வேளாண் இன்ஜி., கல்லூரி |
சாக்லேட்
தயாரித்தல் பயிற்சி, தமிழ் நாடு வேளாண் பல்கலையில், வரும் 6,7 தேதிகளில்
நடக்கிறது.
வேளாண்
பல்கலை அறிக்கை, கொக்கோ மிட்டாய், பழமிட்டாய், பருப்பு மிட்டாய், தேன் மிட்டாய், சர்கரை
மிட்டாய் வகைகள் தயாரிக்கும் முறை குறித்து கற்றுத்தரப்படும்.
பயிற்சியில்
பங்கேற்க விரும்புவோர், ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நேரில் வந்து பெயரை முன்பதிவு செய்து கொள்ள முடியாதவர்கள், பயிற்சிக் கட்டணத் தொகையை
‘டிடி’ மூலம், முதன்மையர், வேளாண் இன்ஜி., கல்லூரி என்ற பெயரில், கோவையிலுள்ள ஸ்டேட்
பேங் ஆப் இந்தியாவில், பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை
பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ் நாடு வேளாண் பல்கலை, கோவை-641003 என்ற முகவரிக்கு
அனுப்ப வேண்டும். பதிவு செய்து கொள்ள வரும் நவ., 6ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு,
0422 6611340, 6611268 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment