Tuesday, December 11, 2012

நெல்லிக்காய் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி.



TNAU-CBE-3


நெல்லிக்காய் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ‘மதிப்பூட்டப்பட்ட நெல்லிக்காய் பொருட்கள் தயாரிப்பு’ குறித்த பயிற்சி இரண்டு நாட்கள் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை-

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வரும் 12, 13 ம் தேதிகளில் வழங்கப்படும் பயிற்சியில், நெல்லிக் கலவை பானங்கள், சர்கரைப்பாகு, கேண்டி மிட்டாய் மற்றும் துருவல், தயாரித்த பொருட்களை சுகாதார முறையில் அடைத்தல், தொழில் துவங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள், பொருட்களை விற்பனை செய்தல், தொழில் துவங்க வங்கி கடன் வசதி பெறுதல் போன்ற தொழில் சம்பத்திப்பட்ட விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
.,
இத்தொழில் நுட்பத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள், ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரை பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சிக் கட்டணத் தொகையை ‘டிடி’ மூலம் முதன்மை ’ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்’ பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்பல்கலை, கோவை-641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பதிவு செய்து கொள்ள வரும் 12 ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களுக்கு, 0422 6611340,  6611268 என்ற தொலிபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்காய்கள்.


-----------------------------------------------------------------------------------(தொடரும்)

1 comment:

வே.நடனசபாபதி said...

தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம்(http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_8.html) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.