ஊறுகாய் தயாரிக்க
ஆசையா?
வேளாண் பல்கலையில்
பயிற்சி.
வேளாண் பல்கலை
சார்பில், சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஊறுகாய்
தயாரிக்கும் பயிற்சி நடக்க உள்ளது. வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறைக்கை; வேளாண் பல்கலையில் மசாலாப்பொடிகள் மற்றும் ஊறுகாய்கள்
தயாரிக்கும் பயிற்சி டி., 26, 27 ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் மசாலா பொடிகள்,
தயார் நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்ப்பூ ஊறுகாய் பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய்
ஊறுகாய் மற்றும் வெங்காய ஊறுகாய் தயாரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்ட உள்ளன. இதில் ஆர்வமுள்ளவர்கள்
பங்கேற்கலாம். பயிற்சி கட்டணமாக ரூ.1000 செலுத்தி
பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நேரில் வர இயலாதவர்கள்
பயிற்சிக் கட்டணத் தொகையை வரையோலை மூலம் பேராசிரியர் மற்றும் தலைவர் அறுவடை பின்சார்
தொழில் நுட்ப மையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், என்ற பெயரில் கோவையில் உள்ள பாரத
ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து பேராசிரியர், மற்றும் தலைவர், அறுவடை பின்சார்
தொழில் நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்துஊர்-641 003 என்ற முகவரிக்கு, டிசம்பர் 24ம் தேதிக்குள்
பதிவு செய்ய வேண்டும்.
நன்றி- தினமலர்
நாள் 20-12-2013.
--------------------------------------------------------------------(தொடரும்)