Sunday, November 11, 2012

கோவையில் இலவச வேவைவாய்ப்பு பயிற்சிகள்.





கோவையில் இலவச வேவைவாய்ப்பு பயிற்சிகள்.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆண், பெண்களுகளுக்கு, கோவையில், இலவச  வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், கோவையில் செயல்பட்டு வருகிறது அவினாசிலிங்கம் ஜன சிக்க்ஷன் சன்ஸ்தான். வேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக இந்நிறுவனத்தின், அளிக்கப்படுகின்றன, இதற்கான விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆண்களுக்கு- பிளம்பர், ஆட்டோ எலக்ட்ரீசியன், மோட்டார் வைண்டிங், பெண்களுக்கு- தையல் கலை , எம்பிராய்டரி, பேஷன் டிசைனிங், ஆரிஎம்பிராய்டரி, மெஷின் எம்பிராய்டரி.

எட்டாம் வகுப்பு வரை படித்த ஆண்களுக்கு, மெஷினிஸ்ட், பிட்டர் டர்னர், ரெப்ரிஜிரேட்டர் மற்றும்  ஏ.சி., பழுது பார்த்தல், , மொபைல்போன் சர்வீஸ் (இரு பாலருக்கும்), பெண்கள்-அழகுக்கலை, பேசியல். பத்தாம் வகுப்பு வரை படித்த ஆண்கள் – எலக்டிரீசியன், சி.என்.சி, லேத் ஆப்பரேட்டர்.  பிளஸ் 2 வரை படித்த ஆண்களுக்கு, டூல் மற்றும் டை தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. வரும் 23ந் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான், அழகேசம் ரோடு, கோவை-641043 என்ற முகவரியிலும் 0422-244 8858 என்ற  தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கோவை அவினாசிலிங்கம் ஜன் சிக்‌ஷன் சன்ஸ்தான் இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.’
-------------------------------------------------------------------------------------(தொடரும்)

No comments: