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment