Thursday, February 19, 2009

மூலிகை தகவல் மையம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மருந்துப்பயிர்கள் வாரியம் இணைந்து மருந்துப் பயிர்கள் தொடர்பு மையம் வழியாக மருந்துப்பயர்கள் சாகுபடியாளர்களுக்கும் இதற்குத் தொடர்புள்ள நிறுவனத்தினர்களுக்கும் இடையே ஒரு பாலம் போன்று இன்று 18-02-2009 ஒரு நாள் கருத்தரங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் தொகுப்பு பின்வறுமாறு.

அண்ணா அரங்கில்வந்து அமர்ந்திருந்த விவசாயிகளையும், நிறுவனங்களிலிருந்து வந்திருந்த உறமையாளர்கள் மற்றும் அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் துறைசார்ந்த மாணவர்களையும், சிறப்புறையாற்ற வந்த திரு ராஜ்குமார் ஐ.ஏ.எஸ்., அவர்கள், டாக்டர் வடிவேல் அவர்கள் டாக்டர் திரு. பால்ராஜ், அனைவரையும் டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் வரவேற்றார். மேலும் இக்கூட்டத்தின் நோக்கம் பற்றி விவறித்தார்.

பின் திரு ராஜ்குமார் ஐ.ஏ.எஸ்., அவர்கள் சிறப்புறை யாற்றினார். இந்தியாவில் மட்டும்தான் ஆறு வித மருத்துவங்கள் நடைமுறையில் உள்ளது அவை ஆயுர் வேதம், சித்தா, யுனானி, யோகா, இயற்கை வைத்தியம் மற்றும் அலோபதி மருத்துவ முறைகள் பற்றி விவரித்தார். காடுகளில் சேகறிக்கும் மூலிகைகள் குறைந்தவுடன் மூலிகைகளை வியாபார நோக்குடன் விவசாயிகள் பயிர் செய்ய ஆரம்பித்தனர். மூலிகைகளுடன் உலோகங்களையும் சேர்த்து மருந்துகள் தயார் செய்தனர் என்றும் சில மூல்லிகைகள் பற்றியும் விளக்கினார். பின் ஒரு திருமணத்தில் விடைபெரும் போது தேங்காயிக்குப் பதிலாக பழவகை நாற்றுகள் மற்றும் மூலிகை நாற்றுகள் வைத்து விருப்பமுள்ள நாற்றை அளித்துள்ளதாகச் சொன்னார். அது ஒரு நல்ல உத்தி என்றார்.

அடுத்து இயக்குனர் டாக்டர் திரு. வடிவேல் அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி விவறித்தார். இறுதியாக டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் நன்றி கூறினார். தேனீர் இடைவேளைக்குப் பின் நிறுவனங்களிலிருந்து வந்திருந்தவர்கள் பேசினார்கள்.

முதலில் டாம்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் திரு பால்ராஜ் பேசினார். சுமார் 200 வகை மூலிகைகள் வாங்கி மருந்துகள் தயார் செய்வதாகச் சொன்னார். மூலிகைப் பொருள்கள் தேவையுள்ளத்தை டெண்டர் முறையில் இதுவரை வாங்கப்பட்டதாகவும் தற்போது மருந்துப் பயிர்கள் கூட்டுரவு சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், மற்றும் ஒருகிணைந்த சொசைட்டி மூலமாக டெண்டர் இல்லாமலேயே வாங்குகிறார்கள். அவை பச்சையாகவும் காய்ந்த தாகவும் வாங்கப்படுகிறது. பச்சையாக வாங்கப்டுவதை அன்று மாலையே கிடைக்க வேண்டுமாம். அதில் போக்குவரத்துச் செலவையும் கூட்டிக் கொள்ள வேண்டுமாம். பொருள், அளவு, தரம் விலை நிர்ணையம் செய்து சென்னையில் கிடைக்கும் படி செய்ய வேண்டுமாம்.

பின் திரு ரவிக்குமார் பேசும் போது15 வகை மூலிகைகள் அவர்கள் நிறுவனம் (நேசனல்) வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். அவர்களது அலுவலகம் ஓசூர் தெங்கனிக் கோட்டையிலும், பெங்களூரிலும் இருப்பதாகச் சொன்னார். சிறியாநங்கை, மணத்தக்காளி, துளசி, நீர்பிரம்மி, சிறுகுறிஞ்சான் போன்றவை தண்டு, வேர், பட்டை போன்று காய்ததாக நல்ல தரம் வேண்டும் என்றார். ஒப்பந்த சாகுபடியும் உண்டாம். தெங்கினிக்கோட்டையில் 85 ஏக்கர் ஆர்கானிக் முறையில் மாடல் பாம் போட்டுள்ளார்களாம்.

லச்சுமி சேவா சங்கத்திலிருந்து டாக்டர் திரு. ஹரிகிருஷ்ணா பேசுகையில் 220 வகை மூலிகைகளை டிரேடர்ஸ் மூலம் காய்ந்த தாக வாங்குகிறார்களாம். 10 குழிக்களிடம் பச்சிலையாகவும் வாங்கி 300 வித மருந்துகள் தயார் செய்கிறார்கள். நெல்லி கிலோ
ரூ.40-00க்கு எடுக்கிறார்கள். அமுக்கிராவில் தரம் இல்லையாம், தான்றிக்காய் காயவைக்கும் போது மணல் கலந்துள்ளதால் தரம் இல்லையாம்.

எஸ்.கெ.எம். சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மெடிசன்ஸ் நிறுவனத்திலிருந்து திரு.விஸ்வனாதன் எம்.எஸ்.சி. அவர்கள் பேசினார். அவரது போன்-0420-2500590, 2501238, அலை பேசி-9443310539. அவர் 300 வகை ஆயுர் வேத மருந்துப் பொருட்கள் பச்சையாகவும், காஞ்சதாகவும் வாங்கிக் கொள்கிறார்கள். ஆறு குடும்பங்கள் தேவையான பச்சை மூலிகைகளைக் கொடுக்கிறார்களாம். அவை சில நிலக்கடம்பு, நிலாவரை, கரிசாலை, கண்டங்கத்திரி, துளசி, பேய் புடல், சித்தாமுட்டி, வில்வம், கொட்டக்கரந்தை, ஈஸ்வரமூலி முதலியன. மதியம் உணவு இடைவேளை 13.30 மணிமுதல் 14.30 மணிவரை இருந்தது.

பின் மர்ந்துகூர்கன் பயிரிடுதல் பற்றி அதன் நிறுவனர் திரு.பழனிவேல் பேசினார். அதில் விவசாயிகளுக்கு ஒப்பந்த சாகுபடியில் நன்மை பற்றிக் கூறுனார். ஆத்தூர் ஏரியாவில் விவசாயிகள் நன்கு பயனடைவதாக க்கூறினார். பின் சிரஞ்சீவி ஹெர்பல்ஸ் திரு.குமரேஸ் மேலும் விளக்கமளித்தார். பின் சென்னா பற்றி திரு.ராமச்சந்திரன் எடுத்துறைத்தார்.கண் வெளிக்கிழங்கு பற்றி பயிரிடுதல், மகரந்தச்சேர்க்கை செய்தல், காயவைத்தல் பற்றி விளக்கினார்கள், கள்ளிமந்தையில் அது பிறித்தெடுக்கும் யந்திரம் பற்றி ஆய்வில் உள்ளதாகச்சொன்னார்கள். அதன் விலை ஏற்றம் சரிவு பற்றிக் கூறினார்கள். ரோஸ்மேரி செடி வளர்ப்பில் பர்கூர் ஏரியாவில் விவசாயிகளுடனும், சுயுதவிக் குழுக்களும் மயிராட நிறுவனம் இணைந்து பச்சை இலையை ரூ.13-00 க்கு வாங்கி அதில் தாமரைக்கரையில் உள்ள எண்ணெய் எடுக்கும் யந்திரம் மூலம் எடுத்து கிலோ எண்ணெய் ரூ.1500-00 விற்கிறார்கள். நாற்று ஒரு ஏக்கருக்கு 16500 தேவைப்படுமாம். ஒன்றரைக்கு ஒன்றரைஅடி இடைவெளியில் நட வேண்டுமாம். மானாவாரியாகவும், தண்ணீர் பாச்சியும் நடலாம். வருடம் 4 அறுவடை செய்யலாம். நோய் வேர் புழு, இலைஅழுகல் மட்டுமே அது மழைகாலங்களில் தானாம். அதற்கு மருந்து அடிக்கிறார்கள். விசாயிகள் நல்ல லாபம் அடைகிறார்களாம்.

அடுத்து சோத்துக்கத்தாழை பற்றி எட்டையபுரத்தில் யூனிட் வைத்துள்ள திரு.சவுந்திர்ராஜன் பேசினார் அதில் வாக்கு வாதங்கள் வந்தன. விவயிகள் பயிர் செய்து நட்டம் அடைந்த தாக. சிலர் ஏமாத்துவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. சோற்றுக்கற்றாழை மடல் வெட்டி 3 மணி நேரத்திற்குள் தொழிற்சாலைக்கு வந்தால் தான் அதிலிருந்து வேதியப் பொருட்கள் பிறித்தெடுக்க முடியுமாம். இவர் கிலோ ரூ.2-50க்கு எடுத்துக் கொள்கிறார். 200 கிலோமீட்டருக்குள் எடுக்கிறார்.

சீனித்துளசி ‘சிவியார்’ மறுபடியும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் கிலோ ரூ.20-00 விற்கிறதாம். ஒரு ஏக்கருக்கு 40,000 நாற்றுகள் தேவையாம், 3 வருடப் பயிர் வருடத்தில் மூன்று அறுவடை. ஏக்கருக்கு 3 - 3.5 டன் கிடைக்குமாம்.

பின் திரு.சேசாசாய் ஹைதராபாத் காரர் ‘பெஸ்டு என்ஜினீரிங் டெக்னாலொஜிஸ்’ மருத்துவ பயிர்களிலிருந்து எண்ணெய் எடுக்கும் யந்திரங்கள் பற்றி விளக்கம் அளித்து அதை விற்றபதாகச் சொன்னார். அவரது போன்-040-65908498 அலை பேசி. 09391057812.

இறுதியில் டாக்டர் திரு. ராஜாமணி காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்வுகளைச் சுருக்கமாகச் சொல்லி வந்த அனைவருக்கும் நன்றி கூறி கூட்டம் இனிதே முடிவுற்றது.

தேசிய மருந்து பயிர்கள் வாரியம்
மர்ந்து பயிர்கள் தொடர்பு மையம்
விருவாக்க கல்வி இயக்கம்.


nmpbfc@tnau.ac.in
போன்- 6470425, 6611365, 6611284 ஆகியன.

--------------------------------------(விவசாயம் தொடரும்.)

No comments: