Sunday, February 8, 2009

ஆறாம் தேதி சங்கமா, சங்கமமா?

எல்லாருக்கு வணக்கமுங்கோ. அது என்னுங்கோ ஆறாம் தேதி சங்கம்? அது என்ன ஆத்துலே ஓடர சங்கமுங்களா? சங்கனூர் பள்ளத்திலீங்களா? நொய்யலாற்றுலீங்களா? சாக்கடைதாங்க ஓடுது. எங்கெ சங்கமமாகிறது. அதோபாருங்கோ கருப்பு அம்பாசிடர் கார்லே வர்றாருங்கோ அவருதான் இந்த சங்கத்துத் தலைவருங்கோ. அவரு பேரு தேவராஜனுங்கோ. அவருசங்கோ காளப்பட்டீலே இருக்குதுங்கோ. இங்கே ஹோம்சென்ஸ் காலேஜுக்கு அடுத்த கேட்லே பாரஸ்டு ஆப்பீசுலே ஒட்டீட்டாருங்கோ. அங்கே முதல் மாடி ஆலுலே இன்னைக்குப் பத்துமணிக்கு மீட்டிங் ஆரம்பிக்கப் போராங்களாம். அங்கே போனா கூட்ட கொஞ்சமாத்தா இருந்துதுங்கோ. தலைவரு எல்லாத்தையும் பார்த்துவணக்கம் சொன்னாருங்கோ. அப்பொறோ எல்லாத்தையும் பார்த்து எல்லாரு வெளியே உள்ள ரண்டு ரிஜிஸ்டரிலும் விலாசமெழுதி, போன் நெம்பரு எழுதி கையெழுத்துப் போடுங்கோண்ணு சொன்னாறு. அங்கிருந்த பாரஸ்டர் புஸ்பாகரன் ‘யாருக்காவது அடுத்த வருச நாத்து என்ன எவ்வளவு வேணூண்ணு அடுத்த ரிஜிஸ்டருலே எழுதுகோனாறு.’ அவரு தேசிய அளவுலே மரநட்டதுக்காக துணைஜனாதிபதியிடம் பாராட்டப்பத்திரம் வாங்கியவரு. விவசாயிகொ வந்திட்டே இருந்தாங்கோ. அப்புறோ ஒரு பதினொரு மணிசுமாருக்கு சாமி பாட்டுப் பாடினாங்கோ. உள்ளிருந்த பேனரிலே ‘கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம். மாதாந்திர கூட்டம் நாள் 6-2-2009’ அப்படீன்னு எழுதியிருந்தது.

அதக்கப்பறோ தலைவரு பேசினாரு. எல்லாத்தையும் வரவேற்றாருங்கோ. முக்கியம திரு.உலகநாதன் ஐ.எப்.எஸ். ஐயா, திரு பாலகிருஷ்ணன், நபார்டு வங்கி ஆலோசகரு, திரு.ராஜ்டேனியல், பேராதெனியா பல்கலைக்கழகம், கண்டி ஸ்ரீலங்கா, திரு.கலியபெருமாள் ரேஜ்சரு அப்பரோ ஆழியாறு சித்தா டாக்டர் திரு.திருமலைசாமியையும் ஆலிலேநெறஞ்சிருஞ்ச விவசாயிகள் எல்லாத்தையும் வரவேற்றாரு. அப்புறோ போன மாசம் 27ந்தேதி சில பண்ணைகளுக்கு சுற்றுலா 30 பேரு போயிட்டு வந்ததே சொன்னாறு. அப்போ தாடிக்கார விவசாயி பெரியவரு ‘ஏ நீங்க மட்டும் எங்களுக்கெல்ல சொல்லாமே போநீங்கோ’ அப்படீன்ணு கேட்டாரு. அப்போ தலைவரு வனவரிவாக்கம் 22 பைருக்குத்தா வேன் கொடுத்தாங்கோ அதனாலே அளவாப் போனோ என்றாரு. தலைவரு அவரு வலது கை மற்ற வேண்டியவங்கோ சிலரும் டாட்டாசுமா வண்டிலே போனது பெரியவருக்குத் தெறியாது. பண்ணையிலே பார்த்ததெல்லா வெளக்கினாறு. இதுமாதிரி இன்னும் போகோணுண்ணு சொன்னாறு.

அப்புறோ திரு. ராஜ்டேனியல் B.Sc (விலங்கியல்) அவுரு ‘ஒருகிணைந்த பண்ணைக்கு ஏற்ற ஆடு மற்றும் இதர சிறு பிராணிகள் வளர்ப்பு முறைகள்’ பற்றி நல்ல விளக்கம கிராமத்தாருக்குப் புறியும் படி பேசினாரு. நாட்டுக் கோழி அளவா வளக்கிறதுக்கு 15 அடிக்கு 30 அடி பந்தலு போட்டு சுற்றி 4 அடி சுவருவெச்சு பத்துக் கோழிக்கு ஒரு சேவல் வீத வளக்கணு, பந்தல்லே அவரக்காசெடி உடலா, சுற்றியும் அகத்தி மரம் வெக்கலாம், வெள்ளாடு நாலு பொட்டைக்கு ஒரு கெடா வீத கொடாப்பு வச்சு வளக்கலாண்ணு விளக்கமா மதியம் 1-30 மணிவரை சொன்னாரு.

அப்புரோ திரு.பாலகிருஷ்ணன், B.Sc.,BGL, CAIIB., அவரு நபார்டு வங்கி எப்படிக் கடன் கொடுக்கிறது, யார்யாருமூலமாணு மதிய உணவு எல்லோரும் சாப்பிட்ட பிற்பாடு விளக்கினாறு. ஆனா கொஞ்சம் பேரு சாப்பிட்ட ஒடனே போயிட்டாங்கோ. சாப்பாடு இலவசந்தாங்கோ. அவுரு போனு 9344536407. சந்தேகங்கள் சொல்வாரு. சுயஉதவிக்குழுக்கள் ஆண், பெண் இரண்டு குழுவுமே இருக்கலா 10 லிருந்து 20 பேர் வரை. அதன் நடப்பு முறை, ஆவணங்கள், கடன் பெருதல், திருப்பிக் கட்டுதல், குழு முன்னேற்றம், கடன் வாங்கியவர்கள் தொழில் செய்தல், லாபம், ஒற்றுமை, விழிப்புணர்வுகள் எல்லாம் விளக்கமாகச் சொன்னார்.

அப்புரோ ஆழியாறு மூலிகை நாற்றுப் பண்ணையிலிருந்து வந்த சித்தா டாக்டர் திரு.திருமலைசாமி அவரு ‘பொடுதலை’ அப்பிடீங்கிற மூலிகை செடியின் உபயோகம் பத்தி எல்லா விபரமும் விளக்கம சொன்னாருங்கோ. அதற்கு அடுத்து கலியபெருமாள் ரேஞ்சர் ‘ஆச்சான்’
அப்படீங்கிற ஒரு கெட்டியான மரத்தைப்பற்றி எப்படி வளக்கறது அது உபயோகத்தைப் பத்தியும் சொன்னாறுங்கோ.

பிற்பாடு தீத்திபாளையம் ஸ்ரீபழனியாண்டவர் மில்ஸ் நடத்துர திரு.சரவணன் என்பவரு வேப்பங்கொட்டை கிலோ ரூ.8-00 க்கு வாங்கி சுத்தஞ்செஞ்சு வேப்பெண்ணெய்யும், புண்ணாக்கு விலைக்குக் கொடுக்கராறு. அவரு போனு 984304949, 9442149491. அதக்கப்புரோ திரு. செல்வக்குமார் புதிசா ‘அப்சா80’ அபடீங்கிற பூச்சி மருந்தோட கூட துளி சொட்டுட்டா எல்லாச்செடியிலு நல்ல ஒட்டுமுனு முருங்கத்தழையை வெச்சு காட்டுனாருங்கோ.

அதுக்கடுத்து காரமடையிலிருந்து வந்த திருமதி.வசந்தி ஞானசேகர் M.Sc. (Hort) தோட்டகலை உதவி இயக்குனர் அவுங்கோ தேசிய மூங்கில் இயக்கம் மூலமாக மூங்கில் வளக்கரதுக்கு ஒரு எக்டருக்கு ரூ.8000-00 மானியமாக குடுப்பதாகவும், அதுக்கே சொட்டு நீர் போட 20,000-00 மானியம கொடுப்பதாகவும், ஒரு ஏக்கருலே மாதிரி மூங்கில் பண்ணை அமைக்க ரூ.5000-00 கொடுக்கப்படும் என்று கோவை மாவட்ட விவசாயகளைப் பேர் கொடுக்கச் சொன்னாருங்க, அவரு போனு 9487560154 ங்கோ.

கடசியா புஸ்பாகரன் பாரஸ்டரு ஒரு ஓசனை சொன்னாருங்கோ அதாவது இந்த சங்கத்துக்கூணு ஒரு நாற்றுப்பண்ணை வேணுமினு. உடனே தலைவரு அதுக்கெல்லா சங்கத்திலே பணமில்லை என்றாரு. அப்போ பெரியநாக்கன்பாளையத்திற்கு பக்கத்திலெ உள்ள ஒருத்துரு ஒரு ஏக்கர் நிலம் 3 வருசத்துக்கு சும்மா கொடுப்பதாகச் சொன்னாரு. தலைவரு நாத்து வளத்த பணவேணுமே என்றாரு. உடனே சுற்றுலாவிலே பார்த்த திரு.சுப்பையா விவசாயி ரூ.5000-00 கொடுப்பதாச் சொன்னாரு, பின் ஒரு அம்மா இரண்டாயிரம் கொடுப்பதாச் சொன்னாங்கோ. சரி அடுத்த மீட்டங்கிலே பாத்துக்கலாண்ணு தலைவரு சொல்லிட்டாரு. அப்படி ஒரு மத்திய நாத்துப் பண்ணை அமச்சா எல்லா வசயிகளுக்கு சலீசு விலைலே நாத்துக் கொடுக்கலாமுன்னு தலைவரு சொன்னாரு, அது போக மீதி காசிருந்தா சங்கத்துக்கு சேத்துக்கலாண்ணு சொன்னாரு. புஸ்பாகரன் பாரஸ்டரு அதுக்கு ஆலோசனை கொடுப்பதாகச் சொன்னாறு. அப்பத்தா தோணுச்சு 15 கட்டளையிலே 7 வது கட்டளை நெறவேறப்போகுதூண்ணு நெனச்சேன்.

திடீருனு டாக்டர் ராஜ்மோகன் வந்தாரு அவரு அரப்பியா நாடெல்லா அடிக்கடி போவாறு. வெளிநாட்டுலே பாலைவனத்திலீங் கூட கப்பல்லே மண்ணு கொண்டு வந்து போட்டு பசுமாயான மர வச்சு வளத்தராங்கோன்னு தன் அனுபவத்த கொஞ்ச சொன்னாறு. அப்புரோ தேசிய கீதம் மாலை 6 மணிக்கு எல்லாரும் பாடி கூட்டத்தை முடிச்சாங்கோ. அடுத்த கூட்டொ 6 ந்தேதி மறந்திடாதீங்கோ மத்தியானச்சாப்பாடு உண்டுங்கோ. எல்லாத்துக்கு வணக்கமுங்கோ.

---------------------------(விவசாயம் தொடருமுங்கோ)

3 comments:

OSAI Chella said...

அட! அருமையா எழுதிட்டீங்கங்கோ! தொடர்ந்து கலக்கவும்!

kuppusamy said...

ஓ நீங்களா. நன்றீங்கோ. ஏதோ நம்மாழுங்கோ தெறிஞ்சுகிட்டூனு தானுங்கோ. தொடருமுங்கோ. நன்றி.

kuppusamy said...

ஓ நீங்களா. நன்றீங்கோ. ஏதோ நம்மாழுங்கோ தெறிஞ்சுகிட்டூனு தானுங்கோ. தொடருமுங்கோ. நன்றி.