Monday, February 2, 2009

பண்ணைச் சுற்றுலா.


கடந்த 27-1-2009 அன்று கோவை வனவிரிவாக்க மையமும், கோவைமாவட்ட மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்கமும் இணைந்து ஒரு பண்ணைச் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள். விவசாயிகள் சுமார் 25 பேர் தனி வாகனத்தில் கோவை-காந்திபுரத்திலிருந்து காலை 0900 மணிக்குப் புரப் பட்டோம். நானும் தான். சின்னியம்பாளையத்திலிருந்து இருகூர் சாலை வழியாக முதலில் அத்தப்பகவுண்டன் புதூரிலுள்ள கனக்கன் தோட்டம் சென்றோம். அந்தப் பண்ணையின் உரிமையாளர் திரு ஆர்.சுப்பையன் மற்றும் அவரது மகன் குழந்தைவேலு B.Sc, எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவருக்கு அங்கு 20 ஏக்கர் நிலம் தண்ணீர் வசதியுடன் உள்ளது. அவரது பெரிய களத்தில் பச்சைப் பசேல் என்று அரப்பு இலை காயவைத்தால் போன்று இலைகள் காய்ந்து கொண்டிருந்தது. பண்ணையார் அதைப்பற்றிக் கூறினார். அவை குதிரை மசால் செடியைச் சிறு துண்டுகளாக வெட்டிக் காயப் போட்டிருப்பதாகச் சொன்னார். பின் அந்த செடி வெட்டும் மோட்டாரால் இயங்கும் சக்கரம் போன்ற இயந்திரத்தைக் காண்பித்து விளக்கினார். வெட்டிய இலைகளை எப்படி காய வைத்து பேக்கிங் செய்வது என்ற இயந்திரத்தையும் காண்பித்தார். பின் அந்த மூட்டைகளை வெவ்வேறு மாநிலங்களுக்கு -விலை இவரே நிர்ணையம் செய்து - அனுப்புவது பற்றிக் கூறினார். பின் அஸ்சாமிலிருந்து வந்த பெண்களும், ஆண்களும் தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு மணிக்கணக்குத்தான் கூலி கொடுக்கிரார். ஒரு மணிக்குப் பத்து ரூபாய். தேங்காய் மட்டையுடன் ஒரு கட்டிங் மெசின் மூலம் எழிதில் இயக்கி வெட்டி இரண்டாகப் போடுகிறார்கள். பின் சிறிது காய்த பின் எழிதாக கொப்பறைத் தேங்காய் எடுத்து அதற்கென அமைக்கப்பட்ட வெண் கூடாரங்களில் காயவைத்து எண்ணை எடுக்க அனுப்புகிறார்கள். பின் தென்னை மரங்களில் இழநீர் அதிகம் பிடிக்க தென்னை மரத்தைச் சுற்றி 5 அடி இடை வெளி விட்டு 4 குழிகள் தோண்டி அதில் மண்புழு உரம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சியுள்ளார். நன்றாகக் காய் பிடித்துள்ளது. பின் தென்னை மரம் ஏறுவதற்கு அவரே ஏணிகள் துண்டு துண்டுகளாக இணைத்து 50 அடி உயர்ம் வரை ஏறி தேங்காய் எழிதில் போட வடிவமைத்துள்ளார். பின் எல்லோரையும் அமரவைத்துத் தேநீர் கொடுத்து அவரது தொழில் நுட்பங்களை விவரித்துச் சொன்னார். கீரை வகைகளை விளைவித்து நல்ல லாபம் எடுக்கலாம் என்றார். இவர் விளைவிக்கும் எந்தப் பொருளுக்கும் இடைத் தரகர் கிடையாது. இவரே நேரடி விற்பனை செய்கிறார். பின் இனிதே 12.15 மணிக்கு விடைபற்றோம். அவரது தொல்பேசி எண்-0422-2627072 அலைபேசி எண்-0936-3228039


அடுத்து சின்னக் குயிலி செல்லும் சாலையில் திரு. தாமோதரன் பாலேக்கர் முறைப்படி விவசாயம் செய்யும் சிறு பண்ணையைப் பார்வையிட்டோம். அவருக்கு அங்கு நாலு ஏக்கர் நிலம் உள்ளது. கிணறு தண்ணீர் வசதியுடன் மோட்டருடன் உள்ளது. ஒரு நாட்டு மாடும் கன்றும் வைத்துள்ளார். நாங்கள் சென்ற போது புதிதாக ஒரு வயலில் பாலேக்கர் முறைப்படி பயிறிட தயார் செய்து கொண்டிருந்தார். வாய்க்காலில் முழைதிதிருந்த 4 வகை செடிகளைக் காண்பித்தார். பின் தக்காளி, அவரை, ராகி, மக்காச்சோழம், துலுக்கமல்லிப்பூச் செடி பயிர்கள் வளர்ந்திருப்பதையும் அதன் கால்வாய்களில் மூடாக்காக கரும்பு சோகைகளை போட்டு அது எப்படி ஈரம் தாக்குப் பிடிக்கிறது என்பதைப் பற்றியும் அதில் எப்படி ஒவ்வொன்றாக மகசூல் கிடைக்கின்றது என்பது பற்றியும் கூறினார். பல தொழில்கள் செய்து கடன் பட்டு இறுதியாக பாலேக்கர் கூட்டத்தில் கலந்து கொண்டு அங்கு வாங்கிய புத்தகம் படி விவசாயம் செய்து கடன் அடைத்ததாகச் சொன்னார். பின் தண்ணீர் பாச்சும் போது அமுதக் கரைசலும் கலப்பது பற்றி விவறித்தார். அவரது நாட்டுமாட்டையும் கன்றையும் பார்த்தோம். பின் அங்கிருந்து விடை பெற்று பல்லடம் அருகேயுள்ள உத்தாண்டிபாளையம் 13.30 மணிக்கு அடைந்தோம்.

உத்தாண்டிபாளையத்தில் திரு.துரைசாமியின் சந்தன பண்ணைத்தோட்டம் (நாற்பது ஏக்கர்) அடைந்த போது பண்ணை வீட்டிலிருந்து அவர் குடும்பத்துடன் எங்களை அன்புடன் வரவேற்றார். சாப்பாட்டு நேரமாக இருப்பதால் முதலில் சாப்பிட்டுப் பின் பண்ணையைச் சுற்றிப் பார்க்கலாம் என்றார். முன் கூட்டியே சொல்லியிருந்த தால் எல்லோருக்கும் சைவ, அசைவ உணவு தயாராக வைத்திருந்தார்கள். ‘பப்பே’ முறையில் எல்லோரும் உணவறிந்தி பின் அமர்ந்து கலந்துறையாடி பத்தாயிரம் சந்தண மரங்களுக்கு மேல் உள்ள இரண்டாண்டு ஆன மரங்களைக் காண்பித்தார். இடையில் சப்போட்டா மரங்கள் காயுடன் காணப் பட்டன. எல்லாவற்றிக்கும் சொட்டு நீர் பாசன் முறை கையாண்டுள்ளார். வியாபாரிகள் சப்போட்டாவை கிலோ 3 ரூபாயிக்குப் பறித்துக் கொள்வதாகச் சொன்னார். பின் கொட்டகை முறையில் ஆடு வளர்பதையும் காண்பித்தார். ஜிம் செய்ய உப கிரணங்கள் அமைத்துள்ளதையும் காண்பித்தார். வேலி இரண்டு அடுக்கு முறையில் போட்டுள்ளார். எல்லாம் சுற்றிப் பார்த்துக் கழைத்து பண்ணை வீடு திரம்பி குளிர்பானம் அளித்ததை அறிந்தி துரைசாமியின் குடம்பதுதாறுடன் விடை பெற்று, நல்ல விருந்தோம்பலை அனுபவித்து 16.30 மணிக்கு மேல் அடுத்த பண்ணைக்குப் புரப்பட்டோம்.

சுல்தான் பேட்டைஅருகேயுள்ள அம்பாள் நர்சரி உரமையாளர் தோட்டத்தில் அமைந்திருந்த திறந்த வெளி பெரிய குளம் அமைத்துருந்ததைப் பார்த்தோம். ஒட்டு அத்தி, சப்போட்டா, புளி ஆகிய வயல்களைப் பார்வையிட்டோம். நர்சரியில் பல்வேறு நாற்றுக்களைப் பார்த்தோம் அதிகமாக தென்னம்பிள்ளை வகைகள் இருந்தன. மாலை ஆறு மணிக்குத் தேநீர் அருந்தி விடை பெற்று கோவை 19.00 மணிக்கு கோவை வந்தடைந்து அவரவர் வீடு சென்றோம். இந்த பண்ணைச் சுற்றுலாவில் ஒரு நல்ல அனுபவம் பெற்றோம்.


-----------------------------------------(விவசாயம் தொடரும்)

2 comments:

chinnanna said...

Dear sir,Next time Please add some photo's for us to gain some more knowledge. Thanks.

Shrinivas - Rasipuram

kuppusamy said...

நன்றி சீனிவாசன் அவர்களே. தற்பொது இணைத்துள்ளேன். ஸ்லைடு சோ வரவில்லை.