Monday, October 12, 2015

1863, பதவிகளுக்கு டிச., 27 ல் தேர்வு.

1,863 பதவிகளுக்கு டிச., 27 ல் தேர்வு.

அரசு துறைகளில் 'குரூப்-2 ஏ' பிரிவில், 1,863 காலியிடங்களைக்கு, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த தேர்வில், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.

இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்  பாலசுப்ரமணியன் கூறியதாவது.

டி.என்.பி.எஸ். சி குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளில், 10 க்கு மேற்பட்ட துறைகளில் , 1863 காலியிடங்களுக்கு, டிசம்பர், 27 ல் தேர்வு நடக்கும்.

தேர்வு எழுத விரும்புவோர், 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே, நவ., 11 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை, நவ., 13 க்குள் செலுத்தலாம். தமிழக முழுவதும், 116 மையங்களில் தேர்வு நடக்கும்.

பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தேர்வில் பங்கேற்கலாம். தேர்வுக்கான தகுதி விவரங்களை,http://www.tnpscexams.net/  மற்றும்  http://www.tnpscexams.in/  என்ற இணையதள இணைப்புகளில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி- கோவை தினமலர் நாள் 13-10-2015.


Thursday, October 1, 2015

ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி.


ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி


ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி அக்., 7 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.

அவனாசிலிங்கம் ஜன் சிக்சன் சன்ஸ்தானில், ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர, அக., 7 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எட்டாம் வகுப்பு அல்லதுஉ அதற்கு மேல் படித்த ஆண்களுக்கு, டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட் பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி.,  அல்லது அதற்குமேல் படித்த ஆண்களுக்கு, சி.என்.சி., லேத் ஆப்ரேட்டர், டூல், டை மேக்கிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆறு மாதம் கொண்ட பயிற்சி காலத்தில் உதவித்தொகை வழங்ப்ப்படும், பயிற்சி முடித்தவுடன் வேலை வாய்ப்புக்கான ஏற்பாடு செய்து தரப்படும். வெளியூரில் வசிப்போருக்கு தொழிற்சாலையில் தங்கும் இடம் வளங்கப்படும்.

விண்ணப்பமாக வெள்ளைத் தாளில் பெயர், கல்வித் தகுதி, முகவரி மற்றும் பிறதகவல்கள் இருப்பின் அவற்றை குறிப்பிட்டு, ஐந்து ரூபாய் தபால் தலை ஒட்டிய, சுய முகவரியிட்ட இரு உறைகள் இனைத்து, 'இயக்குனர், அவினாசிலிங்கம்
ஐன்சிக்சன் சன்ஸ்தான், அவிநாசி ரோடு, கோவை-43' என்ற முகவரிக்கு, அக்., 7 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களைக்கு, 0422 2448858 என்ற போன் எண்ணிலும், www.avinashilingamjss.com  என்ற வலைதள முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்.

கோவை, தினமலர் நாள்- 30-09-2015. நன்றி.

--------------------------------------------------------------------------(தொடரும்)

Friday, August 28, 2015

கால்நடை துறையில் வேலைவாய்ப்பு.



கால்நடை துறையில் வேலைவாய்ப்பு.

1,101  காலி பணியிடம் நிரப்ப முடிவு.

கால்நடை பராமரிப்புத் துறையில்  காலியாக உள்ள கால்நடை ஆய்வாளர், கால்நட் பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் தற்போது, 725 கால்நடை பராமரிப்பு உதவியாளர், 294 கால்நடை ஆய்வாளர் பயிற்சி,  36 அலுவலக உதவியாளர், 24 கதிரியக்கர் (ரேடியோகிராபர்} உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

 மொத்தம், 1,101 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதால்,
இதற்கு, 18 முதல் 30 வயதுக்கு உடபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கால்தடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு, எட்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ண்ணப்பிக்காலம். கதிரியக்கர், ஆய்வக உடனாள், ஆய்வுக்கூட தொழில்நுட்பர், மின்னாளர் போன்ற பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பயிற்சி அனுபவமும், கட்டாயமாக தேவைப்படுகிறது. மேலும், கால்நடை ஆய்வாளர் பயிற்சி பணிக்கு விண்ணபிக்க பிளஸ் 2  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியார் மற்றும் கால்நடைப்பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் நேர்காணல் அடிப்படையிலும், மற்ற பணிகளுக்கு எழுத்து தேரவு நடத்தப்பட்டு அதிக மதிபெண் பெறுபவரகள் இனச்சுழற்சி அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்த்திலுள்ள மண்டல இணைய இயக்குனர் அலுவலகம் மற்றும் கோட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களில், 10 ரூபாய் செலுத்தி நேரிலோ, தபால் மூலமாகவோ, செப்., 15 வரை பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tn.gov.in    என்ற இணையதளத்தில் கட்டணமின்றி விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய விண்ணப்பங்களை இயக்குனர், கால்நட் பராமரிப்பு (ம)  மருத்துவ பணிகள், மத்திய அலுவலக கட்டிடம், பகுதி 2, டி.எம், எஸ். வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

நன்றி கோவை தினமலர் நாள் 28-08-2015.

Sunday, August 16, 2015

மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரிக்க பயிற்சி.






மதிப்பூட்டப்பட்ட பொருள் தயாரிக்க பயிற்சி.

தமிழ் நாடு வேளாண்பலகலையில், நெல்லிக்காயிலிருந்து மதிப்பபூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 19 ம் தேதி துவங்குகிறது.

  தொழில் துவங்க, ஆர்வம் உள்ளவர்களுக்கு, கோவை, வேளாண் பல்கலையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், இந்த மாதத்திற்கான பயிற்சியாக, நெல்லியிலிருந்து பழரச, தயார்நிலை பானம், ஜாம், அல்வா, பட்டர், கேண்டி, மிட்டாய் பொடி, துருவல் தயாரித்தல், தொழில் உரிமத்ததிற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப் படுகிறது. . ஆர்வம் உள்ளவர்கள் 1500 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் வந்து பெயர் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சி கட்டணத்தை  ' பேராசிரியர் மற்றும் தலைவர், ஆறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை'  என்ற பெரில் 'டிடி'  எடுத்து வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராச்சி நிலையம், வேளாண் பல்கலை, கோவை-3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422-66113400422-6611340, 6611268 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


நன்றி தினமலர் நாள் 16-08-2015.

Tuesday, April 21, 2015

வேலைவாய்ப்பு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு.


வேலைவாய்ப்பு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

அவனாசிலிங்கம் ஜன் சிக்சன் சன்ஸ்தானில் வேலை வாய்ப்புப் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் 24 ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.இதில் , ஐந்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மோட்டார் வயிண்டிங், பிளம்பர், ஆட்டோ எலக்ரீசியன்கள் பயிற்சியும், எட்டாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு, டூ வீலர் பழது பார்த்தல், நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் மெசினிஸ்ட் டர்னல், பிட்டர், ரெப்ரிஷிரேட்டர் மற்றும் ஏர்கண்டிசனர் பழுது பார்த்தல் பயிற்சிகள் வளங்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு, சி.என்.சி. லேத் ஆப்ரேட்டர், எலக்ட்ரீசியன் பயிற்சியும் தமிழ் எழுத படிக்கத் தெறிந்த பெண்களுக்கு தையல் கலை, எம்ராய்டரி, மெசின் எம்ராய்டரி, ஆரி எம்ராய்டரி, பேசன் டிசைனில் பயிற்சியும், எட்டாம் வகுப்பு படித்த பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சியும் அளிப்பப்படுகிறது. பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் படித்த பெண்களுக்கு, டெண்டல் நர்சிங்அசிஸ்டண்ட் நர்சிங், அசிஸ்டண்ட் ஆப்பரேசன் தியேட்டர் அசிஸ்டெண்ட் பயிற்சி அளக்கப்படுகிறது.  ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மொபைல்போன் ரிப்பேரிங், கம்ப்யூட்டர் ஆப்ளிகேசன், டெஸ்க் டாப் பப்பளிசிங், போட்டோசாப் பயிற்சியும் வழங்கப்பட்டுகிறது. விண்ணப்ங்கள், வெள்ளைத்தாளில்  பெயர், கல்வித் தகுதி, முகவரி மற்றும் பிற செய்திகள் இருப்பின் குறிப்பிட்டு, 5 ரூபாய்க்கான தபால்  தலை ஒட்டிய சுய  முகவரிய்யிட்ட இரு உறைகள் இணைத்து, இயக்குனர், அவினாசிலிங்கம் ஜன் சிக்சன் சனஸ்தான், அழகேசன் ரோடு, கோவை 43 என்ற முகவரிக்கு, வரும் 24 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.  விபரங்களுக்கு, 0422 2448858 என்ற எண்ணில் , தொடர்பு கொள்ளலாம்.

நன்றி தினமலர் நாள் 21-04-2015.
 

Saturday, March 28, 2015

பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி முகாம்.



பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி முகாம்

அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், ஏப்., முதல் பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி முகாம் நடக்கிறது, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின்  மூலம், அனைத்து மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கல்லூரிகளில் சமுதாய மேம்பாட்டுத் திட்டம் செயல் படுத்துப் பட்டு வருகிறது. இத்திட்டம், கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், 2010  முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம், கிராம்ப்புரங்களில்  பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள, தொழில்நுட்பக் கல்வி பெற முடியாத பெண்களுக்கு, இலவசமாக தொழில் நுட்பப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், விவசாயம் சார்ந்த சேவைப் பணிகளும் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

அவ்வகையில், அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஏப்., மாதம் முதல் மெஷின் எம்ப்ராய்டரி, ஆரி ஒர்க் மற்றும்  அழகுக் கலைப் பயிற்சி ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது.

பி.ஆர்.எஸ்,, கவலர் பயிற்சி பள்ளி விரிவாக்க மையம், வடவள்ளி விரிவாக்க மையம், கரும்புக்கடை, பச்சாபாளையம் ஆகிய பகுதிகளில் தையல் கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த இலவச பயிற்சியில் எழத, படிக்கத் தெரிந்த பெண்கள் சேர்ந்து கொள்ளலாம்.
பயிற்சியின் முடிவில் மத்திய அரசின்  சான்றிதழ வழங்கப்படும். 

பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியை நேரில் அணுகலாம். மேலும் 99440 28545, 99523 44814 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கல்லூரி முதல்வர் கவுசிய ஜெபீன் தெரிவித்தார்.

நன்றி தினமலர் நாள் 28-3-2015.

Monday, March 16, 2015

மசாலா பொடிகள், ஊறகாய் தயாரிக்க 2 நாள் பயிற்சி.



மசாலா பொடிகள், ஊறகாய் தயாரிக்க 2 நாள் பயிற்சி.

மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்க, வேளாண் பல்கலையில் இரு நாள் பயிற்சி வரும், 25 ல் துவங்குகிறது.

தொழில் துவங்க, ஆர்வம் உள்ளவர்களுக்கு, கோவை, வேளாண் பல்கலையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், இந்த மாதத்திற்கான பயிற்சியாக, 'மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி' வரும், 25 ல் துவங்குகிறது. மசாலா பொடிகள், தயார் நிலை பேஸ்ட், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்திரிக்காய் மற்றும் வெங்காய ஊறுகாய் தயாரிக்க பயிற்சி தரப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் 1500 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நேரில் வந்து பெயர் பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சி கட்டணத்தை  ' பேராசிரியர் மற்றும் தலைவர், ஆறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை'  என்ற பெரில் 'டிடி'  எடுத்து வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராச்சி நிலையம், வேளாண் பல்கலை, கோவை-3 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 0422-6611340, 6611268 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி தினமலர் தேதி; 17-03-2015.

-----------------------------------------------------------------(தொடரும்.)

Sunday, March 8, 2015

உழவர் உறுதுணை மையம் திறப்பு.



வேளாண் தொழில்நுட்பம் அறிய 
உழவர் உறுதுணை மையம் திறப்பு.

வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் எளிதில் பெற, பல்கலை வளாகத்தில், 'உழவர் உறுதுணை மையம்'  அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலை விவாக்கக்கல்வி இயக்கத்தின்,, ஒரு அங்கமாக உழவர் உறுதுணை மையம் துவக்கப்பட்டுள்ளது. இம்மையம் ஒற்றைச் சாளர முறையில், வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களை உழவர்கள் பெற, வழிவகை செப்பப்பட்டுள்ளது.

மண மரிசோதனை ஆய்வகம், பூச்சி மற்றம் நோய் பரிசோதனை ஆய்வகம், உழவர்கள் - விஞ்ஞானிகள் கலந்த்துரையாடல், வேளாண் இடு பொருள் விற்பனை பிரிவு, தொழில்நுட்ப கருத்துக்காட்சி உள்ளிட்ட முக்கிய வேளாண் சார்ந்த சேவைகள், விவசாயிகளுக்காக செயல்பட உள்ளது. இம்மையத்தை விவசாயிகள் அணுகி, தொழில்நுட்ப ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
மண் பரிசோதன் ஆய்வக்கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கார அமிலநிலை, உழவர் நிலை, மண்ணின் கட்டமைப்பு, தழை, மணி மற்றும்  சாம்பல் சத்து பற்றி அறிய ஒரு மண் மாதிரிக்கு கட்டணமாக, 100 ரூபாயும், அங்க்கரிம்ம் அறிய, 75 ரூபாயும், நுண்ணைட்டங்களான இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு பற்றி அறிய, 200 ரூபாய் கட்டணமும் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விபரங்கள் அறிய, உழவர் உறுதுணை மையம், 0422 - 6611219 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி தினமலர் நாள் =08-03-2015.

---------------------------------------------(தொடரும்)

Thursday, February 26, 2015

இளைஞர்களைக்கு வேலை வாய்ப்பு பயிற்சி.

இளைஞர்களைக்கு வேலை வாய்ப்பு பயிற்சி.

கோவை சாயிபாபா காலனி, அண்ணமலை ரோட்டில் உள்ள 'உன்னதி' அறக்கட்டளை சார்பில், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் இடை நின்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. 

அறக்கட்டளை தலைவர் ரமேஷ்சுவாமி  கூறுகையில் கோவையில் இம்மையம் இரண்டாட்டுகளாக செயல்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில், வேலை பெறுவதற்கு படிப்பு மட்டும் போதாது.

படிப்புக்கு ஏற்ற ஆளுமைத்திறன், அணுகுமுறை மற்றும் ஆங்கில மொழித்திறன்  தேவை. வேலைவாய்ப்பை பெற என்ன தேவை என்பதை அறிந்து, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப, பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. 18 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இப்பயிற்சியில் சேரலாம். இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வைவையில்லை ' என்றார். விபரங்களுக்கு, 0422-2430822, 8903126708 என்ற எண்ணில் தொடர்பு கைள்ளலாம்.

நன்றி-தினமலர் நாள் 26-2-2015.